துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

தஹஜ்ஜுத் தொழுகை ஓர் ஆய்வு

உபரியான வணக்கங்களில் ஒன்று தான் ''தஹ்ஜ்ஜுத்''யாகும். இதற்கு பின்னிரவுத் தொழுகை என்று பொருள்படும். இத்தொழுகை மற்ற உபரித் தொழுகையை விட ரக்அத்துகளின் எண்ணிக்கையிலும், நீண்டநேரம் நின்றுதொழுவதிலும் சிறப்புற அமைந்துள்ளது. மேலும் நமது பிரார்த்தனைகள் இறைவனால் அங்கிகரிக்கப்படக் கூடிய நேரங்களில் ஒரு நேரமாக இரவுத்தொழுகையுள்ளது. மற்ற உபரித் தொழுகைகளை நேரமிருந்தால் தொழுது கொள்ளலாம். ஆனால் இத்தொழுகை தொழவேண்டுமெனில் இரவு தூக்ககத்தின் ஒரு பகுதியைத் தியாகம் செய்யவேண்டும் விழித்தொழுந்து இறைவனை தொழுதிட வேண்டும் இதனால் இறைவனே திருக்குர்ஆனில் இத்தொழுகையைப்பற்றி மாண்புகளை கூறி ஆர்வமுட்டுகிறான். ( நபியே) இன்னும் இரவில் (ஒருசில) பகுதியில் உமக்கு உபரியான (நபிலான) தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக் (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் ' மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ்பெற்ற) தளத்தில் உம்மை எழுப்ப போதுமானவன் (17:79)

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக!

அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிதுக் குறைத்துக் கொள்ளலாம்.
அல்லது அதை விடச்சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக் மேலும் குர்ஆனைத்தெளிவாகவும் நிறுத்தி நிறுத்தியும் ஒதுவீராக: (73:1,2,3,4,)

இரவுத் தொழுமாறு மேற்கண்ட வசனங்கள் மூலமாக தெளிவுப்படுத்தி அதன்பால் இறைவன் திருமறையில் ஆர்வமூட்டுகிறான். மேலும் பயபக்தி இறைநம்பிக்கையளர்களின் பண்புகளைப்பற்றி குறிப்பிடும்போது அவர்கள் இரவில் உபரித் தொழுகையை தொழுவார்கள் என்கிறான்.

நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள் அவற்றைப்பற்றி நினைவுட்டபப்பட்டால் அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவார்களாய்த் தம் இறைவனைப்புகழ்ந்து துதிப்பார்கள் அவர்கள் பெருயைடிக்கவும் மாட்டார்கள்.

அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய்த் தம் இறைவனைப்புகழ்ந்து துதிப்பார்கள் அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தை துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கையார்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தர்மங்களில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன்: 32:15,16)

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் (சுவர்க்கத்தின்) சோலைகளிலும் நீருற்றுகளிலும் இருப்பார்கள்.

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக்கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.

அவர்கள் இரவில் மிகவும் சொற்பநேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
அவர்கள் விடியற்காலங்களில்(பிரார்த்தனைகளின் போது அறைவனிடம் மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 51:15,16,17,18)

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளை கூறிய இறைவன் தஹஜ்ஜத் தொழுகையைதொழுவதின் மாண்புகளையும் நவின்றுள்ளான்.

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (73:6)

ஆரம்ப இரு வசனங்களில் தஹஜ்ஜத் தொழுகையை தொழுமாறு பெருமானார் (ஸல்) அவர்களை இதற்கு நற்கூலியாக ''மகாமே மஹ்மூத்''
என்னும் புனித தலத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் எழுப்பப்படலாம் என்று அல்லாஹ் முன்னறிவிப்பு வழங்குகிறான். மேற்கண்ட இருவசனங்கள் நபி(ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்துவதால் நபி(ஸல்) அவர்கள்தான் தொழ வேண்டும் நாம் தொழ வேண்டிய அவசியமில்லைஎன்று புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக அடுத்துவரக் கூடிய வசனங்கள் கட்டளை என்ற அடிப்படையில் இல்லாமல் மூமின்கள்தங்களுடைய இறைத்தொண்டுகளில் ஒன்றாக தஹஜ்ஜத் எனும் இரவுத் தொழுகையை அனுதினமும் தொழுவார்கள் என்று கூறுகிறான்.

சிறப்பு: நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜத் தொழுகையின்சிறப்புகளையும் அதை பேனுவதின் அவசியத்தையும் குறிப்பிட்டு அதை தொழுமாறு ஸஹபாக்களுக்கு ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.

ரமளானுக்கு பிறகு நோற்கபடக்கூடிய நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் வைக்கும் நோன்பாகும். மேலும் கடமையான தொழுகைகளுக்கு பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயி, அஹ்மத்.

இரவில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது
நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளை கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவிகளிலுமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவுக் கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவுக் கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் இருந்தேன். ''இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்கு கொண்டு சென்றார்கள். ம்ணற்றுக்கு சுற்று சுவர் எழுப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் (சுவர்) எழுப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்கு தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன் என்று கூறினேன். அது சமயம் வேறு ஒரு வானவர் என்னை சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவுக் கண்டேன். இக்கனவை ஹஃபீஸா(ரலி) இடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ''அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களில் மிகவும் நல்லவர்'' என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை. அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

கடமையான, தொழுகைகளுக்கு பிறகு சிறந்த (உபரியான) தொழுகை இரவுத்தொழுகை என்று சிலாஹித்த நபி(ஸல்) அவர்கள் இத்தொழுகை நேரத்தில்தான் இறைவன் பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதாக முன்னறிவிப்பை நபி(ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

அவசியம்
மக்களே முகமன் கூறுவதை விசாலமாக்கி கொள்ளுங்கள் மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஸலாம்(ரலி) நூல்: திர்மிதி

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு விழித்ததும் சுப்ஹானல்லாஹ்! இந்த இரவில் தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டுள்ளது? எத்தனை பொக்கிஷங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறைகளில் உள்ள பெண்களை எழுப்பி விடுவோர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருந்த எத்தனையோ பேர் மறுமையில் நிர்வாணிகளாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பாத்திமா (ரலி) இல்லத்திற்கு வருகை தந்துபோது என்ன நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று வினவினார்கள். அறிவிப்பவர்: அலி(ரலி) நூல்: புகாரி

உபரியான இரவுத் தொழுகையை தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் அவசியப்படுத்தினார்கள். அதற்காக தோழர்களின் இல்லங்களின் கதவை தட்டி எழுப்பியுள்ளார்கள்.

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள் பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து கொள்வார்கள். அதனால் அவருடைய பாதங்கள் வீங்கிவிடும். அல்லாஹ்வின் தூதரே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். உமக்கு நான் முன்பின் பாவங்கள் மன்னிக்கபட்டனவே என்று நான் வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான் (இறைவனுக்கு) நன்றியுள்ள அடியானாக இருக்க கூடாதா என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உபரித் தொழுகைகளில் மேன்மையான தொழுகையான தஹஜ்ஜுத் தொழுகையை தொழுவதில் அதை பேணுவதில் இறைத்தூதர் தாவூத்(அலை) முன்மாதிரியாக திகழ்ந்ததை முன்மாதிரியாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்துள்ளார்கள். மேலும் பெருமானார்(ஸல்) அவர்களின் முன்பின் பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டும் கூட அதற்கும் நன்றி செலுத்தும் விதமாக நபி(ஸல்) உபரியான இரவுத் தொழுகை தொழுதது நம்முடைய மேனி சிலிர்க்கிறது.

''தஹஜ்ஜுத்'' தொழுகை நேரம்
தஹஜ்ஜுத் தொழுகை தொழுவதற்காக இரவின் அனைத்து நேரங்களையும் நாம் கையாள முடியாது மாறாக அத்தொழுகைக் கொன்று பிரத்தியேகமான நேரத்தை நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலம் வகுத்து தந்துள்ளார்கள். மஸ்ரூக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தொடர்ந்து செய்யும் அமல் என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி(ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'சேவல் கூவும் போது எழுவார்கள்' என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி
மற்றொரு அறிவிப்பில் சேவல் கூவும் போது எழுந்து தொழுவார்கள் என்று காணப்படுகிறது.

நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி)யிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள், பிறகு படுக்கைக்கு செல்வார்கள். அறிவிப்பவர்: அஸ்வத்(ரலி) நூல்: புகாரி

(இரவின் ஆரம்ப நேரத்தில் தொழமுயன்ற) அபூதர்தா(ரலி) இடம் ''உறங்குவீராக! இரவின் கடைசிப்பகுதியில் எழுவீராக! என்று ஸல்மான் (ரலி) கூறினார்கள். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ''ஸலமான் கூறுவது உண்மையே!'' என்று குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி

உபரியான தஹஜ்ஜித் தொழுகை இரவின் பிற்பகுதியில் தான் தொழ வேண்டும் என்பது தெளிவாகிறது.

தஹஜ்ஜுத் தொழுகை ரக்அத்தின் எண்ணிக்கை
தஹஜ்ஜுத் தொழுகையின் மாண்புகளையும் அதன் அவசியங்களையும் விவரித்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ரக்அத்துகளின் எண்ணிக்கையும் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதன் மூலமாக தஹஜ்ஜுத் தொழுகையை நம் இஷ்டத்திற்கேற்ப எத்தனை எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை நீக்கி அதற்கு ஒரு வரம்பை நிர்ணயித்து தொழுதுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ''இஷா தொழுகை''யிலிருந்து பதினோரு ''ரக்அத்து''கள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கு மத்தியிலும் ஸலாம் சொல்வார்கள். ஒரு ''ரக்அத்வித்ரு'' தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையைப் பற்றி வினவினேன். நபி(ஸல்) அவர்கள் ஏழு ரக்அத்துகள், (சிலசமயம்) ஒன்பது ரக்அத்துகள், பதினோரு ரக்அத்துகள் ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்துகள் (ஸுன்னத்) ஆகியவை தொழுவார்கள். அறிவிப்பவர்: மஸ்ரூக்(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்துகள் தொழுவார்கள் என்று மேற்கண்ட முதல் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. இரண்டாம் ஹதீஸில் ஏழு ரக்அத்துகள், பதினோரு ரக்அத்துகள், என்பது வித்ரு தொழுகையின் எண்ணிக்கையாகும். பதினோரு ரக்அத்துகள் என்பது தஹஜ்ஜுத் தொழுகையின் எண்ணிக்கையாகும் என்பது தெளிவாகிறது.

நபி(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துகள் தொழுவார்கள் அதில் உள்ளவை தான் வித்ரு மற்றும் ''ஃபஜ்ரின்'' இரண்டு (சுன்னத்தான) ரக்அத்துகள் அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் அபூதாவூத், நஸயீ, தாரமி

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளை விட அதிகமாக தொழுவது கிடையாது.
நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஸலமா(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உபரியான இரவுத்தொழுகையில் எண்ணிக்கையை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுப்படுத்துகிறது. ஆனால் உபரித் தொழுகையின் ஆர்வலர்கள் ''தஹஜ்ஜுத் தொழுகையை தொழுகிறோம் என்ற பெயரில் ரக்அத்துகளின் வரம்பை மீறாமல் இரவெல்லாம் தொழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு முன்மாதிரியாக பெரியார்கள், நல்லடியார்களின் சரித்திரத்தை முன்னிலைப்படுத்துவார்கள். ஆனால் இச்சரித்திரங்கள் மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரத்திற்கு நேர் மாற்றமாக அமைந்துள்ளதை நிதர்சனமாக காண்கிறோம்.

''தஹஜ்ஜுத்'' தொழுகை இரண்டிரண்டாக தொழுதல்.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை தொழும் விதம் யாது? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ரு தொழுவீராக என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி,

நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுதால் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகளைக் கொண்டு ஆரம்பிப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம்

கடமையான தொழுகையைப் பொருத்தவரை அதனுடைய எண்ணிக்கை அடிப்படையின் தொழவேண்டும். ஆனால் உபரித் தொழுகையை பொறுத்தவரை இரண்டிரண்டாக தான் தொழவேண்டும். இதுதான் கடமைக்கும், உபரிக்கும் மத்தியில் வித்தியாசமாகும். இதே அடிப்படையில் தஹஜ்ஜுத் தொழுகை தொழவேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுப்படுத்துகிறது.

''தஹஜ்ஜுத் தொழுகையை நீட்டித் தொழலாம்.
நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையில் சிறந்தது எது? என்று வினவப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நீண்ட நேரம் நின்று தொழுவது'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நான் ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன் நான் தவறான முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது அந்தத் தவறான முடிவு எது? என்று நான் கேட்டேன் அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவதை விட்டுத் தொழுகையை முறித்து விடலாம் என்று எண்ணினேன் என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூவாயில்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தொழுதேன் அவர்க்ள (தொழுகையில்) ஸுரத்துல பகராவை ஆரம்பித்து 100வது வசனத்தில் ருகூவு செய்வார்கள் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். பிறகு தொடர்ந்தார்கள். நான் முன்பு போலவே எனக்கு நானே கூறிக்கொண்டேன். பிறகு ஸுரத்துன்நிஸாவை ஆரம்பித்தார்கள். அதை ஒதிக் கொண்டே இருந்தார்கள். பிறகு ஆல இம்ரானை ஸுராவை ஆரம்பித்தார்கள். தொழுகையில் தஸ்பீஹ் என்ற வசனத்தை கடந்தால் தஸ்பீஹ் கூறுவார்கள். கேள்வி தோரணையில் உள்ள ஒரு வசனம் கடந்தால் கேள்வி தொடுப்பார்கள். பிறகு ருகூவு செய்வார்கள் அதில் ''ஸுப்ஹான ரப்பியல் அழீம்'' என்று கூறுவார்கள் எவ்வாறு நீண்ட நேரம் நின்று தொழுதார்களோ அவ்வாறே நீண்ட நேரம் ருகூவு செய்வார்கள். பிறகு ருகூவிலிருந்து எழுந்ததும் அவ்வாறே நீண்டநேரம் நிற்பார்கள். மேலும் ஸஜ்தா செய்யும் போதும் நீண்ட நேரம் அவ்வாறே ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்துகள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐந்து வசனங்கள் ஓதக்கூடிய நேரம் ஸஜ்தா செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உபரித் தொழுகைகளில் சிறந்த தொழுகை தஹஜ்ஜுத் தெரிந்து கொண்டோம் மேலும் நீண்ட நேரம் நின்று தொழுவதும் சிறந்த தொழுகையாக நபி(ஸல்) அவர்கள் சிலாஹித்து கூறியுள்ளார்கள்.

நீண்ட நேரம் நின்று தொழும் விதத்தையும் நபி(ஸல்) அவர்கள் செயல்முறை மூலமாக காட்டியுள்ளார்கள். எந்த அளவுக்கெனில் அதன் நீளத்தையும், அழகையும் வார்த்தைகளில் வழங்க இயலாது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் காரணம் கற்பிக்கிறார்கள். நின்று தொழுகிற போது பெரிய ஸுராக்களை ஓதக் கூடியவர்களாகவும் அதற்கு இணையாக நீண்ட நேரம் ருகூவும், ஸுஜுதும் செய்வார்கள். இதனால் தான் நபி(ஸல்) அவர்கள் இதற்கு (நீண்ட நேரம் நின்று தொழுவது) சிறந்த தொழுகையாக நவின்றுள்ளார்கள்.
தஹஜ்ஜுத்தில் சில சிறப்பு அம்சங்களை கடைபிடிக்க!

பிரார்த்தனை
தஹஜ்ஜுத் தொழுகைக்கென சில விசேஷச பிரார்த்தனைகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். அத்துவாக்களை மனனம் செய்து இறைவனின் அருளை பெற முயற்சிக்க வேண்டும்.
இரவில் எழுந்ததும் ஓதவேண்டிய பிரார்த்தனை
''யார் இரவில் விழித்து''
''லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு
வல்ஹுல்ஹம்து வஹீவஅலாகுல்லி ஷய்யின்கதீர் அல்ஹம்து
லில்லாஹி வசுப்ஹானல்லாஹு வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு
அக்பர் வலா ஹவுலாவலாகுவ்வத இல்லாபில்லாஹ் என்று பிரார்த்தித்த பிறகு அல்லாஹும்மக்ஃபிர்லி என்றோ வேறு பிரார்த்தனைகளோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: உபாதாபின்ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி

பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை; அவன் ஏகன் அவனுக்கு நிகரானவர், இல்லை ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்து பொருட்கள் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அவன் தூயவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா என்னை மன்னித்து விடு என்றோ அல்லது வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும்.

இரண்டாம் பிரார்த்தனை:
நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் (பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்)
அல்லாஹும்மலகல்ஹம்து அன்த கய்யிமுஸ்ஸமாவாதி
வல்அர்லி வமன்ஃபீஹுன்ன வலகல்ஹம்து லக முல்குஸ்ஸமாவாத்வல் அர்ளி
வமன்ஃபியின்ன வலகல்ஹம்து அன்த நூருஸ்ஸமாவாதி வல் அர்ளி
வலகல் ஹம்து அன்த முல்கு ஸ்ஸமாவாதி வல்அர்ளி. வலகல் ஹம்து அன்தல்ஹக்கு வவஅதுகல்ஹக்கு வலிகாவுக ஹக்கு வகவுலுகஹக்கு வல்ஜன்னது ஹக்கு வந்நாரு ஹக்கு வந்நபிய்åஹக்கு வமுஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஹக்கு வஸ்ஸாஅது ஹக்கு அல்லாஹும்ம லகஅஸ்லமது வபிக ஆமனது வஅலைக தவக்கல்து
வயிலைக அனப்து வபிக காஸம்து வலைக ஹாகம்து ஃபக்ஃபிர்லி மாகத்தம்து வமாஅக்கரது வமாஅஸ்ரர்து வமா அஃலன்து அன்தல்முகத்திமு வஅன்தல் முஅக்கிரு லாயிலாஹ இல்ல அன்த (என்றோ அல்லது லாயிலாஹா கைருக என்றோ கூறலாம்)

பொருள்:
இறைவா! உனக்கே புகழ் அனைத்தும், வானங்கள் பூமி அவற்றில் உள்ளவை அனைத்தையும் நிர்வம்ப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும் வானங்கள் பூமி அவற்றில் உள்ளவைகளின் உரிமை உனக்காக உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும் வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும் நீ உண்மையானவன், உன் வாக்குறுதி உண்மை, உனது சந்திப்பு உண்மை உனது கூற்று உண்மை, சொர்க்கம் உண்மை, நரகம் உண்மை நபிமார்கள் உண்மை, முஹம்மது உண்மையானவர்கள் மறுமை நாள் உண்மை, இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீதே உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன் உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்த பம்ரங்கமாக செய்த, இரகசியமாக செய்த பாவங்களை மன்னித்து விடு நீயே (சிலரை) முற்படுத்துபவன் (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மூன்றாம் பிரார்த்தனை
நபி(ஸல்) அவர்கள் இரவில் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தை தடவித் தூக்கக்கலத்தை போக்கினார்கள். பின் ஆல இம்ரான் அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்கள் (3:191லிருந்து 200 வரை) ஓதினார்கள். பிறகு எழுந்து பழைய தோல்பையிலிருந்து (தண்¡ர் எடுத்து உளூ செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நான்காம் பிராத்தனை
நான் அன்னை ஆயிஷா(ரலி) அவக்ளிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகைகளின் துவக்கத்தில் என்ன ஓதுவார்கள்? என்று வினவினேன். அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய இரவுத் தொழுகையின் துவக்கத்தில்.
அல்லாஹும்ம ரப்ப ஜீப்ரயீல வமீகாயீல வ இஸ்ராஃபீல ஃபதிரஸ்
ஸமாவாதி வல்அர்ளி ஆலிமுல் கைபி வஷ்ஷஹாததி, அன்த
தஹ்குமு பைன இபாததிக ஃபிம கானு ஃபீஹி யக்தலிஃபூன்
இஹ்தினி லமக் துலிஃப ஃபிஹு மினல்ஹக்கு பிஇஸ்னிக இன்னக தஹ்தி மன் தஷாவு இலா சிராதின் முஸ்தஜீம்.
மேற்கண்ட துவாவை ஓதுவார்கள். அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின்அவுஃபு நூல்கள்: முஸ்லிம், அபூதா¥த், திர்மிதி, நஸயீ-இப்னுமாஜா

பொருள்:
இறைவா! ஜிப்ரயீல், மீகாயில், இஸ்ராஃபீல் -யின் இறைவனே வானங்களையும் பூமியை படைத்தவன், மறைவான, வெளிப்படையான விஷயங்களை அறியக் கூடியவன், உம்முடைய அடியார்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டியிருக்கிறார்களோ அவ்விஷயத்தில் நீ தீர்ப்பவனாக இருக்கிறாய்! அவர்கள் (அடியார்கள்) சத்தியத்திலிருந்து எதில் கருத்து வேறுபாடு கொண்டேயிருக்கிறார்களே அவ்விஷயத்தில் உம்முடைய அனுமதின் மூலமாக நீ அவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! நிச்சயமாக நீ நாடியவர்களுக்கு நேரான வழியின் பக்கம் செலுத்த கூடியவராக இருக்கிறாய்!

உபரியான இரவுத் தொழுகைகளை தொழுவதற்கு முன்னால் எழுந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் நான்கு பிராத்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவைகளில் முதல் பிராத்தனையைப் பற்றி கூறும் போது அது இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் என்று நற்செய்தி வழங்கியுள்ளார்கள். இரண்டாம் மூன்றாம் பிராத்தனைகள் நீண்ட பிரார்த்தனையாகவும் நபி(ஸல்) அவர்கள் பிராத்தித்துள்ளார்கள். மேலும் ஆல இம்ரானின் (191லிருந்து 200வரை) கடைசி பத்துவசனங்களையும் ஓதியுள்ளார்கள். அந்த பத்து வசனங்களும் பிரர்த்தனை வடிவில் அமைந்துள்ளது. இவை மூன்ற பிரார்த்தனைகளையோ அல்லது மூன்றில் ஒன்றை மனனம் செய்து அதை ஒவ்வொரு நாளும் பேணி இறைவனுடைய அருளை பெற முயற்சிக்க வேண்டும்.

இரவுத்தொழுகை முடிந்ததும் வலப்பக்கம் சாய்தல்
நபி(ஸல்) அவர்கள் இரவு தொழுகை முடிக்கையில் ஃபஜ்ரு தொழுகைக்காக முஅத்தின் பாங்கு சொல்லி முடிந்துவிட்டால் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் முஅத்தின் இகாமத் சொல்லும் வரை வலப்புறமாக சாய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய சுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உபரியான தஹஜ்ஜுத் தொழுகையின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இரவுத் தொழுகையை முடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் சிறிதுநேரம் வலதுபக்கமாக சாய்வதை பிரியமாக்கி கொண்டுள்ளார்கள். இதற்கென தனியான காரணத்தை நபி(ஸல்) அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. மாறாக விருப்பமான அடிப்படையில் வலது பக்கமாக சிறிதுநேரம் சாய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளர்கள். நேரமும், சந்தர்ப்பமும் நமக்கு எட்டுமானால் நாமும் அவ்வாறே சிறிது நேரம் வலது பக்கம் சாய்ந்து படுத்துக்கொள்ளலாம்.

தஹஜ்ஜுத் தொழுகை தவறினால் பகலில் தொழலாமா?
மற்ற உபரித் தொழுகைகளுக்கு இல்லாத சிறப்பு இத்தொழுகையில் அமைந்துள்ளது. அதாவது இரவில் ''தஹஜ்ஜுத்'' நோய் போன்ற காரணங்களால் தொழமுடியாமல் போனால் அதை பகலில் நிறைவேற்றலாம் என்றும் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் தன் செயல்பாட்டின் மூலம் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் நோயின் காரணமாக அல்லது வேறு காரணமாகவோ இரவில் தொழுகை இழந்து விட்டால் பகலில் 12 ரக்அத்துகள் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ

உபரித் தொழுகைகளில் பேணிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழ முடியாமல் போனதால் பகலில் தொழுதுள்ளார்கள். மாறாக இதை கட்டாயம் என்று வாதிட முடியாது. சிலர் அப்படிப்பட்ட வாதத்தை எடுத்துவைக்கின்றனர். ஆனால் அது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில் ''வித்ரு'' ரக்அத்களின் எண்ணிக்கையை நாம் ஆராய்ந்தோமானால் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் ரக்அத்துகள் அமைந்திருப்பதை காணலாம். ''தஹஜ்ஜுத்'' எனும் 8 ரக்அத்துகளை தொழுதுவிட்டு 1அல்லது 3 ரக்அத்கள் தொழலாமே தவிர 5,7,9 என்ற எண்ணிக்கையில் ''தஹஜ்ஜுத்''துடன் வித்ரை தொழுதுவிட்டு. எனவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சில வேளை வித்ரு மட்டும் தொழுதுள்ளார்கள். சில வேளை ''தஹஜ்ஜு''தை தொழுது குறைந்த எண்ணிக்கை(3)யில் வித்ரை தொழுதுள்ளார்கள். அதற்கு மேற்படி அவர்கள் தொழுதது கிடையாது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் சான்றாக இருக்கிறது. இதன்மூலமாக ''தஹஜ்ஜுத்'' தொழுகை கட்டாயம் என்று இல்லாமல் பகலிலும் தொழுதுள்ளார்கள். மேலும் ஆதாரங்கள் பின்னால் தெளிவாகிறது.
''தஹஜ்ஜுத்'' தொழுகையில் கவனம் தேவை

''தஹஜ்ஜுத்'' தொழுகையின் மாண்பை அறிந்தவர்கள் அதை தினந்தோறும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சிலர் சில வேளை உடல் பலகீனமாகயிருந்தும் மிகவும் கஷ்டத்தோட அதை நிறைவேற்றுகிறார்கள். மேலும கடும் உழைப்பின் காரணமாகவோ, அல்லது இரவு விழித்ததின் காரணமாகவோ, கடுமையான தூக்கம் இருக்கும், தினந்தோறும் ''தஹஜ்ஜுத்'' தொழுகை தொழுவதில் வழக்கமுடியவர்கள் அன்றும் நிறைவேற்றியதாக வேண்டும் எனும் லட்சியத்தில் அரைத்தூக்கத்தில் உளூச் செய்து ''தஹஜ்ஜுத்'' தொழுகையை நிறைவேற்றுவார்கள். இதனால் எத்தனை ரக்அத்துகள் தொழுதார், எதை ஓதினார், என்ன பிராதித்தார் என்பதை அவர் அறியமுடியாமல் போய் விடுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட சமயங்களில் (''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழாமல் அதை பகலில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நிறைவேற்றுவது போன்று பகலில் நிறைவேற்றலாம்) நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு தொழுவதை தடுத்திருக்கிறார்கள்.

''உங்களில் எவராவது தொழுது கொண்டிருக்கும் போது கண் அயர்ந்து விடுவாரானால் அவரை விட்டும் தூக்கம் நீங்குகிறவரை தூங்கிவிடட்டும ஏனெனில் சிற்றுரக்கம் ஏற்பட்டுயிருந்தும் தொழுவாரேயானால் அவர் (இறைவனிடம்) பாவமன்னிப்பு கோருகிறாரோ அல்லது தன்னை பழிக்கிறாரோ என்பது எவருக்கு தெரியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உங்களில் ஒருவர் தொழுகையில் கண் அயர்ந்து விடுவோரானால் தாம் என்ன ஓதுகிறோம் என்பதை(ச் சரியாக) அறிவது வரை தூங்கி விடட்டும். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ அல்லது இரண்டு இரவுகளோ தொழவில்லை. அறிவிப்பவர்: ஜுன்துப்(ரலி) நூல்:புகாரி

சிலர் உபரியான ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழவேண்டுமென்பதற்காக அதை மக்கள் கட்டாயம் தொழவேண்டும் என்பதற்காக பெரியார்களின், நல்லடியார்களின் உவமைகளை முன் வைக்கிறார்கள், ஆனால் அவர்களின் சரித்திரங்கள் நமக்கு முன்மாதிரி இல்லை மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையே நமக்கு முன்மாதிரி நபி(ஸல்) அவர்கள் ''தஹஜ்ஜுத்'' தொழுகை விஷயத்தில் நடந்துக் கொண்டார்களோ அவ்வாறு தான் நடக்க வேண்டும். எனவே அதிக தூக்கம் அல்லது நோய் போன்ற நேரங்களில் முடிந்தளவு விட்டுவிட்டு நல்ல நிலையில் ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழவேண்டும். இதற்கு மேற்கண்ட பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸே நமக்கு சான்றாக திகழ்கிறது.

''தஹஜ்ஜுத்'' தொழுகைக்காக எழும் போது பல் துலக்குதல்:-
''தஹஜ்ஜுத்'' தொழுவதற்காக பல் துலக்குவதும் இதனுடைய சிறப்பம்சமாக இருக்கிறது. பொதுவாக தொழுகைக்காக உளூ செய்வார்கள். ஆனால் உளூவில் பல் துலக்குவதை நபி(ஸல்) அவர்கள் அவசியமாக்கவில்லை. ஆனால் இச்சிறப்புக்குரிற தொழுகையில் சிறப்பம்சமாக பல் துலக்குவதையும் அவசியமாக்கியிருக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ''தஹஜ்ஜுத்'' தொழுவதற்காக இரவில் எழும் போது பல் துலக்குவார்கள். அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) நூல்: புகாரி

நம்முடைய உடலில் ஆகாரம் புகுவதற்கு எந்திரமாக திகழக்கூடிய வாயை(பல்லை) எப்போழுதும் சுத்தமாக வைத்து கொள்ளலாம் நலம் என்பதை நபி(ஸல்) அவர்கள் செயல்மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.

''தஹஜ்ஜுத்'' தொழுவதை வழக்கமாக்கி கொள்ளுதல்
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல நீர் ஆகிவிடாதீர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்: புகாரி

''தஹஜ்ஜுத்'' தொழுகையின் மாண்புகளை அறிந்துக் கொண்டோர். அதை தொழ வேண்டும் என்று விரும்ப ஆரம்பத்தில் ஆர்வமாக துடிப்பாக தொழுவார்கள் சில நாட்கள் பிறகு அப்படியே விட்டுவிடுவார்கள். பிறகு ''தஹஜ்ஜுத்'' தொழுகை என்பதையே மறந்து விடுவார்கள். இதுதான் முஸ்லிம்களின் யதார்த்த நிலையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அலட்சியப்போக்கு நம்மிடம் இருக்க கூடாது. இப்படிப்பட்ட அலட்சியப் போக்கு நம்மிடம் இருக்க கூடாது என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் அவரின் செயலை பாராட்டி எனவே ''தஹஜ்ஜுத்'' தொழுகையை அனுதினமும் பேணுவீராக என்று உபதேசித்துள்ளார்கள்.

''தஹஜ்ஜுத்'' தொழுகையின் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் முழு ஆய்வையும் தெரிந்துக் கொண்டோம்; எனவே ''தஹஜ்ஜுத்'' தொழுகையை தொழுது இறைவனுடைய அருளை பெறுவோமாக!

பிற்காலத்தவரால் ''தராவீஹ்'' என்றழைக்கப்படும் ரமழான் இரவுத் தொழுகை
நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகை விஷயமாக (மக்களுக்கு அதை வலியுறுத்திக் கட்டளையிடாமல் ''ரமழானில் ஈமானோடும், நன்மைகிட்டும் வணக்கம் புரிவோரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று கூறி ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். (ரமழான் இரவுத் தொழுகை தினசரி ஜமாஅத்தாக - பலரும் சேர்ந்து தொழாமலிருக்கும்) இந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். பின்னர் அபூபக்கரு(ரழி) அவர்கள் ஆட்சிகாலத்திலும், உமர்(ரழி) அவர்களின் ஆட்சி காலத்தின் ஆரம்ப இடத்திலும் நிலமை இவ்வாறே நீடித்திருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான ''இமாம் ஜுஹ்ரீ'' அவர்கள் அறிவித்துள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

ரமழான் இரவுத் தொழுகை சில தினங்கள் மட்டும் ஜமாஅத்தாக நடத்தப்பட்டதேன்?
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் நடு நிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்து விடவே (மறுநாள்) அவர்களை விட அதிகமானோர் கூடி விட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி அவர்களும் தொழுதார்கள். காலையில் (முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது. நான்காம் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள், (இரவுத் தொழுகைக்கு வரவில்லை) சுப்ஹு தொழுகை தொழ வைத்து முடித்தவுடன் (எப்போதும் தமது சொற்பொழிவுக்கு முன் ஓதக் கூடிய) ''தஷஹ்ஹுது, அம்மா பஃது'' ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, உங்கள் நிலை எனக்கு மறையவில்லை, எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு, அவற்றை நீங்கள் தொழ இயலாது போய் விடுவீர்கள் என்பதைப் பயந்தே (நான் இரவு வெளியில் வராமல்) இருந்து விட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது. (ஆயிஷா (ரழி), புகாரீ)

மேற்காணும் அறிவிப்புகளில் ரமழான் இரவுத் தொழுகையின் மகத்தான பலன்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சில தினங்கள் மட்டுமே ரமழானுடைய இரவுகளில் இத்தொழுகை ஜமாஅத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை 11 ரகாஅத்துகளுக்கு அதிகமாக தொழுததில்லை.

அபூஸலமத்திப்னு அப்திர்ரஹ்மான்(ரழி) அவர்கள் ஒருமுறை ஆயிஷா(ரழி) அவர்களிடம் ரமழானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டதற்கு ''ரமழானிலும் அது அல்லாத மற்ற காலங்களிலும் 11 ரகாஅத்துகளை விட அதிகமாக அறவே தொழுததில்லை'' என்று கூறிவிட்டு, (முதலில்) 4 ரகாஅத்துகள் தொழுதார்கள்; அவற்றின் அழகையும், நீளத்தையும் (என்னிடம்) கேட்காதீர் (என்னால் அவற்றை எடுத்தியம்ப இயலாது, அவ்வளவு நிறைவாகம்ருந்தன) பிறகு 4 ரகாஅத்துகள் தொழுதார்கள். அவற்றின் அழகையும், நீளத்தையும் கேட்காதீர் (அவ்வளவு நிiவாககியிருந்தன) பிறகு 3ரகாஅத்துகள் தொழுதார்கள் என்று கூறினார்கள். (அபூஸலமத்துப்னு அப்திர் ரஹ்மான்(ரழி) புகாரீ)

நபி(ஸல்) அவர்கள் ரமழான் நடு இரவில் 8 10 3 பதினொன்று என்ற அமைப்பில் தான் தொழ வைத்துமுள்ளார்கள்.

''நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ரமழானில் ஓரிரவு 8 ரகாஅத்துகளுக்கு வித்ரும் தொழ வைத்தார்கள். மறு நாள் நாங்கள் அவர்களின் வருகையை எதிர்பார்த்து பள்ளியில் கூடியிருந்தோம். அவர்கள் அதிகாலை வரை பள்ளிக்கு வரவில்லை. பிறகு நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்(உபரியான) வித்ரு தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விட்டு என்பதைப் பயந்து (இருந்து) விட்டேன் என்றார்கள். (ஜாபிரு பின் அப்தில்லாஹ்(ரழி) இப்னு குஜைமா)

ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை ரமழானில் எவ்வாறிருந்தது என்று வினவப்பட்ட போது, ''ரமழானிலும் அது அல்லாத காலங்களிலும் 11 ரகாஅத்துகளுக்கு அதிகமாக அவர்கள் தொழுததில்லை'' என்றுஅவர்கள் பதில் அளித்திருப்பதால் மூலம், ரமழானுக்கென்று அவர்கள் விசேஷமாக எதுவும் தொழாமல், வழக்கமாக - தினசரி தொழுது கொண்டிருந்த 8 10 3 பதினொரு ரகாஅத்துகள் மட்டுமே அவர்கள் தொழுதுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ரமழான் இரவுத் தொழுகை பதினொரு ரகாஅத்துகள் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம்

ஒருமுறை உபையுப்னுகஃபு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ரமழானின் இரவில் நான் ஒரு காரியம் செய்துவிட்டேன் என்றார். அதற்கு அவர் உபையு அவர்களே! அது என்ன? என்றார்கள். அப்போது அவர் என் வீட்டிலுள்ள பெண்கள் நாங்கள் குர்ஆன் (அதிகமாக) ஓத இயலாதவர்கள் ஆகையால் (நீர் எங்களுக்கு தொழ வைத்தால்) உமது தொழுகையைப் பின்பற்றி நாங்களும் தொழுது கொள்கிறோம் என்றார்கள். ஆகவே நான் அவர்களுக்கு 8 ரகாஅத்துகள் தொழ வைத்துவிட்டு, பிறகு வித்ரும் தொழ வைத்தேன் என்றார். அதற்கு அவர்கள் ஏதும் கூறாமல் மௌனமாயிருந்தார்கள். ஆகவே அவர்களின் அந்த மௌனமானது அவர்களின் அங்கீகாரம் என்ற வகையில் சுன்னத்தாகிவிட்டது.
(ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி) அபூயஃலா, தப்ரானீ)

உமர்(ரழி) அவர்கள் ரமழானுடைய இத்தொழுகை தினசரி ரகாஅத்துடன் நடைபெற ஏற்பாடு செய்தல்

''நான் ரமழானில் ஓரிரவு உமர்(ரழி) அவர்களுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது மக்கள் பல்வேறு குழுவினராக இருந்து கொண்டிருந்தார்கள். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். மற்றும் சிலர் தொழுக, அவர்களைப் பின்பற்றி பலரும் தொழுது கொண்டிருந்தார்கள். அதுசமயம் உமர்(ரழி) அவர்கள இம்மக்கள் அனைவரையும் ஒரே இமாமுக்குப்பின் தொழும்படி செய்தால் மிகவும் சிறப்பாயிருக்கும் என்று தாம் முடிவு செய்து, உபையுபின்கஃபு(ரழி) அவர்களுக்குப் பின்னால் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தார்கள்.

பிறகு மற்றொரு இரவு அவர்களுடன் புறப்பட்டு வந்தேன், மக்கள் அனைவரும் ஒரே இமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டு, ''புதிய இவ்வேற்பாடு மிகச்சிறப்பாயுள்ளது'' என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் இரவின் பிற்பகுதியின் சிறப்பை மனதில் கொண்டவர்களாக, ''இவர்கள் நின்று தொழுது கொண்டிருக்கும் இந்நேரத்தைவிட, இவர்கள் (தொழுதுவிட்டு) உறங்கும் அந்நேரமே (தொழுவதற்கு) மேலானதாகும் என்று கூறினார்கள். அப்போது மக்கள் முன்நேரத்தில் தொழுது கொண்டிருந்தனர்.
(அப்துர்ரஹ்மான் (ரழி) புகாரீ) மற்றொரு அறிவிப்பில் உபையுபின் கஃபு(ரழி) அவர்களையும், தமீமுமுத்தாரீ(ரழி) அவர்களையும் உமர்(ரழி) அவர்கள் 11 ரகாஅத்துகள் தொழவைக்கும் படி கட்டளையிட்டார்கள் என்று . (ஸாயுபுபின்யஜீத்(ரழி) முஅத்தா மாலிக்)

இத்தொழுகையை இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதிகளாகிய அனைத்துப் பகுதியிலும் தொழுதல்
''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ரமழான்) நோன்பு நோற்றோம், ரமழானில் 7 நாட்கள் மீதமிருக்கும் வரை (22 நாட்கள் வரை) எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. அதற்குப் பிறகு (23-வது நாள்) இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை (சுமார் இரவு 10 மணி வரை எங்களுக்கு தொழ வைத்தார்கள்.
பிறகு 24-வது நாள் தொழ வைக்கவில்லை. பிறகு 25-வது நாள் இரவில் பாதிவரை (சுமார் 12மணி வரை) தொழவைத்தார்கள். பிறகு ரமழானில் மூன்று நாள் மீதமிருக்கும் வரை அவர்கள் தொழ வைக்கவில்லை. 27-வது நாள் ஸஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் அஞ்சும் வரை (சுமார் 4 மணி வரை) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகைக்கு தமது மனைவிமார்களையும், குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டார்கள். (ஹதீஸ் சுருக்கம், அபூதர்ரு(ரழி) திர்மிதீ)

மேற்காணும் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத்தான் பலநேரங்களில் தொழுதுள்ளார்கள். இதை உற்று நோக்கும் போது இஷா தொழுகைக்குப் பின் ஸஹர் நேரம் முடிய - சுப்ஹு நேரம் வருவதற்கு முன்னால் வரை தொழப்படும் தொழுகை தான் அது என்பது புலனாகிறது.
இதற்கு ஹதீஸ்களில் கியாமுல்லைல் - இரவுத் தொழுகை, தஹஜ்ஜுது, வித்ரு என்ற பல பெயர்கள் காணப்படுகின்றன. ''தான் தொழுகை'' என்ற பெயரோ, பிற்காலத்தில் ரமழானுடைய மாதத்தில் இரவின் முற்பகுதியில் தாமாக அதிகப்படுத்தி தொழப்படும் 20 ரகாஅத்வுத் தொழுகைக்கு மக்கள் தாமாக சூட்டிக் கொண்டதோர் பெயராகும்.

''வித்ரு'' என்பது இரவுத் தொழுகைக்குரிய பெயர்களில் ஒன்று தான் என்பதற்குச் சான்று.
''நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி ஆகியவற்றில் ஸஹர் நேரம் வரை (பஜ்ரு முன்பு வரை) வித்ரு தொழுதுள்ளார்கள். (ஆயிஷா(ரழி) புகாரீ, முஸ்லிம்)

மேலும் ஜாபிருபின் அல்லாஹ்(ரழி) அவர்களின் வாயிலாக ''இப்னுகுஜைமா''வில் பதிவாகியள்ள இதே தொடரில் மேற்கண்ட அறிவிப்பில் ''நீங்கள் புறப்பட்டு வந்து எங்களுக்கு தொழுகை நடத்துவீர்கள் என்று நாங்கள் மிக்க ஆவலோடிருந்தோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் இந்த (உபரியான) ''வித்ரு தொழுகை'' உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடும் என்று பயந்து இருந்து விட்டேன் என்றார்கள்'' என்ற வாசகமே நபி(ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை ''வித்ரு'' என்று கூறியிருப்பதன் ''வித்ரு'' என்பதும் இரவுத் தொழுகைக்குரிய மற்றொரு பெயர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது பொதுவாக இஷாவுக்குப் பிறகு தொழக்கூடிய இரவுத்தொழுகை ஒற்றைப் படையாகத் தொழ வேண்டியிருப்பதால் அதை ''வித்ரு'' என்று அழைக்கப்படுகிறது.

எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் 8 10 3 தொழுவது நபிவழியாகும் (ஸுன்னத்) இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது. அதிகப்படுத்தி ஜமாஅத்தாக தொழுவது நிச்சயமாக நபிவழியே அல்ல, ஜமாஅத்தாக அல்லாமலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயம் செய்யாமலும் விரும்புகிறவர்கள் விரும்பிய எண்ணிக்கையில் எவ்வித நிர்ப்பந்தமோ, சடைவோ இல்லாமல் தனித்தனியாக உபரி வணக்கமாக (நஃபிலாக) தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.

ரமளானில் இரவுத்தொழுகை
அருள்மறையாம் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமாம் ரமளானில் இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாம் கடமையான நோன்பு நோற்பதை கடமையாக்கியிருக்கிறான் இப்புனிதமிக்க மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் தராவீஹ் என்று பெயர் சூட்டப்பட்ட இரவை தொழுகையைப்பற்றி சில கூடுதலான சிறப்புகளை வழங்கியுள்ளார்கள்.

புனிதமிக்க மாதமான பாவங்கள் மன்னிக்க படக்கூடிய, புனிதம் நிறைந்த இறைவனின் அருள்பொழியக் கூடிய மாதமான ரமளானில் நாம் அனைவரும் இரவுத் தொழுகையை சரிவர பேணி இறையருளை பெறுவோமாக.

திங்கள், 12 டிசம்பர், 2011

இறைதியானம்

ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் என் மீது அதிகமாக உள்ளன. ஆகவே நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளக் கூடிய ஒரு விஷயத்தை எனக்கு அறிவித்துத் தாருங்கள் என வேண்டினார்.அதற்கு ரஸுல் (ஸல்) அவர்கள், உமது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வின் திக்ரிலே திளைத்திருக்கட்டும் எனப் பகர்ந்தார்கள். ஆதாரம் : திர்மிதி அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் பிஷ்ர் (ரலி)

முஃமின்கள் எல்லா வேளைகளிலும் அல்லாஹ்வின் நினைவில் இருக்க வேண்டும் என அல்குர்ஆன் கூறுகிறது.

முஃமின்களே! அல்லாஹ்வை மிக அதிகமாக திகர் செய்யுங்கள். காலையிலும் மாலையிலும் அவனை தஸ்பீஹ் செய்யுங்கள். (33:41-42)

இது தியானத்தில் உயர் அந்தஸ்து உடையதாகும். அல்லாஹ்வின் நினைவு உள்ளத்தில் ஆழப் பதிந்திருக்க வேண்டும்.

தியானத்தின் பலனை விளங்கிக் கொண்ட, அதனுடைய சிறப்பைப் புரிந்து கொண்ட எந்த நல்லடியாரும் அவரின் ஆயுள் காலத்தின் அற்ப நேரத்தைக் கூடி இறைவனின் நினைவின்றி வீணாக்கியதில்லை. அல்லாஹ்வின் பெயரை மொழிதல், தியானம் (திக்ர்) செய்தல் முதலியவை மாபெரும் சிறப்பைக் கொண்டுள்ளன. எனவே தான்,

எந்நேரமும் அல்லாஹ்வின் திக்ரால் உமது நாவு திளைத்திருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.

திக்ர் என்பது நினைத்தல், மொழிதல் என்ற பொதுவான கருத்தை உணர்த்துவதாக இருந்தாலும் இஸ்லாமிய பரிபாஷையில் அல்லாஹ்வின் நினைவையே அப்பதம் குறிக்கிறது. ஓர் அடியான் அல்லாஹ்வின் விருப்பத்துக்கேற்ப அவனது திருப்தியை எதிர்பார்த்து செயற்படுவதையும் அல்குர்ஆன் திக்ரு என அழைக்கிறது.

விசுவாசிகளே! உங்களது செல்வங்களும் குழந்தைகளும் அல்லாஹ்வின் திக்ரை விட்டும் உங்களை திசை திருப்பாதிருக்கட்டும். எவரேனும் இவ்வாறு செய்தால் அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர் தாம். (அல்முனாபிகூன் : 9)

தொழுகையின் நோக்கம் அல்லாஹ்வின் திக்ரே என அல்குர்ஆனின் சூரா அல்அன்கபூத் குறிப்பிடுகிறது.

(நபியே!) வஹி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட (இவ்) வேதத்தை நீர் ஓதி, தொழுகையைக் கடைபிடித்து வாரும். ஏனென்றால் நிச்சயமாகத் தொழுகை, மானக்கேடான காரியங்களிலிருந்தும் (மனிதனை) விலக்குகிறது. அல்லாஹ்வை (மறக்காது) நினைவில் வைத்து (திக்ர் செய்து) வருவது, நிச்சயமாகப் பெரிது. அன்றி, நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (29:45)

திக்ரின் மகிமை பற்றிக் கூறும் அல்குர்ஆன் வசனங்கள் சில பின்வருமாறு :

நீங்கள் என்னைத் தியானியுங்கள். நானும் உங்களை நினைத்து அருள் புரிந்து வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (எனக்கு நன்றி செலுத்தாத) நிராகரிப்போராகி விடாதீர்கள். (2:152)

(நபியே!) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) உரத்த குரலிலன்றியும், காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் திருநாமத்தை துதி செய்த கொண்டிருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் நீரும் இருக்காதீர். (7:205)

நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அதிகமாக திக்ரு செய்யுங்கள். (அல்ஜும்ஆ :10)

இவை தவிர அல்குர்ஆனில் இன்னும் அநேக இடங்களில் திக்ரின் மகிமை விளக்கப்பட்டுள்ளது. பெருமானார் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பின்வரும் நபிமொழி முக்கியமானது :

தன் இறைவனை நினைவுகூரும் மனிதன் உயிருள்ள ஒரு மனிதனுக்கு ஒப்பாவான். அல்லாஹ்வை நினைவு கூராத மனிதன் உயிரற்ற பிணத்திற்கு ஒப்பாவான். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் நினைவு உள்ளத்திற்கு உயிரூட்டுகிறது. அதனைக் குறித்து அலட்சியமாய் இருப்பது மனிதனின் உள்ளத்தை மரணிக்கச் செய்து விடுகிறது என்பதே இந்நபி மொழி கூறும் கருத்தாகும். மனித உடலின் வாழ்க்கைக உணவைக் கொண்டே அமைந்துள்ளது.

உணவு கிடைக்காவிட்டால் இந்த உடல் இறந்து விடுகிறது. அதுபோலவே இந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மாவுக்குரிய உணவான இறைதியானம் கிடைக்காது போய் விட்டால் அதற்கும் மரணமேற்பட்டு விடுகிறது. ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

யார் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் 33 தடவை அல்லாஹ்வை சுப்ஹானல்லாஹ் எனப் போற்றுகிறாரோ, 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ்வைப் புகழ்கிறாரோ, 33 தடவை அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துகிறாரோ முடிவில் நூறாவதாக லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஐஷயின் கதீர் எனக் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். கடலின் நுரையளவு அப்பாவங்கள் இருந்த போதிலும்சரியே! (முஸ்லிம்)

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் :

அல்லாஹ் கூறுகிறான் : என்னை என் அடியான் நினைவு கூரும் போதும் என் நினைவில் அவனது உதடுகள் இரண்டும் அசையும் போதும் நான் அவனுடன் இருக்கிறேன். (புகாரி)

அவனுடன் இருக்கிறேன் என்பதன் பொருள், அல்லாஹ் அந்த அடியானைத் தன் பாதுகாப்பில், கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறான். தீமை செய்தல், மாறு செய்தல் என்பற்றை விட்டு அவனை காப்பாற்றுகிறான் என்பதாகும்.

மேலும் இந்த ஹதீஸ், அல்லாஹ்வை உள்ளத்தின் முழு ஈடுபாட்டுடன் நாவினால் நினைவு கூர வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
மற்றுமொரு முறை,

முபர்ரிதூன்கள் (அல்லாஹ்வின்) திருப்பொருத்தத்தின் பக்கமும் உயர் அந்தஸ்துக்களின் பக்கமும் முந்தி விட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முபர்ரிதூன்கள் என்றால் யார்? எனத் தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், திக்ரு செய்யும் ஆண்களும், திக்ரு செய்யும் பெண்களும் எனப் பதிலளித்தார்கள். (முஸ்லிம்)

இவ்வாறாக அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய முறையில் திக்ரு செய்வதால் அளப்பரிய நற்கூலிகளை உடையவர்களாக நாம் ஆகி விடலாம்.

ரஸுல் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்த வசனங்களையும், துஆக்களையும் மொழிந்து அல்லாஹ்வை திக்ரு செய்வது தனித் தனியே நிறைவேற்றப்படுவது மிகவும் சிறந்தது. எனவே தான், தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து கண்ணீர் சிந்திய ஒரு மனிதன் எவ்வித நிழலும் இல்லாத மஹ்ஷர் வெளியில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலின் கீழ் நிழல், பெறும் ஏழு கூட்டத்தாருள் ஒருவராவார். தனிமையில் திக்ரு செய்வதை வலியுறுத்துவதாக பின்வரும் குர்ஆன் வசனம் காணப்படுகிறது.

(நபியே!) உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், பயத்தோடும் (மெதுவாக) உரத்த குரலிலன்றியும், காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் திருநாமத்தைத் துதி செய்து கொண்டிருப்பீராக!.. (அல் அஃராப் : 205)

எனினும் கூட்டாக இருந்தும் இதனை செய்ய முடியும் என்பதற்கு வேறு பல ஆதாரங்கள் காணப்படுகின்றது. (திக்ரு என்பது இறைவனை நினைவு கூறக் கூடிய சொற்பொழிவுகளையும் குறிக்கும்)

ஒரு கூட்டம் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக அமர்ந்து விட்டால் மலக்குமார்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் ரஹ்மத் அவர்களை அணைத்துக் கொள்ளும். மன அமைதி அவர்களை நோக்கி இறங்கும். அவர்களை அல்லாஹ் தன்னோடு இருப்பவர்களோடு நினைவு கூறுவான். (முஸ்லிம்)

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் ரஸுல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :

எவர்கள் ஒரு சபையில் அமர்ந்து அல்லாஹ்வின் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வார்களோ அவர்கள் செத்த கழுதையைத் தின்று விட்டு கலைந்து செல்பவர்களைப் போல் ஆவார்கள். இந்த சபை அவர்களின் கைசேத்திற்கு காரணமாய் அமையும். (அபூதாவூத்)

எம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவு இறைதியானத்தில் ஈடுபடுவது அவசியம். அதுபோல எந்நிலையில் இருந்த போதும் இறைதியானத்தை மேற்கொள்பவர்களாக நாம் ஆக வேண்டும். அமர்ந்த வண்ணம், நின்ற வண்ணம், நடந்த வண்ணம், வேலைகளைச் செய்த வண்ணம் கூட திக்ரு செய்வதால் அல்லாஹ்விடத்தில் பெரும் அந்தஸ்தை அடையலாம்.
அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது :

(அறிவுடைய) இத்தகையோர், (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், தங்கள் படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்கள் பூமியின் படைப்பைப் பற்றி சிந்தித்து.. .. (ஆலு இம்ரான் : 191)

இறைதியானத்தில் அல்குர்ஆன் ஓதுவதும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. ஓர் அடியான் இதற்கெனவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். குர்ஆனை தினமும் குறித்தளவு (ஒரு ஜுஸ்வு அல்லது அரை ஜுஸ்வு அல்லது முடியுமான அளவு) ஓதுவதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்து கொள்ள வேண்டும்.
இன்று இரண்டு பேர் ஒன்று கூடி விட்டால் மற்றவரின் குறைகளைப் பேசி பாவத்தைச் சம்பாதிப்பதே பெரும்பாலானோரின் பழக்கமாகி விட்டது. இது பெரும் பாவமாகும். இவற்றை விடுத்து இறை தியானத்தில் ஒவ்வொரு சபையையும், சந்திப்பையும், நேரத்தையும் கழிப்போமேயானால் தீமைக்குப் பதில் நன்மைகள் விளையும். ஒவ்வொரு நேரத்திலும் ஓத வேண்டிய துஆக்கள் ஹதீஸ்களில் வந்துள்ளன. இயன்றளவு துஆக்களை மனனம் செய்து கொள்ளுங்கள். இவற்றின் விபரங்களை அறிந்து கொள்ள இன்று அநேகமான நூல்கள் காணப்படுகின்றன. இவற்றை வாங்கி மனனம் செய்து எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யும் பயிற்சியை ஏற்படுத்தலாம்.

இறைவனின் அன்பைப் பெறுவதற்கான வழிமுறைகளுள் மிகப் பிரதானமானது இறைதியானமாகும். எனவே, இறைதியானத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் நல்லடியார்களாக மாற அல்லாஹ் எமக்கு அருள்புரிவானாக!

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

லுஹாத் தொழுகை

லுஹாத் தொழுகை உபரித் தொழுகைகளில் ஒன்றாக லுஹாத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். லுஹாத் தொழுகையை தானும் தொழுததுடன் தோழர்களுக்கும் உபதேசித்துள்ளார்கள்.


1என்னுடைய நண்பர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் நோன்பு நோற்குமாறும் இரண்டு ரக்அத் லுஹாத் தொழுகையை தொழுமாறும். இரவில் தூங்குவதற்கு முன்னால் வித்ரு தொழுகையை தொழுமாறும் எனக்கு உபதேசித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதா¥த், நஸயீ, அஹமத்


2 -ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்பை நோற்குமாறும், லுஹாத் தொழுகை தொழுமாறும் வித்ரு தொழுகை தொழாமல் தூங்கக்கூடாது என்று எனது நண்பர் நபி(ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்: முஸ்லிம்


3 -நீங்கள் காலை விழிக்கும் போது உங்களுடைய ஒவ்வொரு உருப்புகளுக்கும் தர்மம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு தடவை (ஸுப்ஹானல்லாஹ்) என்று தஸ்பீஹ் சொல்வதும் ஸதாகவாகிறது. ஒவ்வொரு தடவை (அல்ஹம்துலில்லா) என்று சொல்வதும் ஸதகாவாகிறது. ஒவ்வொரு தடவை (லாயிலாஹ இல்லல்லாஹ்) சொல்வதும் ஸதகாவாகிறது. ஒவ்வொரு தடவை (அல்லாஹு அக்பர்) என்று சொல்வதும் ஸதகாவாகிறது. நன்மையை ஏவுவதும் ஸதகாவாகிறது தீமையைத்தடுப்பதும் ஸதகாவாகிறது. இவை அனைத்திற்கும் லுஹாவின் இரண்டு ரக்அத்துகள் தொழுவது போதுமானதாகிவிடுகிறது. அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதா¥த்


4 -நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தாலேயன்றி (வேறு நேரங்களில்) தொழமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் ஷகீக(ரலி) நூல்: முஸ்லிம்


5 -நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை ஆனால் நான் தொழுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அஹமத்


லுஹாத் தொழுகையை தொழுமாறு உபதேசித்த நபி(ஸல்) அவர்கள் அதனுடைய நேரத்தையும் குறிப்பிட்டுள்ளோர்கள்.


6 -(காலைநேரத்தில்) நபி(ஸல்) அவர்கள் குபாவாசிகளிடம் (புறப்பட்டு) வந்தபோது அவர்கள் தொழுவதை கண்டார்கள். அவ்வாபீன்களின் (இறைவனிடம் மீளுபவர்கள்) தொழுகை வெப்பமேறிய மணல் அதனால் ஒட்டக குட்டிகளின் கால்கள் சுட்டோரிக்கும் உள்ள நேரமேயாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜைதுபின் அர்கம் நூல்: முஸ்லிம், திர்மிதி


லுஹாத் தொழுகையின் நேரம் சூரியன் உச்சிக்குவருமுன் உள்ள நேரமாகும். அதாவது முற்பகலாகும் என்பதை நபி(ஸல்) அவர்கள் உவமையின் மூலமாக விளக்கியுள்ளார்கள். அது ஃபஜர் மற்றும் லுஹர்ருக்கு இடைப்பட்ட நேரமாகும் எண்ணமுடிகிறது.


லுஹாத் தொழுகை எத்தனை ரத்அத்கள் தொழலாம் என்பதை காண்போம்.


7 -லுஹாத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழலாம் நபி(ஸல்) அவர்கள் எனக்கு இரண்டு ரக்அத்கள் தொழுமாறு எனக்கு உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்


8 -உடல் பருமனாக இருந்த ஓர் அன்ஸாரித் தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து உங்களிடம், சேர்ந்து (நின்று) என்னால் தொழ இயலவில்லை என முறையிட்டார். மேலும் அவர்களுக்காக உணவு சமைத்து, விருந்திற்காக தம் இல்லத்திற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக பாயின் ஓர் ஓரத்தில் தண்¡ர் தெளிந்து பதப்படுதினார். நபி(ஸல்) அவர்கள் அதன் மீது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.


நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுவார்களா? என்று அனஸ்(ரலி) இடம் கேட்டேன் அதற்கவர்கள் அன்றையதினம் தவிரவேறு எப்போதும் தொழ நான் பார்த்ததில்லை என விடையளித்தார்கள் என்று இப்னுல் ஜாரூத் குறிப்பிட்டார். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி


லுஹாத் தொழுகையை நான்காக தொழலாம்


9 -நபி(ஸல்) அவர்கள் நான்கு ரக்அத் லுஹாத் தொழுகை தொழுவார்கள் மேலும் மாஷா அல்லாஹ் அதைவிடவும் அதிகப்படுத்தியும் தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹமத்


லுஹாத் தொழுகையை எட்டு ரக்அத்களாக தொழலாம்.


10 -மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் எனது இல்லத்திற்கு வந்து குளித்துவிட்டு எட்டு ரக்அத்கள் (லுஹாத் தொழுகை தொழுதார்கள். அதை விட சுருக்கமாக வேறு எந்த தொழுகையையும் அவர்கள் தொழ நான் பார்த்ததில்லை ஆயினும் அவர்கள் ருகூவையும், ஸுஜுதையும் முழுமையாக செய்தார்கள். அறிவிப்பவர்: உம்முஹானி(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


மேலும் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை எட்டு ரக்அத்களாக தொழுதார்கள் என்று அறிவிக்கும் செய்தி ஹிப்னுஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


11 -நான் நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் எட்டு ரக்அத்கள் லுஹாத் தொழுகையை தொழுததை நான் பார்த்தேன். அறிவிப்பவர்:அனஸ்பின்மாலிக்(ரலி) நூல்கள்: அஹமத், இப்னுகுஸைமா, ஹாகிம்


உபரியான லுஹாத் தொழுகை பற்றி நபி(ஸல்) அவர்களின் அதை தொழுவதினால் ஊந்தக்கூடிய உபதேசங்கள் அத்தொழுகையின் நேரம் மற்றும் ரக்அத்துகளின் எண்ணிக்கை ஆகியவை கண்டோம்.


அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸ்கள் வாசகர்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். காரணம் நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுததாக நான் பார்த்ததில்லை என்கிறார்கள். ஆனால் மற்றுமொரு ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்துகள் எட்டுரக்அத்துகள் லுஹாத் தொழுததாக அறிவிக்கிறார்கள், எப்படி அவர்கள் பார்க்காமல் லுஹாத் தொழுகையின் தொழுகையின் எண்ணிக்கை அறிவிக்கிறார்கள் என்று ஐயம் ஏற்படலாம். அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸ்கள் முரண்பாடில்லாமல் புரிய வேண்டுமெனில் அறிஞர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் வீட்டில் இல்லாமைதான் ஆயிஷா(ரலி) அவர்கள் பார்க்காததற்கு காரணம் என்கின்றனர். ஆனால் இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் விளக்கும்போது அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ''நான் நபி(ஸல்) அவர்கள் தொழுததாக பார்க்கவில்லை என்பதற்கு தொடர்ந்து தொழுததாக நான் பார்க்கவில்லை என்று தான் விளங்கவேண்டும் என்றும் ''ஆனால் நான் தொழுவேன்'' என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் கருத்துக்கு நான் தொடர்ந்து தொழுவேன் என்று விளங்க வேண்டும் என்று கூறுகிறார். நூல்: ஃபத்ஹுல்பாரி, (பக்கம் ஏஐ) ஹதீஸ்எண் 1177 இமாம் பைஹகீ(ரஹ்) அவர்களின் கருத்தை வலுஊட்டும் வண்ணமாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸே ஆதாரமாக உள்ளது.


12 -நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகை தொழுவார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தாலேயன்றி (வேறு நேரங்களில்) தொழமாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீம்(ரலி) நூல்: முஸ்லிம்


மேற்கண்ட ஹதீஸ் லுஹாத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்துள்ளார்கள் என்பதை தெளிவாக்கிறதல்லவா என்று இந்த அடிப்படையில் தான் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் லுஹாத் தொழுகையின் எண்ணிக்கையை அறிவித்துள்ளார்கள் என்பதை ஐயமில்லாமல் விளங்கி கொள்ளலாம்.

ஞாயிறு, 20 நவம்பர், 2011

முஹர்ரம்

நபி (ஸல்)அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்நாளில் யாரும் போர் புரிவதில்லை. இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் ஃபிர்அவ்னிடமிருந்து இறைவன் ஈடேற்றம் பெறச்செய்தான்,


நபி (ஸல்) அவர்களின் சொல்படி முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ம்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்து, இந்நாளில் நோன்பு வைப்பது சென்ற ஆண்டில் செய்துவிட்ட சிறிய பாவங்களை போக்கிவிடும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.


முஹர்ரம் நாளில் நிகழ்ந்தவைகள்.


இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.


1- இப்றாஹீம் (அலை) அவர்கள் நம்ரூதின் எரிகுண்டத்திலிருந்து விடுதலைப்பெற்றது இந்நாளில்தான்


2- இப்றாஹீம் (அலை) அவர்கள் பிறந்ததும் இந்நாளில்தான்


3- இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு கலீல் خليل என்னும் பட்டம் இறைவனால் சூட்டப்பட்டதும் இந்நாளில்தான்


4- அய்யூப் (அலை) அவர்கள் நோயில் இருந்து குணம் பெற்றதும் இந்நாளில்தான்


5- ஈஸா (அலை) அவர்கள் விண்ணகம் உயர்த்தப்பட்டதும் இந்நாளில்தான்


6-உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதும் இந்நாளில்தான்


7-நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் இருந்து கரை இறங்கியதும் இந்நாளில்தான்


8-யூனுஸ் (அலை) அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளிவந்ததும் இந்நாளில்தான்


9-தாவூத் (அலை) அவர்ளின் பாவமன்னிப்பு இறைவனால் ஏற்கப்பட்டதும் இந்நாளில்தான்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும், உழ்ஹிய்யாவின் (குர்பாணி) சட்டங்களும்.

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும், ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான், ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும், உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும், மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் - புகாரி, முஸ்லிம்

2-உபரியான தொழுகைகள், நோன்புகள், தர்மங்கள், உறவினர்களுக்கு உதவுவது, குர்ஆன் ஓதுவது, பாவமன்னிப்பு தேடுவது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.

குறிப்பு:- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் - புகாரி,முஸ்லிம்

3- அரஃபா நோன்பு:- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும், அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-முஸ்லிம்

குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது, ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். ஆதாரம் புகாரி, முஸ்லிம்

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும், பள்ளிவாசல், வீடு, கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது, துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத்

இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள், இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ஆதாரம் - புகாரி

பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.

5- ஹஜ் பெருநாள் தொழுகை, இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும், நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா (குர்பாணி) என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும், இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

கொம்புள்ள, கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக (குர்பாணி) கொடுத்தார்கள், அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள். ஆதாரம் - புகாரி

உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்ஆடு. மாடு, ஒட்டகம் (புகாரி)

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் (திர்மிதி)

மாட்டிலும், ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம். (திர்மிதி)

உழ்ஹிய்யாவிற்கான (குர்பாணி) கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது

கண் குறுடு, கடுமையான நோயானவை, மிகவும் மெலிந்தவை, நொண்டியானவை, அங்கங்கள் குறையுள்ளவை.

நேரம்ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்,
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக (குர்பாணி) ஆகாது, அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.

யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் - புகாரி,முஸ்லிம்

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

அறுக்கும் முறைஆடு, மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும், (முஸ்லிம்)
ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)

அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)

உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறைஉழ்ஹிய்யா (குர்பாணி) கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ, தோல்களையோ, மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது. குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள், அவைகளின் மாமிசம், தோல், ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும், அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள், அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:- புகாரி,முஸ்லிம்

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக்கொள்ளங்கள், தர்மமும் செய்யுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுப்பவருக்கு மாத்திரம்தான், அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஹஜ் செய்வது எப்படி

அல்லாஹ் சொல்கிறான்
وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான் (அல்குர்ஆன் 2:195)

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். (இந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:196)

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:197)

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ''மஷ்அருள் ஹராம்'' என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். (அல்குர்ஆன் 2:198)

பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:199)

ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், ''எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு'' என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (அல்குர்ஆன் 2:200)

இன்னும் அவர்களில் சிலர், ''ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:202)

ஹஜ் செய்யும் முறைகள் மூன்று வகைகளாகும்
1-தமத்து
2-கிரான்
3-இஃப்ராத்

1-தமத்து: என்பது உம்ரா செய்துவிட்டு பின் துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ்ஜீக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது

2-கிரான் : என்பது உம்ரா செய்து அந்த இஹ்ராமிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது

3-இஃப்ராத் : என்பது ஹஜ்ஜீக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது

தல்பியா (வாசகம்) கூறும் முறை:
அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக' .
இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.)

ஹஜ் தமத்து செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்
3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
4-தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்
5-இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ம் நாள் வரை காத்திருக்க வேண்டும் 8ஆம் நாள் அன்று ஹஜ்ஜீக்காக இஹ்ராம் அணியவேண்டும்.

ஹஜ் கிரான் செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்யவேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்
3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
4-தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்

ஹஜ் இஃப்ராத் செய்யும் முறையும் நிய்யத்தும்
1- மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2- மக்காவாசிகளும் (மக்காவில்) அங்கு தங்கியிருப்போரும் மீக்காத்திற்கு வரவேண்டியதில்லை தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம்
3- தவாஃபுல் குதூம் செய்யவேண்டும்
4- ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
5- தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்;

நாள் : துல் ஹஜ் பிறை 8 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்
மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்மு (சேர்த்து) செய்யாமல் அந்தந்த வேளைகளில் நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும்

நாள் : துல் ஹஜ் பிறை 9 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்
1- சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கி செல்ல வேண்டும் அங்கு ளுஹரையும் அஸரையும் சேர்த்து ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஓரு பாங்கு இரண்டு இகாமத்களுடன் இரண்டு இரண்டு ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும், அரஃபாதினத்தில் இறைவனை தியானித்தல், குர்ஆனை ஓதுதல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது சுன்னத்தாகும் துஆ செய்யும்போது கிப்லாவை முன்னோக்குவது நபி (ஸல்) அவர்களைப்போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும், அரஃபாதினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல.

2- சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்கு செல்லவேண்டும், முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு பாங்கு இரு இகாமத்துடன் மக்ரிப் மூன்று ரக்அத்தும் இஷாவை இரண்டு ரக்அத்தாகவும் தொழவேண்டும்

3- மினாவில் பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அவற்றை மினாவிலும் எடுத்துக்கொள்ளலாம்

4- முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்ரு மற்றும் துஆக்களை அதிகப்படுத்த வேண்டும், சூரியன் உதிக்கும் முன்பு வரை அல் மஷ்அருல் ஹராமில் நின்று துஆசெய்வது விரும்பத்தக்கது, பலவீனமானவர்கள் நடு இரவுக்குப்பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்பட்டு மினாவந்துவிடலம்.

5- சூரியன் உதயமாகுமுன் மினாவைநோக்கிப் புரப்படவேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம் -மேலே கூறப்பட்ட இரண்டு செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

3-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

4-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

குறிப்பு: நிங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும். -

(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் கிரான்; செய்யக்கூடியவர்கள்
1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும் -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய) விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்
5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

குறிப்பு: நீங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் தமத்து செய்யக்கூடியவர்கள்
1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் கல்லெறிவதற்கு முன்பே தலையை மழிந்து விட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) : புகார், முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) விரைவுபடுத்தினார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா) அடையும் வழியில் புறப்பட்டார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா)அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள் ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள் சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள் பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள் : ஜாபிர் (ரலி) : முஸ்லிம் - சுருக்கம்.

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன் அங்கே அடிதடி இல்லை விரட்டுதல் இல்லை வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என்பது போன்ற கூச்சால் குலப்பபம் இல்லை : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி) : நஸயீ, திர்மதி, இப்னுமாஜா

நாள் : துல்ஹஜ் பிறை 11 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 12 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும், விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று தவாஃபுல் விதாஃவை செய்து விட்டு ஊருக்கு பயணமாகலாம் அப்படி சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து செல்லமுடியவில்லையென்றால் அடுத்தநாள் அங்கு தங்கவேண்டும் குறிப்பிடப்பட்ட (11,12,13)நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் : அல் குர்ஆன் 2:203.

நாள் : துல்ஹஜ் பிறை 13 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-13 ஆம் நாள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

2-மினாவிலிருந்து மக்கா செல்லுதல்

3-தவாஃபுல் விதா செய்தல் இது வாஜிபாகும் இதை விட்டால் பலி கொடுக்கவேண்டும் ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.

குறிப்பு: ஹஜ்ஜின் நாட்களில் குர்ஆன் ஓதுதல் துஆ செய்தல் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பமான சூல் நிலை ஆகவே வீணான பேச்சுக்கள் தர்க்கங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும் (அல் குர்ஆன் : 2:197)

ஹஜ்ஜின் ருக்னுகள் நான்கு (முதல் நிலைக்கடமைகள்)
1-இஹ்ராம் அணிதல் ( நிய்யத் செய்தல் ) இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்து

2-அரஃபாவில் தங்குவது

3-தவாஃபுல் இஃபாளா

4-ஸஃபா மர்வாவில் (ஓடுதல்) ஸயி செய்வது

மேற்கூறப்பட்ட ருக்னுகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் அதைநிறைவேற்றும் வரை ஹஜ் நிறைவேறாது.

ஹஜ்ஜின் வாஜிபுகள் ஏழு ( இரண்டாம் நிலைக்கடமைகள்)
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்
2-அரஃபாவில் சூரின் அஸ்தமிக்கும் வரை தங்குதல்
3-முஸ்தலிபாவில் இரவு தங்குதல்
4-மினாவில் இரவு தங்குதல்
5-பிறை 11, 12, 13, ஆம் நாள்களில் கல்லெறிதல்
6-தவாஃபுல் விதா செய்தல்
7-தலை மடியை மழித்தல் அல்லது குறைத்தல்
மேற்கூறப்பட்ட வாஜிபுகளளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் ஒரு பிராணியைப் பலியிட்டு (ஹரமிற்குள்) ஏழைகளுக்கு வழங்கவேண்டும் அவன் அதை சாப்பிடக்கூடாது

ஹஜ்ஜின் சுன்னத்துகள்
1-இஹ்ராமின் போது குளித்தல்
2-ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்
3-தல்பியாவை உரத்து சொல்லுதல்
4-அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்
5-ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்
6-இள்திபா செய்தல் (ஆண்கள் (தவாஃப்செய்யும்போது) உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)
7-உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.
8-ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல் மேற்கூறப்பட்ட சுன்னத்துகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் எந்த குற்றமுமில்லை

இஹ்ராமில் தடுக்கப்பட்டவைகள் பதினொன்று
1-முடியை வெட்டுவது
2-நகங்களைக் களைதல்
3-ஆண்கள் தலையை மறைத்தல்
4-ஆண்கள் தையாலடையை அணிதல்
5-வாசளைத் திரவியங்களை உபயோகித்தல்
6-பெண்கள் கையுறைகள் அணிதல்
7-பெண்கள் முகமூடி அணிதல்
- இந்த ஏழு காரியங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் மறந்தோ அறியாமலோ செய்தால் எந்தகுற்றமுமில்லை அல்லது வேண்டமென்றே செய்தல் அதற்கு பரிகாரம் கொடுக்கவேண்டும்,
8-தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை விரட்டுதல் இன்னம் கொலை செய்தல் இதை செய்தல் அதற்கு பரிராகரம் கொடுக்கவேண்டும்
9- மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் மருமஸ்த்தானம் அல்லாத பகுதிகளில் தொடுவது, முத்தமிடுவதைப்போல இதனால் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்கு பாதகமில்லை ஆனால் ஓர் ஒட்டகத்தை அறுத்து பலியிட்டு பரிகாரம் செய்யவேண்டும்

10-தனக்காகவோ பிறருக்காகவோ திருமண ஒப்பந்தம் செய்தல் இதை செய்தால் பரிகரம் ஒன்றும் இல்லை
11- உடலுரவு கொள்ளல் இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழிந்தால் ஹஜ் நிறைவேறாது மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக வரும் ஆண்டில் கட்டாயமாக ஹஜ்ஜை களா செய்ய வேண்டும் மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிடவேண்டும், உடலுரவு கொள்ளல் முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும் ஆனால் ஓர் ஆட்டைப் பலியிடவேண்டும்

இஹ்ராம் கட்டவேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும்இ அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

'ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.' (அல்குர்ஆன் 2:197)

எனவே ஷவ்வால் மாதத்திலோஇ துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, அபுதாவுத்)

கஃபாவின் ஒரு மூலையில் 'ஹஜ்ருல் அஸ்வத்' எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நாபிவு. நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள். அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.

'நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்' என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள். நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும் கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்

ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். 'ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீஇ அபுதாவுத்இ நஸயீ



ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு மூன்றாவது மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள்இ நான்கு மூலைகளில் 'யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா

தவாஃப் செய்யும்போது 'உலூ' அவசியம்
தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.

'நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்' அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.

தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை
தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்

'கஃபாவை தவாஃப் செய்வது ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ

இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். 'அல்லாஹ் அக்பர்' போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்
தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில்இ எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தை அடைந்தபோது 'மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும்இ குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும்இ குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை. அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி

ஸயி செய்யும் முறை
ஸஃபா மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது ஸஃபா மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை நிறைவேற்றிஇ இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'ஸஃபா'வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்

ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் 'ஸஃபா'வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் 'நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்' என்ற வசனத்தை ஓதினார்கள். 'அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக' என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா. அன்ஜஸ வஃதா. வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா' என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) 'பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (தற்போது பச்சை(டியூப்) விளக்கு போடப்பட்டுள்ளது அந்த பச்சைவிளக்கு இடம் வந்ததும் ஓடவேண்டும் பச்சைவிளக்கு முடிந்ததும் நடந்துசெல்லவேண்டும்) (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.




பாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது 'ஸஃயு' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.




நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ




ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும். ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதாகும்.




'நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.' அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்



புதன், 3 ஆகஸ்ட், 2011

ரமழான்

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்
ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அழைத்தார்கள். நூல்:அபூதாவுது,நஸயீ நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்
நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள்தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

நோன்பாளி செய்யக் கூடாதவை

எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"

என்று கூறி விடவும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்

நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185) எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை

நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

திங்கள், 18 ஜூலை, 2011

இமாம் ஹஸனுல் பன்னாவின் கடிதம்

1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை பின்வருமாறு எழுதினார்கள் :

(இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்குப் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தைப் படித்துப் பயன் பெறுவோம்!)

நல்ல எண்ணத்துடனும், உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

கண்ணியத்திற்குரிய மாணவனே! இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்குப் பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்லமுறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.

நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள்.

உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயற்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் தெரிந்தவனாகவுமிருக்கிறான். எனவே அவன் உங்களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விடயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.

உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன் வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்போடாதீர்கள். விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகிறான் :

மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும் (ஸாத் : 26)

அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனை விட அதிகமாக கடமையான விசயங்களை பற்றி கூற விரும்பவில்லை. ஏனென்றால் அது தான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதனை நீங்கள் நன்கு நன்கறிவீர்கள்.

உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான கரியங்கைள நிறைவேற்றுவதில் கழியுங்கள். பர்ழான தொழுகைகளுக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் போது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதனை நீட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால்

நபி (ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும், என அலி (ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

அல் குர்ஆனை விளங்கி, ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அது தான் உள்ளங்களுக்கான நோய் நிவாரணியாகும். உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அல்குர்ஆனைக் கொண்டே முடியுங்கள். ஏனென்றால் அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.

நீங்கள் அங்கே பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உள்ளத்தை திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும் மாயைகளையும் காண்பீர்கள். இவைகளெல்லாம் உங்களையும் மயக்கி மறுமையை மறக்கடிக்காமல் இருக்கட்டும். அல்லாஹ் கூறுகிறான் :

(நபியே!) அவர்களிலிருந்தும் சில பிரிவாருக்கு, உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு நாம் சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாக செலுத்த வேண்டாம். (ஏனெனில், மறுமையில் வழங்கப் பெறும்) உம் ரப்புடைய உணவு (இவ்வுலக வாழவில் அவர்கள் வழங்கப் பெறுவதை) விட மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும். (தாஹா :131)

எனது மதிப்பிற்குரியவரே! அங்கு இருக்கிறவர்கள் அல்லாஹ் எங்களுக்கு ஹராமாக்கியுள்ளதை ஹலாலாகக் கருதுவார்கள். அந்த ஹராம்களை செய்வதில் சற்றேனும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே, நீங்கள் இச்சைகளுக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டாம். அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ளவும் வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியிலிருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதாரமாகவம் இருக்க மாட்டாது.

அடுத்து நீங்கள் அங்கு இருக்கும் இளமைப் பெண்களுடன் தோழமை கொள்ள வேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் தனிப்பட்ட நட்பையோ, அல்லது உளரீதியான உறவையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இது ஏனையவர்களுக்கு, ஒரு குற்றமாக காணப்பட்டால் உங்கள் மீது இரண்டு குற்றங்களாகும். ஏனென்றால் அதற்கான விளக்கத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.

மதுபானத்தை நெருங்கவும் வேண்டாம். அவ்வாறு நெருங்குவதற்கு சூழலை காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராத்தினால் வளரும் உடம்பு நரகத்துக்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார். (அஃராப் : 157)

இவ்வாறு இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்றாலும் அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் எனப் பயப்படுகின்றேன். எனவே உங்களுக்கு அல்லாஹ் நல்லதை நாட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

புதன், 13 ஜூலை, 2011

ஷஃபான் மாதம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். "(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை;
ஷஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!" (புகாரி)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை.

ஷஃபான் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!" என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள். (புகாரி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். என அபூ பகர் (ரலி) அறிவித்தார்கள் (புகாரி)

அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ‌ர்க‌ள்அறிவிக்கிறார்க‌ள்:
(ர‌மழானிற்கு)பிற‌கு ஷஃபான் மாத‌த்தைவிட, வேறு எந்த‌ மாத‌த்திலும் ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள்அதிக‌மாக‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌வில்லை. ஏனெனில் ஷஃபான் முழுவ‌துமே நோன்பு வைப்பார்க‌ள்.ம‌ற்றொரு அறிவிப்பில் ஷஃபான் சில‌ நாட்க‌ளைத்த‌விர‌, அதிக‌மான‌ நோன்பு வைப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருந்தார்க‌ள் என‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. (புகாரி,முஸ்லிம்)

ஷஃபான் மாத‌ம் ப‌தினைந்தாம் இர‌வுஅல்லாஹுத் தஆலா த‌ன் ப‌டைப்பின‌ங்க‌ள் அனைத்தின்ப‌க்க‌மும் க‌வ‌ன‌ம் செலுத்துகின்றான். ப‌டைப்புக‌ள் அனைத்தையும் ம‌ன்னித்து விடுவான். ஆனால் இருவ‌ர் ம‌ன்னிக்க‌ப்ப‌டுவ‌தில்லை.

1.அல்லாஹ்வுக்கு இணைவைப்ப‌வ‌ர்.

2.எவ‌ருட‌னாவ‌து விரோத‌ம் கொண்ட‌வ‌ர் என‌ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அருளிய‌தாக‌ அப்துல்லாஹ் இப்னுஅம்ரு(ர‌ழி) அவ‌ர்க‌ள் அறிவிக்கிறார்க‌ள். (அஹ்ம‌த்)

இம்மாத‌த்தின் முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள்
கிப்லாவை மாற்ற‌ம் செய்தல்:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ம‌தீனா சென்ற‌திலிருந்து பைத்துல் முக‌த்திஸை நோக்கி தொழுதுகொண்டிருந்தார்க‌ள். ஹிஜ்ர‌த் செய்த‌ ப‌தினேழாவ‌து மாத‌த்தில் (ஷஃபான்) பைத்துல் முக‌த்த‌ஸி‍லிருந்து, ம‌ஸ்ஜிதுல் ஹராம்(க‌ஃப‌துல்லாஹ்வின்) திசையைகிப்லாவாக‌ மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆய‌த்தைஅருளினான்.

ந‌பியே, உம்முடைய‌ முக‌ம் (கிப்லா மாற்ற‌க்க‌ட்ட‌ளையை எதிர்பார்த்து) வான‌த்தின் ப‌க்க‌ம்திரும்புவ‌தை நாம் காணுகிறோம். ஆக‌வே, நீர்விரும்புகின்ற‌ கிப்லாவுக்கு உம்மை நிச்ச‌ய‌மாக‌ நாம்திருப்பிவிடுகிறோம்; என‌வே, உம்முக‌த்தை ( தொழும்போது ம‌க்காவிலுள்ள‌) ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமின் ப‌க்க‌ம் திருப்புவீராக‌! (முஃமின்க‌ளே) நீங்க‌ளும் எங்கிருந்தாலும் (தொழும்போது ம‌ஸ்ஜிதுல் ஹ‌ராமாகிய‌) அத‌ன் ப‌க்க‌ம் உங்க‌ளுடைய‌முக‌ங்க‌ளை திருப்பிக் கொள்ளுங்க‌ள். (குர்ஆன் 2;144)

நோன்பு க‌ட‌மை:
ஹிஜ்ரி இர‌ண்டாம் ஆண்டு, ஷஃபான் மாத‌த்தில் தான் ர‌மழானில் நோன்பு வைப்ப‌து க‌ட‌மையாக்க‌ப்ப‌ட்ட‌து.

ந‌ம்பிக்கை கொண்டோரே! உங்க‌ளுக்குமுன்னிருந்த‌வ‌ர்க‌ள் மீது க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்டிருந்த‌து போல்உங்க‌ள் மீதும் நோன்பு (நோற்ப‌து)க‌ட‌மையாக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌து; (அத‌னால்) நீங்க‌ள்இறைய‌ச்ச‌முடைய‌வ‌ர் ஆக‌லாம்.
(குர்ஆன் 2;183)

ஷஅபான் மாத‌த்தில் 4 நான்கு யுத்த‌ங்கள்

ஒன்று ப‌னூ முஸ்த‌ல‌க் யுத்த‌ம்:(இதை "அல் முர‌ஸீஃ யுத்த‌ம்" என்றும்கூற‌ப்ப‌டுகிற‌து) இப்போரிலிருந்து திரும்பும்போது தான்அன்னை ஆயிஷா(ர‌ழி) அவ்ர்க‌ள் மீது, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ர்க‌ள்அவதூறு ச‌ம்ப‌வத்தை பர‌ப்பினர். இத‌னால் க‌வ‌ளைய‌டைந்திருந்த‌ அன்னையார் அவ‌ர்க‌ளுக்கு,அவ‌ர்க‌ளின் ப‌த்தினித்த‌ன‌த்தை ப‌றைசாற்றிஅல்லாஹுத்த‌ஆலா குர்ஆனில் அத்தியாய‌ம் 24 இல், 11முத‌ல் 20 வ‌ரை உள்ள‌ வ‌சன‌ங்க‌ளை இற‌க்கி வைத்தான்.