துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இரு கடல்களும் சங்கமிக்கும் இடம்

TWO RIVERS-SUBHANALLAH-(MUST SEE)
Below Photos show two rivers flowing in southern part near Cape Town, South Africa. These rivers flow together naturally. ALLAH (SWT) has mentioned the nature of these two rivers in Holy Quran. Taste of one river is said to be sweet whereas the taste of the other is said to be the opposite (that is bitter) but they never mix. There is nothing in between these rivers which stops them from mixing together. One of ALLAH (SWT)’s CREATIONS !

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்க செய்தான், ஆயினும் அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது அதை அவை மீறமாட்டா. (அல்குா்ஆன் 55:19,20)



சனி, 28 ஆகஸ்ட், 2010

இஃதிகாஃபும் அதன் சட்டங்களும்

இஃதிகாஃபும் அதன் சட்டங்களும்
இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

ரமலானில் இஃதிகாப்
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், அதில் வணக்கங்கள் செய்வதற்காகத்தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் (புகாரி) 813

நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.


இஃதிகாபின் ஆரம்பம்
இஃதிகாஃப் இருக்க நாடுபவர்கள், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்க செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருப்பதற்கு செல்வார்கள். (முஸ்லிம் 2007)

ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள்.

இஃதிகாபின் முடிவு
இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரிபில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம்.

ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.

இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள் அதன் முறைகளும்:
பள்ளிவாசலில் இருக்கும் போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:187)

தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது:
ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டிருக்குள் வர மாட்டார்கள். (புகாரி 2029)

தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம்.

Indian Government Totally Online

All Indian government office related links are available
Obtain:
* Birth Certificatehttp://www.india.gov.in/howdo/howdoi.php?service=1>
* Caste Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4>
* Tribe Certificate <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8>
* Domicile Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5>
* Driving Licence <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6>
* Marriage Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3>
* Death Certificate <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2>
* Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Apply for:
* PAN Card <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15>
* TAN Card <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3>
* Ration Card <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7>
* Passport <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2>
* Inclusion of name in the Electoral Rolls <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10>
* Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Register:
* Land/Property <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9>
* Vehicle <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13>
* With State Employment Exchange <http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12>
* As Employer <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17>
* Company <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19>
* IN Domain <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18>
* GOV.IN Domain <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25> * Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Check/Track:
* Waiting list status for Central Government Housing <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9>
* Status of Stolen Vehicles <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1>
* Land Records <http://www.india.gov.in/landrecords/index.php>
* Causelist of Indian Courts <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7>
* Court Judgements (JUDIS ) <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24>
* Daily Court Orders/Case Status <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21>
* Acts of Indian Parliament <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13>
* Exam Results <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16>
* Speed Post Status <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10> * Agricultural Market Prices Online <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6>
* Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Book/File/Lodge:
* Train Tickets Online <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5>
* Air Tickets Online <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4> * Income Tax Returns <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12>
* Complaint with Central Vigilance Commission (CVC) <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14> ·
Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Contribute to:
* Prime Minister's Relief Fund <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11>
* Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Others:
* Send Letters Electronically <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20>
* Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>
Recently Added Online Services
* Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691>
* Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693>
* Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694>
* Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695>
* Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697>
* Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698>
* Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699>
* Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702>
* Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700>
* Andhra Pradesh: Online Motor Driving School Information <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705>
Global Navigation
* Citizens <http://www.india.gov.in/citizen.php>
* Business (External website that opens in a new window) <http://business.gov.in/>
* Overseas <http://www.india.gov.in/overseas.php>
* Government <http://www.india.gov.in/govt.php>
* Know India <http://www.india.gov.in/knowindia.php>
* Sectors <http://www.india.gov.in/sector.php>
* Directories <http://www.india.gov.in/directories.php>
* Documents <http://www.india.gov.in/documents.php>
* Forms <http://www.india.gov.in/forms/forms.php>
* Acts <http://www.india.gov.in/govt/acts.php>
* Rules <http://www.india.gov.in/govt/rules.php>
* Schemes <http://www.india.gov.in/govt/schemes.php>
* Tenders <http://www.india.gov.in/tenders.php>
* Home <http://www.india.gov.in/default.php>
* About the Portal <http://www.india.gov.in/abouttheportal.php>
* Site Map <http://www.india.gov.in/sitemap.php>
* Link to Us <http://www.india.gov.in/linktous.php>
* Suggest to a Friend <http://www.india.gov.in/suggest/suggest.php>
* Help <http://www.india.gov.in/help.php>
* Terms of Use <http://www.india.gov.in/termscondtions.php>
* Feedback <http://www.india.gov.in/feedback.php>
* Contact Us <http://www.india.gov.in/contactus.php>
* Accessibility Statement <http://www.india.gov.in/accessibilitystatement.php>
இது என்னுடைய ஈமைலுக்கு வந்தது

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நோன்பின் சட்டங்கள்

நோன்பு
அல்லாஹ்விற்காக ஃபஜ்ரிலிருந்து மஃக்ரிப் வரை உணணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் இவைகளிலிருந்து நோன்பு நோற்கிறேன் என்ற நிய்யத்துடன் தவிர்ந்து இருப்பது நோன்பாகும்
ஆதாரம்
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவா்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் உள்ளச்சுத்தி பெற்று பயபக்தியுடையவா்களாகலாம். ( அல் குா்ஆன் القرآن183/2)
நோன்பின் வகைகள் - இருவகைப்படும். 1. ஃபா்ளு 2. சுன்னத்
ஃபா்ளான நோன்புகள்
மூன்று வகைப்படும். 1. ரமளான் மாத முழுவதும் நோன்பு நோற்பது. 2. குற்றப்பரிகார நோன்பு. 3. (நத்ர்) நோ்ச்சை நோன்பு. ரமளான் மாத நோன்பு, சுன்னத்தான நோன்புகளை மாத்திரம் பார்ப்போம். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ரமளான் நோன்பு கடமையானது.
நோன்பு கடமை
சுய சிந்தனையுள்ள, பருவ வயதை அடைந்த, முஸ்லிமான நோன்பு நோற்க சக்தியுடைய ஒவ்வொருவா் மீதும் ரமளான் பிறையை பார்த்ததிலிருந்து அல்லது ஷஃபான் முப்பது நாட்கள் பூா்த்தியானதிலிருந்து ரமளான் மாத நோன்பு கடமையாகிறது. நீதமான ஒருவா் பிறையை பார்த்து உறுதிபடுத்தினாலே அதை ஆதாரமாகக்கொண்டு நோன்பு வைக்கலாம். ஆனால் மற்ற மாதங்களின் பிறையை உறுதிப்படுத்த ஷரீஅத் சட்டப்படி இருவா் பிறையை பார்த்ததற்கான நீதமான சாட்சிகள் அவசியம்.
நோன்பின் நிய்யத்
ஃபா்ளான நோன்பு வைத்திட இரவிலேயே (நிய்யத்) மனதில் நினைத்து கொள்வது அவசியம். சுன்னத்தான நோன்பிற்கு பகலில் கூட நிய்யத் செய்து (ஃபஜ்ரிலிருந்து நோன்பை முறிப்பவைகளை செய்யாமல் இருந்தால்) நோன்பினை தொடரலாம்.
நோன்பின் ஒழுக்கங்கள்
1.2. நோன்பு வைப்பதற்காக (இரவு சாப்பிடும்) ஸஹ்ர் நேர உணவை பிற்படுத்துவதும், நோன்பு திறந்திட (இஃப்தார்) உணவை விரைவாக முடிப்பதும் நபிவழியாகும். ஸஹ்ர் உணவில் பாக்கியம் உள்ளது. எனவே ஸஹ்ர் உணவை உண்ணுங்கள். நோன்பு திறந்திட பேரித்தம் பழத்தை சப்பிடுவதின் மூலமும், அது கிடைக்காத நேரம் தண்ணீா் அருந்துவதின் மூலமும் இஃப்தார் (நோன்பு திறப்பது) சுன்னத்தாகும். 3. இஃப்தார் (நோன்பு திறக்கின்ற) நேரம் துஆ அங்கீகரிக்கப்படுகிறநேரமாக இருப்பதால், அதிகமதிகம் பிரார்த்தனை புரிவது நபி (ஸல்) அவா்கள் நமக்கு ஆா்வமூட்டிய செயலாகும். 4. அதிகமாக (சிவாக்) பல் துலக்குவது. 5. குா்ஆன் ஓதுவதில் அதிகம் ஈடுபடுவது. 6. தான தா்மங்கள் செய்வது நபி வழியாகும். 7. ஆயிரம் மாதங்களை விட சிறப்பு மிக்க லைலத்துல் கத்ர் எனும் கத்ருடைய இரவு ரமளானின் இறுதி பத்து நாட்களில் அது இருப்பதால் தொழுகை, தா்மங்கள், தெளபா, பிரார்தனை, இஃதிகஃப் போன்ற வணக்க வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்தி, மருமை வெற்றிக்கு தயாராகிக்கொள்வதும் மிக ஏற்றமான நபி வழியாகும்.
நோன்பை முறிப்பவைகள்
1. நோன்பை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே ஏதாவது சாப்பிடுவது, அல்லது 2. குடிப்பது. 3. அல்லது வாந்தி எடுப்பது. 4. அதிக இரத்தத்தை கொடுப்பது அல்லது வெளியேற்றுவது. 5. பெண்களுக்கு மாதத்தீட்டு அல்லது பிள்ளை பேறு தீட்டு ஏற்படுவது, 6. இச்சையின் காரணமாக இந்திரியம் வெளியேறுவது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்தாலும் நோன்பு முறிந்திடும். இதனை செய்தவா்கள் நோன்பினை களா (ரமளான் மாதம் முடிந்ததும் பெருநாள்களை தவிர்த்து வேறு தினங்களில் நோன்பு ) இருந்திட வேண்டும். தான் புரிந்த தவறுக்காக அல்லாஹ்விடம் (தெளபா) பாவமன்னிப்பும் கோர வேண்டும். ஆனால் 7. உடலுறவின் மூலம் நோன்பை முறித்தவராக இருந்தால் நோன்பை களா செய்வது மட்டுமல்லாது அவா், தான் செய்த தவறுக்கு குற்றப்பரிகாரமாக ஓா் அடிமையை உரிமையிடவேண்டும், கிடைக்காத பட்சத்தில் தொடா்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் முடியாத தருணத்தில் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
நோன்பில் ஆகுமானவை
1. நோன்பு இருந்தவா் மறந்தவராக சாப்பிட்டாலோ, குடித்தாலோ தொடா்ந்து நோன்பு நோற்கட்டும். ஏனெனில் மறதியை கொடுத்தது அல்லாஹ் அவரை உண்ண, குடிக்க வைத்தான்.2. உஷ்ணத்தை தணிக்க தலைவழியாகக்கூட தண்ணீா் ஊற்றிக்கொள்ளலாம். 3. கண், காதுக்கு (டிராப்ஸ்) சொட்டு மருந்து உபயோகிக்கலாம். 4. உடலுறவிற்கு செல்லாத அளவிற்கு ஆசையை அடக்குபவா் தன் மனைவியை முத்தமிடலாம். 5. குளுக்கோஸ் (சலைன்) போன்ற உணவுக்குறியதை தவிர்த்து மருந்துகளை மட்டும் ஊசி மூலம் போட்டுக்கொள்ளலாம். 6. ஆஸ்துமா போன்ற வியாதி உள்ளவா்கள் சுவாசிப்பதை இலேசு படுத்த வாய் வழியே ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். 7. அதிகமாக நீா் செலுத்தாது வாய் கொப்பளித்து, மூக்குக்கு நீா் செலுத்தி சுத்தப்படுத்தலாம். 8. உமிழ் நீா் விழுங்குவது, காற்றினால் பறந்து வரும் பொடிகள், மாவு வகைகள் (நம்மால் தவிர்க்க முடியாததால்) வாய்,மூக்கு வழியாக சென்றாலும் நோன்பு கூடிவிடும். 9. இரவில் மனைவியோடு கூடி அல்லது காலை துாக்கத்தில் ஸ்கலிதம் ஆகி குளிப்பு கடமையானவராக இருந்தால் நோன்பு முறியாது. இவா்கள் தொழுகைக்காக விரைவுபடுத்தி குளித்திடவேண்டும்
நோன்பை விட்டுவிடுவதற்கு சலுகை பெற்றவா்கள்
1.2. நோயாளிகளுக்கும், பிரயாணிகளுக்கும் ரமளானில் நேன்புவைப்பது சிரமமாக இருந்தால் பிற மாதங்களில் நோன்பினை நோற்று (அதனை களா செய்து) கொள்ளலம். 3,4. கா்ப்பிணியும், (குழந்தைக்கு பாலுட்டும் ) தாயும் ஆகிய இருபிரிவினரும் தனது கருவில் வளரும் சிசுவின் அல்லது குழந்தையின் உடல் நிலைக் கருதியோ, அல்லது தன்னுடல் நலனைப் பேணியோ நோன்பு வைக்காதிருக்க சலுகை இருப்பதால் வேறொரு மாதங்களில் அந்நோன்பினை களா செய்திடலாம். 5. ஹைல் நிஃபாஸ் எனும் மாத விடாய், பிள்ளைபேறு தொடக்குண்டான பெண்கள் நோன்புவைப்பது அவா்களுக்கு (தடையாகும்) ஹராமாகும். இவா்கள் வேறு நாட்களில் விடுபட்ட நோன்பினை களா செய்திட வேண்டும். 6,7. நோன்பு வைப்பதற்கு முடியாத வயோதிகா்கள், உடல் நிலை சுகவீனா் (உடல் நிலை சீராகுவதை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருப்பாரேயானால்) நோன்பு நோற்காமல் விடுதவற்கு சலுகை உள்ளது. இவா்கள் விடுபட்ட நோன்பின் எண்ணிக்கையை களா செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணம் காலம் செல்லச்செல்ல வயோதிகம் வாலிபமாக திரும்புவதும், நீடித்த நோய் சீராகுவதும் இல்லை.
சுன்னத்தான நோன்புகள்
ஹஜ் மாத ஒன்பதாம் நாள் அரஃபா தினம் 2. (பெரு நாளை தவிர்த்து) ஹஜ் மாத முதல் பத்து நாட்கள். 3.ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) தினம். 4,5. ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் இரு தினங்கள். 6.(ரமளான் மாதம் முடிந்து) பெருநாளை அடுத்த ஷவ்வால் மாதத்தினுள் ஆறு தினங்கள். 7. ஒவ்வொரு மாதத்திலும் பதிமூன்றாம், பதிநான்காம், பதினைந்தாம் ஆகிய மூன்று தினங்கள். 8.ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்பு நோற்பது ஆகியவை சுன்னத்தான நோன்பாகளாகும்,
நோன்புவைத்திட தடையான நாட்கள்
1,2. இரு பெருநாள்கள். 3. (யவ்முஷ்ஷக்) ஷஃபான் இறுதி தினமாகிய ரமளானுக்கு முந்திய தினத்தில் நோன்பு நோற்பதற்கு தடை செய்ய்ப்பட்டுள்ளது. 4. அய்யாமுத்தஷ்ரீக் துல்ஹஜ் 11,12,13ம் நாட்கள். என்கிலும் (நோ்ச்சை, குற்றப்பரிகாரம் ) போன்ற காரணங்களுள்ள நோன்புகளை இந்நாள்களில் நோற்கலாம். 5. வெள்ளிக்கிழமை தனித்திட்ட நாளாக நோன்பு வைப்பதற்கு தடை. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முந்திய அல்லது பிந்திய தினத்துடன் சோ்த்தாற் போல இரு தினங்களாக தொடா்ந்த வெள்ளிக் கிழமையில் நோன்பு நோற்கலாம். 6. வருட நாட்களில் தடை செய்யப்பட்ட நாட்கள் இருப்பதால் வருட முழுவதும் நோன்பு நோற்பது தடை. 7.மஃக்ரிபிற்கு பிறகு நோன்பு திறக்காது தொடா் நோன்பு நோற்பதற்கும் தடை. 8. கணவா் உடன் இருக்கும்போது அவா் உத்தரவு பெறாது பெண்கள் சுன்னத்தான நோன்பு வைத்திடுவது ஆகிய அனைத்தும் தடையாகும். அல்லாஹீ அஃலம்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!
திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும்.

எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.''நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்'' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِفَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً
''நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்'' (அல்குர்ஆன் 4 : 19)

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான்.

'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

''இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.'' (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

''பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.'' (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.

இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும்.

ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ரமலான்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்
ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அழைத்தார்கள். நூல்:அபூதாவுது,நஸயீ நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்
நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள்தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

நோன்பாளி செய்யக் கூடாதவை

எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"

என்று கூறி விடவும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்

நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185) எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை

நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

நபி வழியைப் பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்!


நபி வழியைப் பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி எஸ்.எம்.மன்சூர் on 10th March 2009
Courtesy of Co-operative offices release in Kingdom of Saudi Arabia
மூல ஆசிரியர் : மதிப்பிற்குரிய ஷேக் அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்)
தமிழில் : மௌலவி எஸ்.எம்.மன்சூர்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவன் தான் நமக்கு மார்க்கமாக இஸ்லாத்தைத் தேர்வு செய்து, அதைப் பூரணப்படுத்தித் தந்து, தனது பேரருளையும் புரிந்தவன். அடுத்து அவனுக்கு முழுமையாக அடிபணிவதன் மூலம் வீண் விரயம், புதியன பின்பற்றல், கீழ்ப்படியாமை போன்றவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி மக்களுக்கு அழைப்புவிடுத்து, எச்சரிக்கை செய்த அவனுடைய அடிமையும் திருத்தூதருமாகிய ரசூல்(ஸல்) அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. மேலும் அவர்களுடைய சந்ததியினர், தோழர்கள், அவர்களது அடிச்சுவட்டில் தீர்ப்பு நாள் வரை நடப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் அவனது அருள் கிட்டுமாக.
இந்தியாவின் உத்திரப் பிரதேச தொழில் பேட்டையான கான்பூரிலிருந்து வாராந்தரம் வெளிவரும் “இதாரத்” பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான ஒரு கட்டுரை என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அக்கட்டுரை, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இணக்கமான தன்மையையும், பித்அத் (நூதன கிரியை)களுக்கு எதிரான போக்கையும் எதிர்த்தும் விமர்சித்தும் எழுதப்பட்டு இருந்தது. அதனை எழுதியவர் இங்கு பின்பற்றப்படும் ஸலஃபி (இஸ்லாமிய வழிசென்ற முன்னோர்கள்) கோட்பாடு நபி(ஸல்)அவர்களுடைய சுன்னாவுடன் இணக்கமானதல்ல என்று குற்றச்சாட்டியுள்ளார்.
அதை எழுதியவரின் இம்முயற்சி அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்தவர் மத்தியில் பிளவைத் தோற்றுவிப்பதையும், பித்அத்கள், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், சத்தியத்திற்கு முரணான பித்அத்களையும் வழிகேடுகளையும் பரப்பும் செயலானது மிகவும் வெறுப்புக்குரிய செயலும் ஆபத்தானதும் என்பதில் ஐயமில்லை.
குறித்த கட்டுரை, சவூதி அரேபியாவினதும், அதன் ஆட்சியினரதும் இஸ்லாமிய வழிமுறை பற்றி பேசும் தொனியில் நபி(ஸல்)அவர்களது பிறந்த தின விழா பற்றி சிற்சில கருத்துக்களை முன்வைத்துள்ளது. எனவே, அது தொடர்பாக மக்களுக்குத் தெளிவு தருவது அவசியம் என்பது என் கருத்து.
அல்லாஹ்வின் உதவியுடன் நான் கூறுவதாவது: நபி(ஸல்) அவர்களுடைய அல்லது மற்றொருவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. அது மார்க்கத்தின் பெயரால் கொண்டு வரப்பட்ட ஒரு பித்அத் (நூதன செயல்) என்பதால் நிறுத்தப்படுவது அவசியமாகும்.
நபி(ஸல்) அவர்கள் அதைக் கொண்டாடவில்லை. தனக்காகவோ தனக்கு முன் வாழ்ந்து சென்ற நபிமார்களுக்காகவோ, தனது மகள்கள், மனைவியர், மற்றைய உறவினர்களுக்காகவோ பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறவில்லை. அத்துடன் நேர்வழி நடந்த கலீஃபாக்கள், நபித் தோழர்கள், அவர்களைத் தொடர்ந்தவர்கள் எவருமே பிறந்த தினங்களைக் கொண்டாடவில்லை. முந்தய நூற்றாண்டுகளில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களும் இதைக் கொண்டாடவில்லை. அவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற முன்மாதிரியை (சுன்னாவை) நன்கு அறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவிலா அன்பு கொண்டவர்கள். அவர்களது ஷரீஅத்தை இக்காலத்தில் வந்தவர்களைவிட மிகச் சரியாகப் பின்பற்றியவர்கள். எனவே பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்றமானது எனக் கண்டிருந்தால் அதை அவர்கள் நிச்சயமாகச் செய்திருப்பார்கள்.
நாம் நபி(ஸல்) அவர்களது சுன்னாவை(வழிமுறையை)ப் பின்பற்றுவதன் மூலம் பித்அத் (நூதனக்கிரியை)களைத் தவிர்த்து கொள்ளும்படி உத்திரவிடப்பட்டுள்ளோம். இந்த உத்திரவு இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்ற தன்மையிலிருந்தும் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தந்தவை போதுமானவை என்ற நிலைப்பாட்டிலிருந்தும் “அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்தவரின் அங்கீகாரம் பெற்றது” என்ற உறுதிப்பாட்டிலிருந்தும், “நபித்தோழர் சமூகத்தாலும்” அவர்கள் வழி வந்தவர்களாலும் மிகச் சரியாகப் பின்பற்றப்பட்டது என்ற நெறிமுறையிலிருந்தும் பெறப்பட்டதாகும்.
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:
“யாரேனும் ஒருவர் எம்முடைய விஷயமொன்றில் புதுமையைச் சேர்க்கின்றாரோ, அது அந்த விஷயம் சார்ந்தது அல்ல, அது நிராகரிக்கப்பட வேண்டும்.” (புகாரி, முஸ்லிம்)
“முஸ்லிம்” ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள மற்றுமோர் அறிவிப்பின்படி,
“யாரேனும் ஒருவர் நமக்கு உடன்பாடு இல்லாத செயலொன்றை செய்வாரெனில் அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக வருகின்றது.
மற்றொரு நபிமொழி,
“நீங்கள் என்னுடைய சுன்னாவை (வழிமுறையை)யும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுன்னாவையும் அனுசரித்து நடவுங்கள், அவற்றில் உறுதியாக நில்லுங்கள்”, என்று கூறுகின்றது.
மேலும் “மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப் பட்டவற்றையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். எல்லாப் புதியனவும் நூதனக் கிரியைகளே நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என ஒரு நபிமொழி அறிவிக்கப்படுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குத்பா உரைகளிலும், “மிகச் சிறந்த பேச்சு அல்லாஹ்வின் வேதத்தை(குர்ஆனை) உடையதே, மிக்க சிறந்த வழிகாட்டல் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் உடையதே, மிகவும் மோசமானவை நூதனக் கிரியைகள், நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என்று மொழிவார்கள்.
எனவே இந்த நபிமொழிகள் யாவும் நூதனக் கிரியைகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன், விழிப்புடன் இருக்கும்படியும் எம்மைப் பணிக்கின்றன. ஏனெனில் அவை எம்மை நேரிய வழியிலிருந்து வழிகேட்டின்பால் இட்டுச் செல்லக் கூடியன என்பதனாலாகும். நபி(ஸல்) அவர்கள் நூதனக் கிரியைகளின் பாரதூரத்தையும், பாதகமான விளைவுகளையும் விட்டு மக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக பல நபி மொழிகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
“மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 59:7)
மேலும் கூறுகின்றான்,
“ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினைத் தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (அல்குர்ஆன் 24:63)
இன்னும் கூறுகின்றான்,
“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது”. (அல்குர்ஆன் 33:21)
மீண்டும் கூறுகின்றான்,
“இன்னும் முஹாஜிர்களிலும், அன்சார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களிலும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தியடைகின்றான். அவர்களும் அவனிடம் திருப்தி அடைகின்றார்கள். அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் தயார்படுத்தி இருக்கின்றான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்“. (அல்குர்ஆன் 9:100)
மீண்டும் கூறுகின்றான்.
“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”. (அல்குர்ஆன் 5:3)
இறுதியாக எடுத்துக்காட்டப்பட்ட இறை வசனங்கள், அல்லாஹு தஆலா இந்த உம்மத்திற்கான மார்க்கத்தைப் பூரணப்படுத்தி தனது அருளையும் பொழிந்து விட்டான் என்பதைத் தெள்ளத் தெளிவாகவே அறிவிக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதை முழுமைப்படுத்தி, தனது சொல், செயல், அங்கீகாரம் யாவையும் சட்டங்களாக்கி வைத்துவிட்டுத்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அத்துடன் மக்களால் மார்க்கத்தினுள் நுழைந்து பின்னர் மார்க்கமாகக் காட்டக்கூடிய எல்லா வகையான நூதனச் செயல்களும், அவற்றை உட்புகுத்தியவர்கள் நல்ல நோக்கத்துடன் செய்திருந்தாலும், நிராகரிக்கப்பட வேண்டியவைகளே என அழுத்தமாகக் கூறிச்சென்றார்கள்.
அல்லாஹ்வின் எதிரிகளான யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் அல்லாஹ் அனுமதிக்காதவற்றைத் அவர்களது மதத்தினுள் புகுத்தினார்கள். நூதனக் கிரியைகள் பல கற்பித்தார்கள். அத்தகைய வழிமுறையைப் பின்பற்றி இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகளைக் கற்பித்து அனுமதிக்கப் பட்டவைகளாக ஆக்குவதை சங்கைமிக்க நபித் தோழர்களும் கண்டித்து, அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி எச்சரிக்கையும் விடுத்தார்கள்.
மேலும், இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகள் சேர்ப்பதானது “இஸ்லாம் முழுமையாகவும் மிகச் சரியாகவும் இல்லை” எனக் கருதுவதாக அமைய முடியும் அத்தகைய கருத்து மிகத் தீயது மட்டுமல்ல, “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்” என்ற இறை வசனத்தற்கும் நூதனக் கிரியைகள் பற்றிய நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைகளுக்கும் நேர்முரணானது என்பதுமாகும். இவை நம் கவனத்திற்குரியவை.
நபி(ஸல்) அவர்களுடைய மற்றும் மற்றவர்களுடைய பிறந்த தினத்தை வருடாவருடம் கொண்டாடுவதானது “அல்லாஹ் மார்க்கத்தைப் பூரணப் படுத்தவில்லை” “நபி(ஸல்) அவர்கள் தமது மார்க்கக் கடமைகளைத் தமது மக்களுக்கு ஒழுங்காகக் கற்றுக் கொடுக்கவில்லை” போன்ற கருத்துக்களையும் கொடுக்கின்றன. அவற்றின் காரணமாகவே பிற்காலத்தில் தோன்றியவர்கள் அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கத்தில் புகுத்தி அவை தம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைக்கும் என்று கருதுகின்றார்கள்.
அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பூரணப் படுத்தி அளவற்ற அருளையும் கொடுத்திருக்க நபி(ஸல்) அவர்கள் தமது தூதை பகிரங்கமாக முன்வைத்து இவை சுவனத்தைப் பெற்றுத் தரும் நல்லன என்றும் இவை நரக நெருப்பைப் பெற்றுத்தரும் தீயன என்றும் தமது உம்மத்தவருக்கு அறிவித்திருக்க மேற்கானும் விதத்தில் நினைப்பதும் சந்தேகத்திற்கிடமின்றி ஆபத்தானது மட்டுமல்ல, அல்லாஹ்வையும் அவன் தூதரையும் குறைகாண்பதற்குச் சமமான பெரும் பாவச் செயலாகும்.
அல்லாஹ்வின் தூதர் மொழிந்ததாக ஓர் ஆதாரபூர்வமான நபிமொழியை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
“(வல்லமை பொருந்திய) அல்லாஹு தஆலா ஒரு நபியை தமக்குத் தெரிந்த நல்வழியில் தமது மக்களை வழிநடத்திச் செல்லவும் தமக்குத் தெரிந்த தீமைகளைவிட்டு எச்சரிக்கவும் உரிய உதவி வழங்காது (உலகுக்கு) அனுப்பவில்லை.” (முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் மிகச் சிறப்பானவர் என்பதும், தனது தூதை மிகச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவு செய்து, தமது மக்களுக்கு அறிவுரை பகர்ந்த இறுதியானவர் என்பதும் யாவரும் மிக அறிந்த விஷயம்.
அல்லாஹ் தனது அடியார்களுக்குரிய மார்க்கக் கடமைகளுள் ஒன்றாக, மீலாத் விழா கொண்டாடுவதை அனுமதித்து இருக்க வேண்டும். இல்லையென்றால், நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அது பற்றி விளக்கி, அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது வாழ்வில் அதனைக் கொண்டாடியிருக்க வேண்டும். அல்லது நபித் தோழர்கள் அதனைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறு எதுவுமே இல்லாததால், மீலாத் விழா மார்க்கத்திற்கு உடன்பாடான ஒரு விஷயம் அல்ல என்பதை நன்கு தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. அதோடு இங்கு தரப்பட்ட விளக்கங்களிலிருந்து இது (மீலாத் விழா) சன்மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் தமது மக்களுக்கு எச்சரிக்கை செய்ததுமான ஒரு பித்அத் என்பதும் தெளிவாகின்றது.
மேலே தரப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் மீலாத் கொண்டாடுவதை நிராகரித்துள்ளதுடன், அது பற்றி கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இஸ்லாமிய ஷரிஅத்தின்படி எந்தவொரு விஷயத்தை அனுமதிப்பதாயினும், அல்லது தடை செய்வதாயினும், அல்லது மக்களிடையிலான பிணக்குகள் தொடர்பாக ஏதும் நடவடிக்கை எடுப்பதாயினும், அவை அல்லாஹ்வின் வேதத்து(குர்ஆனு)க்கும், நபி(ஸல்) அவர்களது சுன்னாவுக்கும் இணக்கமாக இருத்தல் வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படையான வழிமுறை.
அல்லாஹ் கூறுகின்றான்.
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.” (அல்குர்ஆன் 4:59)
மேலும் கூறுகிறான்.
“நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கின்றது.” (அல்குர்ஆன் 42:10)
இந்த விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் அருள்மறையை நோக்குவோமாயின் அது நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும்படி கட்டளையிடுவதைக் காண்போம். அவர்கள் எவற்றையிட்டு “ஆகும்” என கட்டளை பிறப்பித்தார்களோ அவற்றை ஏற்ற நடப்பதுடன், எவற்றை “ஆகாது” என எச்சரித்துத் தடுத்தார்களோ அவற்றை விட்டு ஒதுங்கி இருக்கும்படி அல்குர்ஆன் கட்டளை இடுகின்றது. அத்துடன், அல்லாஹ் மக்களுக்குரிய மார்க்கத்தை (இஸ்லாத்தை)ப் பூரணப்படுத்தியுள்ளதாகவும் இறைமறை இயம்புகின்றது. எனவே நபி(ஸல்) அவர்களின் போதனைகளுள் மீலாத் கொண்டாடுவது பற்றி கூறப்படாததால், அது சன்மார்க்கம் சார்ந்த ஒரு செயல் என ஏற்க முடியாது. மார்க்கம் என்பது அல்லாஹ்வால் நமக்காகப் பூரணப்படுத்தப்பட்டு நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும்படி மொழியப்பட்டதாகும்.
அடுத்து, இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நோக்குவோமாயின், நபி(ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ அதை கொண்டாடியதற்கு ஆதாரம் இல்லை. எனவே மீலாத் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சம் அல்ல எனத் தெளிவாகின்றது. அது மக்களால் கொண்டுவரப்பட்ட நூதனக் கிரியையும், கண்மூடித்தனமான போலிச் செயலுமாகும். உதாரணமாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடும் திருநாட்களைக் குறிப்பிடலாம்.
எனவே, நீதி, நேர்மை, சத்தியம் என்பவற்றுடன் அற்ப அளவு உறவும் உணர்வும் கொண்ட யாராயினும், இதுவரை கூறிய உண்மைகளை மனதில் இருத்தி நோக்குவார்களெனில் எவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்பதை அறிவர். உண்மையில் இது அல்லாஹ்வும் ரசூலும் எச்சரித்த நூதனக் கிரியைகளை (பித்அத்தை) சார்ந்ததாகும்.
அறிவுடன் சந்திக்கும் ஒருவர், உலகளாவிய ரீதியில் ஏராளமான மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்களே என ஏமாந்துவிடக் கூடாது. ஏனெனில், சத்தியம் ஷரீஅத்தின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதேயன்றி மக்களின் எண்ணிக்கையைக் கொண்டதல்ல.
வல்லமை பொருந்திய அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி இவ்வாறு கூறுகின்றான்.
“யூதர்கள் கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வீணாசையேயாகும், “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால், உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 2:111)
மீண்டும் கூறுகின்றான்.
“பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116)
பித்அத்கள் யாவும் அவற்றின் தன்மையைப் பொறுத்து பல தீமைகளுக்கு வழிவகுக்கும். ஆண் பெண் கலத்தல், இசையுடன் கூடிய ஆடல் பாடல்கள், மதுபானம் அருந்துதல், போதைப் பொருட்கள் உட்கொள்ளல் என்பன அவற்றுள் சில. அத்துடன் நபி(ஸல்) அவர்கள் மீதும், இன்னுமுள்ள நல்லடியார்கள் மீதும் அளவு கடந்த அன்பு பூண்டு, அவர்களிடம் பிரார்த்தனைப் புரிவதும், அவர்களது உதவிநாடி கெஞ்சுவதும், அவர்கள் மறைவானவற்றை அறிந்துள்ளனர், என்ற நம்பிக்கையுடன் நாட்டங்கள் நிறைவேற்ற வேண்டுதல் புரிவதும் கூட நடைபெறும், இவை மிகப்பெரிய ஷிர்க் (இணைவைத்தல்) சார்ந்த செயல்களே. இவற்றின் மூலம் அவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களாக மாறிவிடுவர்.
நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று இவ்வாறு காணப்படுகின்றது.
“நீங்கள் மார்க்கத்தில் வீண் செலவையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுக்கு முன்னிருந்த மக்கள் இதனால் அழிந்து போயுள்ளனர்.”
மீண்டும் அவர்கள் மொழிந்ததாகக் காணப்படுவதாவது.
“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (புகாரி)
நம் சமூகத்தின் மிக முக்கியமானவர்கள் கூட இத்தகைய விழாக்களில் மிகத் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்படுவதையும், இவற்றுக்குச் சார்பாக கருத்து வெளியிடுவதையும் காண்கின்றோம். அத்தகையவருள் பலர் ஐவேளைத் தொழுகைளையோ ஒழுங்காக நிறைவேற்றாதிருப்பது ஆச்சரியமும் வேதனையும் மிக்கதே. இது பற்றி அவர்கள் வெட்கப்படுவதாகவோ, வேதனைப் படுவதாகவோ, பெரும் பாவமொன்றில் ஈடுபட்டுள்ளோமே என உணர்வதாகவோ தெரிவதில்லை.
எத்தகைய சந்தேகமுமின்றி இத்தகையவர்களின் இச்செயல் இவர்களது பலவீனமான விசுவாசத்தையும், தூரநோக்கில்லாத தன்மையையும், துருப்பிடித்துவிட்ட உள்ளங்களின் இறுக்கமான போக்கையுமே தெளிவு படுத்துகின்றது. இவர்களது பாவச் செயல்களும், கீழ்ப்படியாமையுமே இந்நிலைக்குக் காரணம். அல்லாஹ் நம்மையும் எல்லா முஸ்லிம்களையும் இந்நிலையிலிருந்து பாதுகாப்பானாக.
இங்கு குறிப்பிடவேண்டிய மிகவும் அதிசயமும் ஆச்சரியமுமான மற்றொரு விஷயம் என்னவெனில், சிலர், மீலாத் விழாக்களின் போது நபி(ஸல்) அவர்களும் அங்கு பிரசன்னமாகி இருப்பார்கள் என நம்புவதே. இதன் காரணமாக அவர்கள் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களை வரவேற்று வாழ்த்துகின்றார்களாம். இது அப்பட்டமான பொய் மாத்திரமன்று. மிக மோசமான அறிவீனமும் கூட. நபி(ஸல்) அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் கியாமத் தினத்திற்கு முன் அவர்களது அடக்கத்தளத்திலிருந்து எழுந்து வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மக்களை சந்திக்கவோ, அவர்களது கூட்டங்களில் கலந்துகொள்ளவோ மாட்டார்கள். மாறாக, அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் கியாமநாள் வரை தமது அடக்கத்தளத்திலேயே இருப்பார்கள். அதேவேளை அவர்களது தூய ஆன்மா உயர்ந்த, கண்ணியமான அந்தஸ்தில் அல்லாஹ்வுடன் இருக்கும்.
அல்லாஹு தஆலா கூறுகின்றான்.
“பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கின்றீர்கள். பிறகு, கியாம நாளன்று நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 23:15,16)
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
நான்தான் கியாம நாளன்று முதன்முதலாக எழும்புபவன், நானே முதலாவதாக (மற்றவர்களுக்காக) பரிந்து பேசுபவன், என்னுடைய பரிந்து பேசுதலே முதலாவதாக ஏற்கப்படும்.
குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக் காட்டப்பட்ட மேற்காணும் மேற்கோள்கள் மரணித்த எவருமே கியாம நாளுக்கு முன் தமது அடக்கத் தளங்களிலிருந்து எழுந்து வருவது இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் இது விஷயத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு முஸ்லிமும் இவை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, அல்லாஹ்விடமிருந்து எத்தகைய அதிகாரமும் பெறாத அறிவு குன்றிய மக்கள் உருவாக்கியுள்ள பித்அத்கள், மூட நம்பிக்கைகள் என்பனவற்றை நம்பி, எளிதில் தவறான வழியில் செல்பவர்களாக இருக்கக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் மொழிவதானது, அல்லாஹ்வுடைய கூற்றுக்களுக்கு ஏற்ப, மிக ஏற்றமான சிறப்புமிக்க செயற்களுள் அமைந்தனவாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
“இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகின்றான், மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.” (அல்குர்ஆன் 33:56)
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
“எவரொருவர் என் மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்கிறாரோ, அவர்மீது அல்லாஹ் பத்து முறை தனது அருளைச் சொரிகின்றான்.”
இது எல்லா நேரத்திலும், குறிப்பாக ஒவ்வொரு தொழுகையின் பின்னர் மொழிவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழுகையின் இறுதி கட்டத்தில் இதை மொழிவது கட்டாயம்(தஷஹ்ஹீத்) என இஸ்லாமிய அறிஞர்கள் பலரால் கூறப்பட்டுள்ளது. ஹதீஸ்களின்படி “அதான்” அழைப்பு விடுக்கப்பட்டவுடனும், நபி(ஸல்) அவர்களுடைய பெயரைக் கேட்டவுடனும், வெள்ளிக்கிழமைப் பகலிலும் இரவின் ஆரம்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது மிக மிக அவசியம் என வேண்டப்பட்டுள்ளது.
இதுதான் இந்த விஷயம் தொடர்பாக நான் வலியுறுத்திக் கூறவிரும்புவதாகும். எவர்கள் அல்லாஹ்வின் அருளொளி கிடைக்கப் பெறுகின்றார்களோ அவர்கள் அனைவரும் இவ்விளக்கங்களால் திருப்தியுறுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
இனி, நபி(ஸல்) அவர்கள் மீது ஆழ்ந்த விசுவாசமும், அளவிலா பற்றும் கொண்ட பக்திமிகுந்த முஸ்லிம்களுள் சிலர் இத்தகைய நூதனமா(பித்அத்தா)ன கொண்டாட்டங்களை சரிகாணுவது வேதனையாயுள்ளது. அத்தகைய மக்களிடம் கேட்கின்றேன், “எமக்குக் கூறுங்கள். நீங்கள் அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த, நபி(ஸல்) அவர்களது அடிச்சுவட்டில் செல்ல விரும்புகின்ற ஒருவராயின் தயவுசெய்து கூறுங்கள், நபி(ஸல்) அவர்கள் மீலாத் கொண்டாடினார்களா? அவர்களது தோழர்களோ அடுத்து வந்தவர்களோ கொண்டாடினாhகளா?” இல்லையே! உண்மையில், இச்செயல் இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள், கிறிஸ்தவர்களிடமிருந்து பெறப்பட்டதே. அதனை நம்மவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர்.
இத்தகைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு பாராட்டும் வழிமுறை சார்ந்தது அல்ல. அவர்கள் மீது அன்பு பாராட்டுபவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்களது போதனைகளை நம்பி நடக்க வேண்டும். அவர்கள் தடுத்தவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும். அவர்கள் காட்டித்தந்த முறைப்படி அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வர வேண்டும். இதுதான் நமக்குரிய நடைமுறை. அத்துடன் ஒவ்வொரு வேளையிலும், குறிப்பாகத் தொழுகை வேளைகளில் நபிகளார் பெயர் வரும்போது ஸலவாத்தும் ஸலாமும் மொழிவதன் மூலம் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பை அழகாக வெளிப்படுத்த முடியும்.
அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போல் வஹ்ஹாபிய்யத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய நூதனக் கிரியை (பித்அத்)களை நிராகரிப்பது புதிய விஷயமே அல்ல. அவர்கள் குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களது சுன்னாவிலும், ஆழ்ந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள். நபி(ஸல்) அவர்களது அடிச்சுவட்டிலும், அவர்களைத் தொடர்ந்து நல்வழி நடந்த நல்லவர்கள் அடிச்சுவட்டிலும் நடக்க ஆர்வம் கொண்டவர்கள். குர்ஆனிலும் நபி(ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது போலவும், நபித்தோழாகளால் முழுமனதுடன் ஏற்கப்பட்டது போலவும், அல்லாஹ்வின் பேரறிவு, பண்புகள், பேராற்றல் பற்றி நன்கு கற்றுணர்ந்து, மார்க்கக் கட்டளை பிறப்பிக்கும் தகுதிபெற்ற முன்னோர்கள், இமாம்கள், ஆகியோரது கூற்றுக்களை நம்பி நடைமுறைபடுத்தவும் ஆர்வம் கொண்டவர்கள். மார்க்க விவகாரங்களில் எத்தகைய திருத்தமும், உருவகம் உதாரணம் என்பன மூலம் சிதைத்தலும், மறுத்தலும் செய்யப்படாமல் அறிவிக்கப்படுபவைகளை வஹ்ஹாபிய்யத்தைச் சேர்ந்தவர்கள் நம்புகின்றவர்கள், ஆழ்ந்த அறிவும், நம்பிக்கையும், இறையுணர்வும் கொண்ட முன்னோர்களும் அவர்களது வழிநடந்தவர்களும் காட்டிய வழியில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள். மார்க்கத்தின் அடித்தளம் “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடத் தகுந்த வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய திருத்தூதர்” என்ற நம்பிக்கையின் மீது அமைந்துள்ளது என்பதை முழுமனதுடன் நம்புபவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் இதுதான் நம்பிக்கையின் ஆணிவேராகும். முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்துப்படி இந்த அம்சங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவும், அங்கீகாரமும் – அவற்றை அடியொட்டிய செயலும் மிக அவசியம் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.
கலிமாவின் கருத்தாவது வல்லமை பொருந்திய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும். வழிபட வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றது. அவனுக்கு வேறு எவரையும் துணை கற்பிக்கக் கூடாது. அவனையன்றி வேறு எவரையும் வணங்கி, வழிபடுவதை மறுக்க வேண்டும் என்பனவற்றையும் குறிப்பிடுகின்றது. எனவே, ஜின்களும் மனித வர்க்கமும் ஏன் படைக்கப்பட்டது. நபிமார்கள் ஏன் அனுப்பப்பட்டார்கள். வேதக் கிரந்தங்கள் ஏன் அருளப்பட்டன என்பன நன்கு தெரியவருகின்றது.
மேலும், “இபாதத்” என்பது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதும், அவன் மீது அன்பு செலுத்துவதும் மட்டும் அல்ல. அதன் முறையான கருத்து என்னவெனில் அவனுக்கு மட்டும் முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, வணங்கி, வழிபட்டு, வாழ்தல் என்பதாகும். அல்லாஹு தஆலாவால் அருளப்பட்டு நபிமார்களால் பரப்பப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இறந்த காலத்திலும் இன்னும் இதுவன்றி இன்னுமொரு மார்க்கம் இறைவனிடம் ஏற்கப்படவோ, அங்கீகாரம் பெறவோமாட்டாது. எனவே இதன்படி வாழ்தலே இவ்வுலக மக்கள் அனைவருடைய கடமையாகும்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு அடிபணிவதுடன், அதேவிதமான அடிபணிவை மற்றொருவருக்கும் செலுத்துவாராயின் அவர் ஒரு முஷ்ரிக் (இறைவனுக்கு இணைவைப்பவர்) ஆவார். அதே போன்று எவரொருவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதுடன் மற்றொருவரிடமும் பிரார்த்தனை புரிகின்றாரோ அவரும் அதே தரத்தை உடையவராவார். எவரொருவர் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அடிபணிந்து நடக்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்காக தனது கடமைகளில் தவறு செய்கின்ற தற்பெருமை பிடித்தவராவர்.
அல்லாஹ் கூறுகின்றான்.
“மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடமும் “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பிவைத்தோம்.” (அல்குர்ஆன் 16:36)
முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று முழுமையாக சான்று பகரும் வகையிலேயே வஹ்ஹாபியத்தின் அடித்தளம் சார்ந்த நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அதே நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து பித்அத்களையும், மூட நம்பிக்கைகளையும், ஷரீஅத்திற்கு மாறானவற்றையும், ஒதுக்கித் தள்ளவும் விழைகின்றது. இவற்றையே தாமும் நம்பி நடந்ததுடன், மற்றவரையும், நம்பி நடக்கும்படி ஷெய்க் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள். இது தொடர்பாக யாரேனும் அவரைப் பற்றி முரண் வழியில் பேசுகின்றாரேனில், அவர் பொய் பேசுகிறார் என்பது மட்டுமல்ல, எத்தகைய ஆதாரமுமில்லாத ஓர் அம்சத்தைப் பேசி பாவத்தைச் சுமக்கின்றார் என்று தான் கூற வேண்டும். இட்டுக்கட்டப்படும் எல்லா விதமான பொய்களுக்கும் அல்லாஹ் எத்தகைய தண்டனைகளை கொடுப்பதாகக் கூறியுள்ளானோ, அவற்றை இவ்வாறு பொய் பேசுபவர்கள் பெறுவர் என்பதில் ஐயமில்லை.
ஷெய்க் அவர்கள் “ஏகத்துவப் பிரகடனம், லா இலாஹஇல்லல்லாஹ்” என்ற தலைப்பில் எழுதிய ஆய்வு நூல்கள் பலவற்றில் தமது கருத்துக்களை அழகுற எடுத்தியம்பியுள்ளார்கள். அவற்றின் மூலம், வல்லமைப் பொருந்திய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை” என நம்பி, அதற்கு பொருத்தமாக வணங்கி வழிபட்டு வருவதானது சிறிய பெரிய அனைத்து ஷிர்க்களிலிருந்தும் பாதுகாப்பைத் தரும் என விளக்கிக் கூறியுள்ளார்கள். யாரேனும் ஒருவர் அவரது இந்த நூல்களைப் படித்திருந்தால் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து போதனை செய்த அவரது முறையைத் தெரிந்திருந்தால், அவரது மாணவர்கள், சீடர்களின் தன்மையை அறிந்திருந்தால், அவர் போதனை செய்தவைகளும், அவற்றிற்கான முறைகளும் ஸாலிஹான முன்னோர்கள், கண்ணியமிக்க இமாம்கள் ஆகியோர் போதித்து காட்டித்தந்த முறைகளுக்கு மாறாக இல்லை என்பதை மிக எளிதில் அறிந்து கொள்வர். உண்மையில் அந்த சங்கை மிக்க முன்னோர்கள் “அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கவேண்டும். பித்அத்களை, மூட நம்பிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்” என்ற ரீதியில் காலமெல்லாம் ஆற்றிவந்த அழகான பணிகளையே இவரும் ஆற்றி வந்தார். நிலைநிறுத்தினார் என்பது வரலாறு எடுத்துக்கூறும் பேருண்மை.
இதுதான் சவூதி அரசின் அடித்தளமாக இருக்கின்றது. சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞர்களும் இக்கருத்துக்களையே கொண்டுள்ளனர். இஸ்லாத்திற்கு முரணான மூட நம்பிக்கைகள், பித்அத்கள் ஆகியவற்றிற்கும், நபி(ஸல்) அவர்கள் முழுமையாகத் தடை செய்த வீண் விரயங்களுக்கும் எதிரான கடுமையான போக்கை சவூதி அரசு கடைப்பிடிக்கின்றது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த எல்லா முஸ்லிம்களும், இஸ்லாமிய அறிஞர்களும், ஆட்சியாளரும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் மதித்து அன்பு பாராட்டுகின்றனர். அந்த வகையில் அவர்கள் எந்த நாட்டை, பிரிவை, அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எவரையும் நோக்குவது இல்லை. அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் அங்கீகரிக்காத பித்அத்கள் சார்ந்த எல்லா விதமான கொண்டாட்டங்களையும், மக்கள் ஒன்று கூடலையும் அவர்கள் நிராகரிக்கின்றனர். அவற்றை அவ்வாறு நிராகரிக்கக் காரணம், “மார்க்கத்தில் சேர்க்கப்படும் எல்லாப் புதியவைகளும் பித்அத்களே, அவற்றைப் பின்பற்றுவது ஆகாது” என முஸ்லிம்கள் கட்டளையிடப் பட்டுள்ளனர் என்பதனாலேயே இஸ்லாம் மிகச் சரியானது பூரணத்துவமானது.
அல்லாஹ்வும் அவனது ரசூலும் கட்டளைப் பிறப்பித்து, நபித் தோழர்களாலும், அவர்கள் வழிவந்தவர்கள். அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆகியோராலும் பெறப்பட்டு, அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தினரால் ஏற்கப்பட்ட எதிலும் எத்தகைய கூட்டலும் செய்வதற்கு அவசியமே இல்லை. மீலாத் விழாக் கொண்டாடுவது பித்அத் என்பதாலும், வீண் செலவு, ஷிர்க் என்பவற்றைக் கொண்டுவருவது என்பதாலும் அதைத் தடுக்க வேண்டும் எனக் கோருவது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஸ்லாமிய வழிமுறைகளுக்கு முரணானது அல்ல. மாறாக, “மார்க்க விஷயத்தில் வீண் செலவையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுக்கு முன்னிருந்தோர் மார்க்க விஷயங்களில் வீண் செலவு செய்ததால் அழிந்து போனார்கள்” என்ற ஹதீஸின் படி நபி(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகும்.
நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மொழிந்தார்கள்.
“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நாம் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” எனக் கூறுங்கள்.” (புகாரி)
இவைதான் அச்சஞ்சிகையில் பிரசுரமான குறிப்பிட்ட கட்டுரை தொடர்பாக நான் கூற விரும்புபவை.
அல்லாஹ் எம்மையும் எல்லா முஸ்லிம்களையும் அவனுடைய மார்க்கத்தை விளங்கவும், அதிலே நிலைத்து நின்று உறுதியோடு நடக்கவும் அருள்புரிவானாக. அவன் தயாளமும் கருணையும் மிக்கவன்.
அல்லாஹ் அவனது அருளையும் கருணையையும் நமது உயிரிலும் மேலான நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களது சந்ததியினர், தோழர்கள் மீதும் பொழிவானாக.