முக்கிய தகவல்கள்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

உயிருள்ள வீடு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :


அல்லாஹ் நினைவுகூரப்படுகின்ற வீடு உயிருள்ள வீடாகும். அல்லாஹ் நினைவு கூறப்படாத வீடு இறந்த வீடாகும். அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி). ஆதாரம் : முஸ்லிம்.

தீனுல் இஸ்லாத்தை இந்தப் பாருலகில் நிலைநாட்டிட வேண்டிய தலையாயப் பொறுப்பைச் சுமந்தவர்கள் முஸ்லிம்கள். தீனை நிலைநாட்டும் பணியின் தொடக்க நிலை தனிமனித உள்ளங்களில் உருவாகிறது. அடுத்ததாக அப்பணி வீட்டில் நிலைபெறுகிறது. தொடர்ந்து குடும்பம் ஊர், தேசம், வெளியுலகு என விரிந்து செல்கிறது. நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ், தீன் நிலை நாட்டப்படும் வீட்டையும், தீன்நிலைநாட்டப்படாத வீட்டையும் வேறு பிரித்து விளக்குகிறது.

அல்லாஹ் வீட்டில் நினைகூரப்படுதல் என்பது நாவசைத்து திக்ரின் வாசகங்களை உச்சாடனம் செய்தல் என்ற அர்தத்தை மட்டும் தொனிப்பதில்லை. மாறாக, அதனை விரிந்த கருத்தில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும், தீனுல் இஸ்லாத்தினதும், அதனது ஷரீஅத் சட்டத்தினதும் ஆளுகைக்கும் செல்வாக்கிற்கும் உட்பட்ட வீடே அல்லாஹ் நினைவு கூறப்படும் வீடாகும்.

இந்த வகையில் ஒரு வீட்டின் குடும்பத் தலைவன், குடும்பத்தலைவி, பிள்ளைகள் ஆகியோரது சிந்தனையை, எண்ணங்களை, உணர்வுகளை, நடத்தைகளை, கருத்துக்களை, தீர்மானங்களை தீனுல் இஸ்லாம் ஆள வேண்டும். வீட்டின் ஆதிக்கச் சக்தியாக பெண்ணியமோ, ஆணாதிக்கமோ, மனோ இச்சையயோ, மூதாதைகளின் பழக்க வழக்கங்களோ, பெரும்பான்மை சமூகத்தின் நடத்தைகளோ இருக்கக் கூடாது. தீனுல் இஸ்லாம் மட்டுமே வீட்டில் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்க வேண்டும். இதுவே அல்லாஹ் நினைவு கூரப்படும் வீடாகும்.

இதனைத் தொடர்ந்து அவ்வீடு தனிப்பட்ட இபாதத்துக்கள் நிறைவேற்றப்படும் தலமாக இருக்கும். அங்கு ஆரம்பமாக தொழுகை நிலைநிறுத்தப்படும். அதற்காக அங்கு பிரத்யேகமாக அறை இருக்கும் இதனையே அல்குர்ஆன்.

ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும், மிஸ்ரிலே (எகிப்து) அவர்களது சமூகத்தாருக்கும் வீடுகளை ஏற்படுத்தி அவ்வீடுகளை மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள் என்றும், அன்றியும் விசுவாசங் கொண்டோருக்கு நன்மாராயம் கூறுமாறும் வஹி அறிவித்தோம். (யூனுஸ் : 87).

தீனின் தூண் தொழுகையாகும். அது நிலைநாட்டப்பட்டால் தான் தீனின் ஏனைய பகுதிகள் உறுதியாக நிலைநிறுத்தப்படும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தீன் நிலைநாட்டப்படும் வீட்டின் இலட்சனத்தை பின்வருமாறு விவரித்தார்கள்.

தனது மனைவியை நித்திரையில் இருந்து விழித்தெழச் செய்தான் ஒரு கணவன். அவள் நித்திரையிலிருந்து விழித்தெழ மறுத்த போது அவன் அவளது முகத்திலே தண்ணீரைத் தெளித்தான். அப்போது அவள் எழுந்து நின்று தொழுதாள். அவனும் தொழுதான். அத்தகைய கணவனுக்கு அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக. (அஹ்மத், அபூதாவூத்).

தீன் நிலைநாட்டப்படும் வீட்டின் தலைவன் தனது நேரடி பரிபாலிப்பில் உள்ளவர்களை இபாதத்துக்கள் செய்யுமாறு கட்டளை பிறப்பிப்பான். இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். வித்ரு தொழும் நேரம் வந்து விட்டால்,

ஆயிஷாவே! எழுந்திருங்கள்! வித்ரு தொழுங்கள் என்று கூறுவார்கள்.

என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்ளக். (முஸ்லிம்).

அல்லாஹ்வின் மார்க்கம் ஆதிக்கம் செலுத்தும் வீட்டில் ஷைத்தானிய ஆதிக்கத்திற்கு இடமிருக்க மாட்டாது. படுமோசமான, ஆபாசமும், அபத்தமும் நிறைந்த ஷைத்தானிய ஓலம், (சினிமாப் படங்களின் சத்தம், தொலைக்காட்சித் தொடர்களின் ஆராவாரம்) ஆகியவற்றுக்குப் பகரமாக குர்ஆன் ஓதும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் வீடுகளைக் கப்றுகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஸுரத்துல் பகரா) பாராயணம் செய்யப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான். (முஸ்லிம்).

அஷ்அரீ கோத்திரத்தாரின் இல்லங்களை குர்ஆன் ஓதும் சத்தம் மூலம் இனங் கண்டு கொள்வேன், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அக்கால ஸஹாபா சமுதாயத்தின் வீடுகள் அல்லாஹ்வின் பெயர் ஒலிக்கப்படும் வீடுகளாய் அமைந்து காணப்பட்டன என்பதற்கு இது சான்றாகத் திகழ்கிறது. நமது வீடுகள் இபாதத்துக்கள் நிறைவேற்றப்படாத கபுறுகளாக இருக்கக் கூடாது. அவை கிப்லாக்களாக இருக்க வேண்டும்.


இறைவனின் தீன் நிலைநாட்டப்படும் வீடுகளே உயிருள்ள வீடுகள். மேலும் வீட்டு விவகாரங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் கருத்து, அவனது தீர்மானம், அவனது ஏவல், அவனது விலக்கல்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் வீடுகளே தீன் நிலைநாட்டப்படும் வீடுகள். அல்லாஹ்வின் பெயரொலிக்கும் வீடுகள், உயிரோட்டமுள்ள வீடுகள்.


தீன் நிலைநாட்டப்படும் உயிருள்ள வீடுகளில் நோன்பு அதிகமாக நோற்கப்படும். அங்கு வாரி வழங்கும் உயர்ந்த கரங்கள் அதிகமாக இருக்கும். குடும்பத் தலைவிகள் தங்களது வீடுளை தான தர்மங்களால் மனங்கமழச் செய்ய வேண்டும் என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெண்களே! நீங்கள் தான தர்மம் செய்யுங்கள். நரகவாதிகளில் அதிகமானோராக உங்களை நான் கண்டேன். (புகாரி)

ஒரு முஸ்லிமுடைய வீட்டின் பண்பாட்டை தீனுல் இஸ்லாம் ஆட்சி செய்ய வேண்டும். ஒரு குடும்பத் தலைவன் அல்லது குடும்பத் தலைவி தனது மனோஇச்சை தீர்மானத்திற்கு வருகின்ற பண்பாட்டையோ அல்லது சினிமாவும், புறச்சூழலும் வகுத்தளிக்கும் பண்பாட்டையோ அமுல்நடத்தாமல் தீனில் வழிகாட்டலின் கீழ் அமைந்த பண்பாட்டை வளர்க்க வேண்டும். இரக்கம், அன்பு, பாசம், நேசம், சகோதரத்துவம், புரிந்துணர்வு, வாய்மை, போன்ற நற்குணங்களின் இருப்பிடமாக அவ்வில்லம் இருக்க வேண்டும். பொய், புறம், கோள், அவதூறு, ஆணவம், பொறாமை முதலான நற்குணங்கள் கத்தரிக்கப்பட்ட வீடுகளே தீனின் ஆளுகைக்குட்பட்ட வீடுகள்.

அபூஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

எனது வீட்டில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது எனது தாய், இங்கே வா உனக்குத் தின்பண்டம் தருகிறேன்! என அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். நீ கூறிய பிரகாரம் அந்தத் திண்பண்டத்தை நீ கொடுக்கவில்லையாயின் உனது பெயர் பொய்யர்களின் பட்டியலில் இடம்பெறும் என்றார்கள்.

பண்பாட்டுத் துறையில் மார்க்கம் நிலைநாட்டப்பட்ட பாங்கினை இச்சம்பவம் தெளிவுபடுத்துகிறது. தீனின் ஆளுகைக்குட்பட்ட வீட்டின் அங்கத்தினர் பரஸ்பரம் வழங்கிக் கொள்கின்ற சான்றே நற்சான்றாகும். மற்றோர் கொடுக்கின்ற சான்றை விட வீட்டார் கொடுக்கின்ற சான்றே பொருத்தமானதாகும். ஏனெனில் வீட்டிலுள்ளோர் வெளியுலகத்திற்கு தம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்ளவே பெரிதும் முயற்சிப்பர். தமது கணவராகிய ரஸுல் (ஸல்) அவர்கள் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் பல் துலக்குவார்கள் என்றார்கள். அண்ணலார் வீட்டில் இருந்தால் என்ன செய்வார்கள்? என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் தமது மனைவிமாருக்கு உதவியாக வீட்டு வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


ரத்தினச் சுரக்கமாக ஆயிஷா (ரலி) அவர்கள் அவர்களது பண்பாடு குர்ஆனாக இருந்தது, என்ற தனது கணவர் பற்றி சான்று பகர்ந்தார்கள்..

கணவன் - மனைவி பரஸ்பரம் ஆற்ற வேண்டிய கடமைகள், உரிமைகளில் தீன் ஆட்சி செய்ய வேண்டும். மாறாக, பெண்ணியமும், ஆணாதிக்கமும் இவைகளை ஆளக் கூடாது. தீனின் செல்வாக்கினால் பாதிக்கப்டட கணவன் அல்லது மனைவி தமது கடமைகள், உரிமைகள் பற்றி சிந்தனைத் தெளிவை அல்குர்ஆன், அல் ஹதீஸ் வாயிலாகப் பெற்று, அறிந்து, தெளிந்து அதை அமுல் நடத்த வேண்டும். இங்கு இருவரினதும் சுயகௌரவம், தன்மான உணர்ச்சி குடும்ப அந்தஸ்து, மரபுகள் சம்பிரதாயங்கள், அவர்களது உரிமைகள், கடமைகளைத் தீர்மானிக்கக் கூடாது.

முதலில் கணவன் தனது மனைவி பற்றிய புரிதலை மணவாழ்க்கையின் ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொளள் வேண்டும்.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றள். விலா எலும்பில் மிகவும் கோணலான பகுதி மேல் பகுதியாகும். அதை நிமிர்த்த முனைந்தால் நீ அதனை உடைத்து விடுவாய்! உடைந்து விடுமே என்று நிமிர்த்தாது விட்டால் அதன் கோணல் தொடர்ந்திருக்கும். எனவே, பெண்களோடு நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். (புகாரி, முஸ்லிம்).

எனவே, தனது இயல்பு, சுபாவம், உயர்வு, உயர்ச்சி முதலான விசயங்களில் தன்னைப் போல் தனது மனைவி இருக்க வேண்டும் என ஒரு கணவர் எதிர்பார்க்கலாகாது. அவ்வாறே மனைவிக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளை அறிந்துணர்ந்து ஆற்றிட வேண்டும்.

முஅவியா இபுனு ஹைதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்கு ஆற்ற வேண்டிய உரிமை என்ன? என்று கேட்டார். நீ சாப்பிட்டால் அவளுக்கும் உணவளிப்பாயாக! நீ உடை அணிந்தால் அவளுக்கும் உடை அணிவிப்பாயாக! அவளது கன்னத்தில் அறைந்து விடாதே! அவளை வீட்டிலன்றி வேறொரு விடயத்தில் வெறுத்தொதுக்கி வைத்து விடாதே! அல்லாஹ் உன்னை அசிங்கப்படுத்துவானாக என்று சபித்து விடாதே! என்று அண்ணலார் பதிலளித்தார்கள். (அபூதாவூத்).

இந்த வழிகாட்டல்கள் இஸ்லாத்தில் ஆணாதிக்கத்திற்கு சிறிதும் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

அவ்வாறே மனைவி தனது கணவன் பற்றிய புரிதலோடு வாழ்வைத் துவங்க வேண்டும். அண்ணலார் கணவனின் மகிமை பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

ஒருவரை இன்னொருவருக்கு சுஜுது செய்து சிரம் தாழ்த்த வேண்டும் என்று ஏவுவதாக இருந்தால், பெண்ணை கணவனுக்குச் சுஜுது செய்யுமாறு நான் ஏவியிருப்பேன். (திர்மிதி)

மனைவிமார் உங்களுக்கு வழங்க வேண்டிய உரிமை என்னவென்றால் நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் படுக்கையில் கால்மிதிக்க அனுமதிக்கக் கூடாது. நீங்கள் விரும்பாத யாரையும் உங்கள் வீட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

இது மனைவி கணவனுக்கு வழங்க வேண்டிய உரிமை, அவள் தனது கற்பையும், கணவனது கற்பையும், கணவனின் சொத்தையும், அவனது உணர்வையும் உணர்ச்சியையும் பாதுகாக்கக் கூடிய குலவிளக்காகத் திகழ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கணவன் தன் மனைவியை படுக்கையை நோக்கி அழைத்து அவள் மறுத்து அவள் மீது கோபம் கொண்ட நிலையில் அவன் இரவைக் கழித்தால் விடியும் வரை மலக்குகள் அவளை சபிக்கின்றளர். (புகாரி, முஸ்லிம்).

இந்தக் ஹதீஸ் கணவனின் உணர்வைக் காப்பாற்றும் பாரிய கடமை மனைவிக்கு உள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருமனைவி அவள் அவளது கணவன் அவளைத் திருப்தி கொண்ட நிலையில் மரணித்தால் அவள் சுவனம் நுழைவாள். (திர்மிதி).

ஒரு வீடு விதவையைக் குடும்பத் தலைவியாக் கொண்டிருக்குமென்றால் அவள் மறுமணம் செய்து வைக்கப்படல் வேண்டும். குறிப்பாக இளம் வயதை உடையவளாக இருந்தால் மறுமணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடும்.  தீன் வீட்டில் நிலை நாட்டப்படாத வீடுகள் மறுமணம் செய்ய இயலாத விதவைகளின் உளக் குமறல்களினால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

இவ்வாறே பிள்ளை வளர்ப்பு, திருமணம் செய்து கொள்ள ஆகுமாக்கப்படாதோர் (மஹ்ரமிகள்), ஆகுமாக்கப்பட்டோர் (அஜ்னபிகள்) உறவுகள், சுயஉழைப்பு, உழைப்பில் ஹலால் - ஹராம் பேணுதல், குடும்ப வாழ்க்கையை எளிமையாக அமைத்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற எல்லா நிலைகளிலும் தீனில் செல்வாக்கின் கீழ் வந்து விட்ட வீடே தீன் நிலை நாட்டப்பட்ட வீடாகும்.

வீட்டின் அகப்புறச் சூழல் கூட தீனில் ஆளுகைக்குட்பட்டிருக்க வேண்டும். வீட்டின் சுவர்களை சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் படங்கள் அலங்கரித்திருக்கக் கூடாது. மாறாக துஆக்கள், திக்ருகள், அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் அலங்கரித்துக் கொண்டிருக்க வேண்டும். பரஸ்பரம் ஸலாம் சொல்வதன் மூலமும், அடிக்கடி இறைவன் ஞாபகப்படுத்தப்பட்டு, அவனது மார்க்கம் பேசப்படுவதன் மூலமும், இஸ்லாத்தை கற்பதன் மூலமும், கற்பித்தல் மூலமும் தீன் நிலைநாட்டப்படும் வீடாக அது மிளிர வேண்டும். இதுவே உயிருள்ள வீடு! மற்றவை உயிரற்ற வீடுகள். நமது வீடுகளில் தீனை நிலைநாட்டி அவற்றை உயிருள்ள வீடுகளாக மாற்றி அமைப்போமாக!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

வெந்தயத்தில் மருத்துவம்.


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடுஇ அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும்இ வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்துஇ 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வரஇ உடல் சூடுஇ மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிரஇ உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டுஇ வாணலியில் போட்டு வறுத்துஇ ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோஃமோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன்இ சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள்இ அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்ஃமோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால்இ சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில்இ வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்இ வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்இ வெந்தயப் பொடியையும்இ பெருங்காயப் பொடியையும் சேர்க்கஇ சுவை கூடுவதுடன்இ உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்இ வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால்இ சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால்இ நீரிழிவுஇ வயிற்றுப்புண்இ வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.
3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.
4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.
6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
7. வெந்தயம்இ கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.
8. வெந்தயம்இ கடுகுஇ பெருங்காயம்இ கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலிஇ பொருமல்இ ஈரல வீக்கம் குறையும்.
9. வெந்தயம்இ வாதுமைப் பருப்புஇ கசகசாஇ உடைத்த கோதுமைஇ நெய்இ பால்இ சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும்இ வலுவாவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.
10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.
11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.
ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
 வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.
வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.
வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.
இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்துஇ அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.
தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.
முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.
வெந்தயக்கீரை.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கிஇ இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுஇஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சிஇ காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும்இ உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.
வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கிஇ கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டிஇ எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்துஇ ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.
வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது  வாய்ங்குவேக்காடு வராது.
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும்இ சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்புஇ கண்பார்வை குறைஇ வாதம்இ சொறி சிரங்குஇ இரத்தசோகை ஆகியவை குணமடையவும்இஇ பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
பிரிஸ்பன்: வெந்தயம்இ ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய்இ மிளகாய் பொடிஇ மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம். சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு. வயிற்று புண். வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது. 
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்இ ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25ரூ52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹார்மோன் அளவுஇ செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது.
வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள்இ ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு

நன்றி தமிழ் முஸ்லிம் சகோதரர்கள்

திங்கள், 19 நவம்பர், 2012

முஹர்ரம்


நபி (ஸல்)அவர்கள் காலத்திற்கு முன்பிருந்தே இம்மாதத்திற்கென தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்நாளில் யாரும் போர் புரிவதில்லை. இந்நாளில்தான் மூஸா (அலை) அவர்களையும், அவர்களது மக்களையும் ஃபிர்அவ்னிடமிருந்து இறைவன் ஈடேற்றம் பெறச்செய்தான்,

நபி (ஸல்) அவர்களின் சொல்படி முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ம்நாளில் நோன்பு நோற்பது சுன்னத்து, இந்நாளில் நோன்பு வைப்பது சென்ற ஆண்டில் செய்துவிட்ட சிறிய பாவங்களை போக்கிவிடும் என நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

புதன், 7 நவம்பர், 2012

இன்றைக்கும் ஹிஜ்ரத்கள் உண்டா


முஹர்ரம் மாதத்தின் வருகை, இஸ்லாமிய ஆண்டின் புதியதொரு ஆண்டுக்கு வழி வகுத்துக் கொடுக்கின்றது. ஒவ்வொரு புதிய ஆண்டு பிறக்கும் பொழுதும், முஸ்லிம் மனங்களில் சந்தோஷத்தை விதைத்து வைத்திருக்கின்ற அந்த இனிமையான ஹிஜ்ரத் நாட்கள் ஞாபகப்பரப்பில் வந்து அலைமோதி, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவரது அருமைத் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவைத் துறந்து மதீனா சென்று இஸ்லாத்திற்குப் புது வாழ்வு தேடிக் கொடுத்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து ஒவ்வொரு முஸ்லிமையும், தான் முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அந்த நாட்கள் தான் அடிப்படைக் காரணம் என்பதை நினைத்துப் பூரிப்படைய வைக்கின்றன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குத் துடிக்கின்றன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் - தானது முஸ்லிம்களை பலவீனத்திலிருந்து மாற்றி பலமிக்கவர்களாகவும், நிலையற்ற வாழ்க்கையிலிருந்து உறுதியான வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுத்தது மட்டுமல்லாமல், தங்களுக்கென ஒரு வாழ்க்கைப் பிரதேசத்தையும் கூட அது தேடிக் கொடுத்தது. அந்த நாட்களின் முதலாக இன்று வரை இறைவனின் திருப்பொருத்தத்தை நோக்கமாகக் கொண்ட பல ஹிஜ்ரத்கள் இந்தப் பூமியில் அணு தினமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.

முஸ்லிம்களின் வரலாற்று நெடுகிலும் குறைந்த அளவிலும், கூட்டம் கூட்டமாகவும், குழுக்கள் குழுக்களாகவும் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த நாடுகளை விட்டும் ஹிஜ்ரத் செய்து வருகின்றார்கள். இன்றைய ஹிஜ்ரத்கள் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதற்காக மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கிப் பயணப்பட்டார்களோ, அதனை ஒத்த ஹிஜ்ரத் களும் இன்று நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்தப் பூமிப்பந்தில் இஸ்லாமும் குஃப்ர்-ம் இருக்கும் வரை ஹிஜ்ரத் கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழி இங்கே முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அது இறுதி நாள் வரை தொடரும். பாவமன்னிப்பின் அல்லது பிராயச்சித்தத்தின் கதவுகள் அடைபடும் வரையும், கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரையும் இந்த ஹிஜ்ரத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (அஹ்மத்)

இன்னுமொரு ஹதீஸில் ஹிஜ்ரத் எதுவரை தொடருமெனில், காஃபிர்களை எதிர்த்து முஸ்லிம்கள் போரிடும் காலம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரைக்கும் ஹிஜ்ரத்தும் தொடர்ந்து கொண்டிருக்கும். (அல் ஹைதமீ - மஜ்மாஆ அஸ்ஸவாய்த்)

பல நூற்றாண்டுகளின் நெடுகிலும், இன்றும் கூட முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு விட்டு இன்னுமொரு இடம் தேடி ஹிஜ்ரத் செய்த வண்ணமிருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாடுகள், இடங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள், அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் பல்வேறு தாக்குதல்கள் தான் இதுவரை அவர்கள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற வீடுகளை விட்டும் வெளியேற்றி, புதிய வாழ்விடம் தேடிப் புறப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கின.

இன்றைக்கு முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களாக இருக்கட்டும் அல்லது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்துகொண்டிருக்கின்ற நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்களாக இருக்கட்டும், இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட வண்ணம் தங்களது வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதில் யாருக்கும் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாழக் கூடிய முஸ்லிம்கள் இரண்டு வித காரணங்களுக்காக தன்னுடைய ஹிஜ்ரத்தை அமைத்துக் கொள்கின்றான்.

முதலாவதாக, தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும், அதன் அடையாளங்களையும் பாதுகாத்துக் கொள்ளவென ஹிஜ்ரத் மேற்கொள்கின்றார்கள். இரண்டாவதாக, வாழ்க்கை வசதிகளைத் தேடி ஹிஜ்ரத் மேற்கொள்கின்றார்கள்.

இந்த இரண்டு வகையான நிர்ப்பந்தங்களின் காரணமாக ஒரு முஸ்லிம் தான் வாழ்ந்த பூமியை மட்டுமல்ல, சமுதாயத்தையும் விட்டு விட்டு முஸ்லிமல்லாத நாடுகளை நோக்கி தன்னுடைய ஹிஜ்ரத்தை மேற்கொள்கின்றான். இத்தகையவர்கள் அந்த முஸ்லிமல்லாத நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் தேடியும், இன்னும் பலர் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தேடியும் செல்கின்றனர்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக உலக முஸ்லிம் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் இனப்படுகொலை போன்ற தாக்கங்களின் காரணமாக பிறந்த இடங்களை விட்டு, கூட்டம் கூட்டமாக தங்களையும், தங்களது மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக வெளியேறி இருக்கின்றார்கள்.

இன்றைக்கு இவ்வாறான அழுத்தங்களின் காரணமாக பரவி வாழக் கூடிய முஸ்லிம் சமுதாயத்தை உலகம் முழுவதும் காண முடியும். இருப்பினும், நாடு விட்டு நாடு சென்ற அவர்களது வாழ்வில் பெரியதொரு மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடப் போவதில்லை. சிறு சிறு மாற்றங்கள் தவிர இன்னும் அவர்களது வாழ்வில் மிகப் பெரிய பிரச்னையாக எழப் போவது எதுவென்றால், அவர்களது மார்க்க அடையாளங்களும், கலாச்சாரங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தங்களது தீனை இழக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் அவர்கள் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். தங்களது மார்க்க அடையாளங்களில் ஒரு சிலவற்றைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றார்கள்.

இத்தகைய நிலையில் அமைந்து விடக் கூடிய ஹிஜ்ரத் கள் மார்க்க அடையாளங்களைத் தொலைத்து விடுவதில் மட்டும் நின்று விடுவதில்லை. மாறாக, தங்களது இளைய சமுதாயத்தை இக்கட்டான நிலையில் விட்டு விடுகின்ற நிலையில், இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாமியக் கொள்கைகள் என்றால் என்ன? இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் எத்தகையவை? என்பன பற்றியெல்லாம் அவர்களால் அறிந்து கொள்ள இயலாத சூழ்நிலைகளில் வாழக் கூடியவர்களாக அவர்களது காலங்கள் செல்வதையும் நாம் கண்டு வருகின்றோம்.

எனவே, இன்றைய ஹிஜ்ரத்கள் ஒரு முஸ்லிமினுடைய வாழ்வில், அவனது மார்க்கத்தையும் மார்க்க அடையாளங்களையும் பாதுகாப்பதற்காக வேண்டிய அமைய வேண்டுமே ஒழிய, மார்க்கத்தை இழந்து விடக் கூடிய வகையில் அமைந்து விடக் கூடாது.

அனைத்து நபிமார்களும் பின்பற்றிய சுன்னா :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மக்காவை விட்டு மதீனாவுக்குச் செல்வது என்பது கட்டாயமான ஹிஜ்ரத்தாக இருந்தது. ஆனால் மக்கா இஸ்லாத்தின் இருதயமாக வளர்த்தெடுக்கப்பட்டு விட்ட பின்னர் அந்த முக்கியத்துவமான ஹிஜ்ரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் வகுத்தளித்திருக்கின்ற வரம்புகளைப் பேண முடியாத வாழ்க்கையில் வாழக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒரு முஸ்லிமின் மீது ஹிஜ்ரத் கடமையாகின்றது. இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

   إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ قَالُوا فِيمَ كُنتُمْ  ۖ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ ۚ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا ۚ فَأُولَٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ  ۖ وَسَاءَتْ مَصِيرًا وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً ۚ وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا.
(அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது ''நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) ''நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?'' என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். இன்னும் எவர் அல்லலாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார். இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். (4:97-100)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் பாவமன்னிப்பின் தவ்பாவின் கதவுகள் அடைக்கப்படும் வரை ஹிஜ்ரத் தொடர்ந்து கொண்டே இருக்கும். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை தவ்பாவின் கதவுகள் அடைக்கப்படாது. (அஹ்மத்)

மறுமை நாள் வரை ஹிஜ்ரத் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும் என்று அனைத்து மார்க்க உலமாப் பெருமக்களும் ஒத்த கருத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் அல்லாதவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கின்ற பூமியில் வாழக் கூடிய முஸ்லிமிற்கு தன்னுடைய மார்க்கக் கடமைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும் எனில், அவர் அந்த இடத்தை விட்டு ஹிஜ்ரத் செய்வது கடமையாகும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பெரும்பான்மையினராகவும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் வாழக் கூடிய நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம் தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றி வாழ இயலாத நிலை இருக்கும் போதும், அதனை விட்டு ஹிஜ்ரத் செய்ய வேண்டிய கடமை இருந்தும், ஆனால் வயோதிபம், இயலாமை, நோய் ஆகியவற்றின் காரணமாக அந்த இடத்தை விட்டு வெளியேற இயலாத நிலை இருக்குமென்றால், அவர் மீது ஹிஜ்ரத் கட்டாயமில்லை.

(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவம், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். (4:98-99)

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஹஜ் செய்வது எப்படி


அல்லாஹ் சொல்கிறான்
وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான் (அல்குர்ஆன் 2:195)

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். (இந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:196)

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:197)

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ''மஷ்அருள் ஹராம்'' என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். (அல்குர்ஆன் 2:198)

பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:199)

ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், ''எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு'' என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (அல்குர்ஆன் 2:200)

இன்னும் அவர்களில் சிலர், ''ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2:201)

இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:202)

ஹஜ் செய்யும் முறைகள் மூன்று வகைகளாகும்
1-தமத்து
2-கிரான்
3-இஃப்ராத்

1-தமத்து: என்பது உம்ரா செய்துவிட்டு பின் துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ்ஜீக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது

2-கிரான் : என்பது உம்ரா செய்து அந்த இஹ்ராமிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது

3-இஃப்ராத் : என்பது ஹஜ்ஜீக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது

தல்பியா (வாசகம்) கூறும் முறை:
اللهم لبيك لبيك لاشريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لاشريك لك
அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக' .
இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).

பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்
இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.)

ஹஜ் தமத்து செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்
3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
4-தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்
5-இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ம் நாள் வரை காத்திருக்க வேண்டும் 8ஆம் நாள் அன்று ஹஜ்ஜீக்காக இஹ்ராம் அணியவேண்டும்.

ஹஜ் கிரான் செய்யும் முறையும் நிய்யத்தும்
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்யவேண்டும்
2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்
3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
4-தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்

ஹஜ் இஃப்ராத் செய்யும் முறையும் நிய்யத்தும்
1- மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்
2- மக்காவாசிகளும் (மக்காவில்) அங்கு தங்கியிருப்போரும் மீக்காத்திற்கு வரவேண்டியதில்லை தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம்
3- தவாஃபுல் குதூம் செய்யவேண்டும்
4- ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)
5- தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்;

நாள் : துல் ஹஜ் பிறை 8 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்
மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்மு (சேர்த்து) செய்யாமல் அந்தந்த வேளைகளில் நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும்

நாள் : துல் ஹஜ் பிறை 9 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்
1- சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கி செல்ல வேண்டும் அங்கு ளுஹரையும் அஸரையும் சேர்த்து ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஓரு பாங்கு இரண்டு இகாமத்களுடன் இரண்டு இரண்டு ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும், அரஃபாதினத்தில் இறைவனை தியானித்தல், குர்ஆனை ஓதுதல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது சுன்னத்தாகும் துஆ செய்யும்போது கிப்லாவை முன்னோக்குவது நபி (ஸல்) அவர்களைப்போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும், அரஃபாதினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல.

2- சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்கு செல்லவேண்டும், முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு பாங்கு இரு இகாமத்துடன் மக்ரிப் மூன்று ரக்அத்தும் இஷாவை இரண்டு ரக்அத்தாகவும் தொழவேண்டும்

3- மினாவில் பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அவற்றை மினாவிலும் எடுத்துக்கொள்ளலாம்

4- முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்ரு மற்றும் துஆக்களை அதிகப்படுத்த வேண்டும், சூரியன் உதிக்கும் முன்பு வரை அல் மஷ்அருல் ஹராமில் நின்று துஆசெய்வது விரும்பத்தக்கது, பலவீனமானவர்கள் நடு இரவுக்குப்பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்பட்டு மினாவந்துவிடலம்.

5- சூரியன் உதயமாகுமுன் மினாவைநோக்கிப் புரப்படவேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம் -மேலே கூறப்பட்ட இரண்டு செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

3-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

4-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

குறிப்பு: நிங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும். -

(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் கிரான்; செய்யக்கூடியவர்கள்
1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும் -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய) விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்
5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

குறிப்பு: நீங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.

நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் தமத்து செய்யக்கூடியவர்கள்
1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்

2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்

-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது

4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் கல்லெறிவதற்கு முன்பே தலையை மழிந்து விட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) : புகார், முஸ்லிம், அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) விரைவுபடுத்தினார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா) அடையும் வழியில் புறப்பட்டார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா)அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள் ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள் சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள் பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள் : ஜாபிர் (ரலி) : முஸ்லிம் - சுருக்கம்.

நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன் அங்கே அடிதடி இல்லை விரட்டுதல் இல்லை வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என்பது போன்ற கூச்சால் குலப்பபம் இல்லை : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி) : நஸயீ, திர்மதி, இப்னுமாஜா

நாள் : துல்ஹஜ் பிறை 11 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

நாள் : துல்ஹஜ் பிறை 12 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.

2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும், விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று தவாஃபுல் விதாஃவை செய்து விட்டு ஊருக்கு பயணமாகலாம் அப்படி சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து செல்லமுடியவில்லையென்றால் அடுத்தநாள் அங்கு தங்கவேண்டும் குறிப்பிடப்பட்ட (11,12,13)நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் : அல் குர்ஆன் 2:203.

நாள் : துல்ஹஜ் பிறை 13 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்
1-13 ஆம் நாள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்

2-மினாவிலிருந்து மக்கா செல்லுதல்

3-தவாஃபுல் விதா செய்தல் இது வாஜிபாகும் இதை விட்டால் பலி கொடுக்கவேண்டும் ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.

குறிப்பு: ஹஜ்ஜின் நாட்களில் குர்ஆன் ஓதுதல் துஆ செய்தல் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பமான சூல் நிலை ஆகவே வீணான பேச்சுக்கள் தர்க்கங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும் (அல் குர்ஆன் : 2:197)

ஹஜ்ஜின் ருக்னுகள் நான்கு (முதல் நிலைக்கடமைகள்)
1-இஹ்ராம் அணிதல் ( நிய்யத் செய்தல் ) இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்து

2-அரஃபாவில் தங்குவது

3-தவாஃபுல் இஃபாளா

4-ஸஃபா மர்வாவில் (ஓடுதல்) ஸயி செய்வது

மேற்கூறப்பட்ட ருக்னுகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் அதைநிறைவேற்றும் வரை ஹஜ் நிறைவேறாது.

ஹஜ்ஜின் வாஜிபுகள் ஏழு ( இரண்டாம் நிலைக்கடமைகள்)
1-மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்
2-அரஃபாவில் சூரின் அஸ்தமிக்கும் வரை தங்குதல்
3-முஸ்தலிபாவில் இரவு தங்குதல்
4-மினாவில் இரவு தங்குதல்
5-பிறை 11, 12, 13, ஆம் நாள்களில் கல்லெறிதல்
6-தவாஃபுல் விதா செய்தல்
7-தலை மடியை மழித்தல் அல்லது குறைத்தல்
மேற்கூறப்பட்ட வாஜிபுகளளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் ஒரு பிராணியைப் பலியிட்டு (ஹரமிற்குள்) ஏழைகளுக்கு வழங்கவேண்டும் அவன் அதை சாப்பிடக்கூடாது

ஹஜ்ஜின் சுன்னத்துகள்
1-இஹ்ராமின் போது குளித்தல்
2-ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்
3-தல்பியாவை உரத்து சொல்லுதல்
4-அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்
5-ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்
6-இள்திபா செய்தல் (ஆண்கள் (தவாஃப்செய்யும்போது) உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)
7-உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.
8-ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல் மேற்கூறப்பட்ட சுன்னத்துகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் எந்த குற்றமுமில்லை

இஹ்ராமில் தடுக்கப்பட்டவைகள் பதினொன்று
1-முடியை வெட்டுவது
2-நகங்களைக் களைதல்
3-ஆண்கள் தலையை மறைத்தல்
4-ஆண்கள் தையாலடையை அணிதல்
5-வாசளைத் திரவியங்களை உபயோகித்தல்
6-பெண்கள் கையுறைகள் அணிதல்
7-பெண்கள் முகமூடி அணிதல்
- இந்த ஏழு காரியங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் மறந்தோ அறியாமலோ செய்தால் எந்தகுற்றமுமில்லை அல்லது வேண்டமென்றே செய்தல் அதற்கு பரிகாரம் கொடுக்கவேண்டும்,
8-தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை விரட்டுதல் இன்னம் கொலை செய்தல் இதை செய்தல் அதற்கு பரிராகரம் கொடுக்கவேண்டும்
9- மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் மருமஸ்த்தானம் அல்லாத பகுதிகளில் தொடுவது, முத்தமிடுவதைப்போல இதனால் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்கு பாதகமில்லை ஆனால் ஓர் ஒட்டகத்தை அறுத்து பலியிட்டு பரிகாரம் செய்யவேண்டும்

10-தனக்காகவோ பிறருக்காகவோ திருமண ஒப்பந்தம் செய்தல் இதை செய்தால் பரிகரம் ஒன்றும் இல்லை
11- உடலுரவு கொள்ளல் இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழிந்தால் ஹஜ் நிறைவேறாது மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக வரும் ஆண்டில் கட்டாயமாக ஹஜ்ஜை களா செய்ய வேண்டும் மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிடவேண்டும், உடலுரவு கொள்ளல் முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும் ஆனால் ஓர் ஆட்டைப் பலியிடவேண்டும்

இஹ்ராம் கட்டவேண்டிய காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும்இ அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.

'ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.' (அல்குர்ஆன் 2:197)

எனவே ஷவ்வால் மாதத்திலோஇ துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ

இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, அபுதாவுத்)

கஃபாவின் ஒரு மூலையில் 'ஹஜ்ருல் அஸ்வத்' எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நாபிவு. நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள். அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா

கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்

ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.

'நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்' என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள். நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும் கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்

ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.

நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். 'ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீஇ அபுதாவுத்இ நஸயீ



ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு மூன்றாவது மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள்இ நான்கு மூலைகளில் 'யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா

தவாஃப் செய்யும்போது 'உலூ' அவசியம்
தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.

'நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்' அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.

தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை
தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்

'கஃபாவை தவாஃப் செய்வது ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ

இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். 'அல்லாஹ் அக்பர்' போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்
தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில்இ எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தை அடைந்தபோது 'மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும்இ குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும்இ குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை. அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி

ஸயி செய்யும் முறை
ஸஃபா மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது ஸஃபா மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை நிறைவேற்றிஇ இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'ஸஃபா'வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்

ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் 'ஸஃபா'வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் 'நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்' என்ற வசனத்தை ஓதினார்கள். 'அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக' என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா. அன்ஜஸ வஃதா. வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா' என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) 'பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (தற்போது பச்சை(டியூப்) விளக்கு போடப்பட்டுள்ளது அந்த பச்சைவிளக்கு இடம் வந்ததும் ஓடவேண்டும் பச்சைவிளக்கு முடிந்ததும் நடந்துசெல்லவேண்டும்) (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ



ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.

பாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது 'ஸஃயு' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ

ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும். ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதாகும்.

'நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.' அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்



ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும், உழ்ஹிய்யாவின் (குர்பாணி) சட்டங்களும்.


 ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும், ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.

சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது. அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான். ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும். உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் - புகாரி. முஸ்லிம்

2-உபரியான தொழுகைகள். நோன்புகள். தர்மங்கள். உறவினர்களுக்கு உதவுவது. குர்ஆன் ஓதுவது. பாவமன்னிப்பு தேடுவது. நன்மையை ஏவுவது. தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.

குறிப்பு:- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் - புகாரி.முஸ்லிம்

3- அரஃபா நோன்பு:- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும். அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-முஸ்லிம்

குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது. ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். ஆதாரம் புகாரி. முஸ்லிம்

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும். பள்ளிவாசல். வீடு. கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது. துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ். அல்லாஹு அக்பர். அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத்

இப்னு உமர் (ரலி). அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள். இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ஆதாரம் - புகாரி

பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.

5- ஹஜ் பெருநாள் தொழுகை. இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.

நோன்புப் பெருநாளிலும். ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும். நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆதாரம் :- புகாரிஇ முஸ்லிம்

6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா (குர்பாணி) என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும். இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.

கொம்புள்ள. கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக (குர்பாணி) கொடுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள். ஆதாரம் - புகாரி

உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
ஆடு. மாடு. ஒட்டகம் (புகாரி)

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் (திர்மிதி)

மாட்டிலும். ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம். (திர்மிதி)

உழ்ஹிய்யாவிற்கான (குர்பாணி) கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது

கண் குறுடு. கடுமையான நோயானவை. மிகவும் மெலிந்தவை. நொண்டியானவை. அங்கங்கள் குறையுள்ளவை.

நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக (குர்பாணி) ஆகாது. அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.

யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் - புகாரிஇமுஸ்லிம்

யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி.முஸ்லிம்)

அறுக்கும் முறை
ஆடுஇ மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும்/ (முஸ்லிம்)
ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)

அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)

உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ. தோல்களையோ. மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது. குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அவைகளின் மாமிசம். தோல். ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும். அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள். அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:- புகாரி.முஸ்லிம்

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக்கொள்ளங்கள். தர்மமும் செய்யுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். ஆதாரம்:- முஸ்லிம்

குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா (குர்பாணி) கொடுப்பவருக்கு மாத்திரம்தான். அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆரோக்கியமாகவும், டயட் ஆகவும் இருக்க


இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடும் முன்பு, அதிகமான அளவு உண்ணக்கூடாது என்பதற்காக சூப்பை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஏனெனில் அதை சாப்பிட்டால், பாதி வயிறு நிறைந்துவிடும். மேலும் சூப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் ஏதேனும் குளிர் காலம், மழைக் காலம் என்றால் போதும், அந்த நேரத்தில் அடிக்கடி சூப் சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் தக்காளி சூப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சொல்லப்போனால் இது ஒரு சிறந்த டயட் மேற்கொள்ளும் போது உடலில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பொருள். அது எப்படியென்று கேட்கிறீர்களா? சரி, இப்போது அதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளங்கள்...
* உடல் எடையை குறைக்க சிறந்த பொருளான இந்த தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியுன் அளவை கரைத்துவிடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. அதிலும் இந்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் சூப் செய்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும், டயட்டிற்கு டயட் ஆகவும் இருக்கும். மேலும் தக்காளியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். ஆகவே எடை எளிதில் குறையும்.
* இந்த சூப் சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளியால் செய்யப்படுவதால், புற்றுநோய்க்கு சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதனை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால், மார்பக புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள், உடலில் சேராமல் தடுக்கும் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் குறைக்கும். அதனால் இதயத்தில் ஏற்படும் இதய நோய்கள், கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த தக்காளியில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆகவே தக்காளி சூப்பை குடிப்பது நல்லது.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்கள் ஆரோகக்கியமாக வாழ தக்காளி சூப்பை குடித்தால், உடலில் புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். அதுவும் தினமும் ஒரு பௌல் தக்காளி சூப்பை குடிப்பது நல்லது. ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள், புகை பிடிப்பதால் உடலை அழிக்கும் பொருளான கார்சினோஜென்னின் சக்தியை குறைத்துவிடுகிறது.
* தினமும் தக்காளி சூப்பை குடித்து வந்தால், சருமம் நன்கு அழகாக, பட்டுப் போன்றும், முகப்பரு மற்றும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும். அழகை மட்டும் பெறாமல், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே எலும்புகள், பற்கள் மற்றும் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.
எனவே, தக்காளி சூப் நல்லதா கெட்டதா என்று நினைத்து எதற்கும் பயப்படாமல், இனிமேல் சந்தோஷமாக விரும்பி குடித்து வாருங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகும் பெறும்.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

ஆறு நோன்புகள்


ரமளான் மாதத்தைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் பெருநாளைக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நாட்கள் அல்லது ஷவ்வால் மாதம் முடியும் முன்னர் இந்த நோன்பு நோற்பது நபி (ஸல்)அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும் இன்னும் வலியுறுத்தப்பட்டதுமாகும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "யார் ஒருவர் ரமளான் மாதத்திள் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கிறாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்". அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி): முஸ்லிம்

ரமளானில் நாம் பெற்ற இறையச்சம் தொடரும் விதமாக இந்த ஷவ்வால் நோன்பு அமைந்திருக்கிறது.

இவற்றை நாம் நோற்பதின் மூலம் தொடர்ந்து மற்ற சுன்னத்தான நோன்புகளான திங்கள், வெள்ளி, மாதம் மூன்று நோன்புகள் மற்றும் இதர நோன்புகள் நோற்கும் ஆர்வமும் நமக்கு ஏற்படலாம்.

ரமளான் மாதத்தில் நோன்புவைத்ததின் மூலம் நாம் பெற்ற இறையச்சம் மிகுந்த விலை மதிப்பற்ற பொக்கிஷத்தின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

சனி, 28 ஜூலை, 2012

நோன்பின் சட்டங்கள்


நோன்பு
அல்லாஹ்விற்காக ஃபஜ்ரிலிருந்து மஃக்ரிப் வரை உணணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் இவைகளிலிருந்து நோன்பு நோற்கிறேன் என்ற நிய்யத்துடன் தவிர்ந்து இருப்பது நோன்பாகும்

ஆதாரம்
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவா்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் உள்ளச்சுத்தி பெற்று பயபக்தியுடையவா்களாகலாம். ( அல் குா்ஆன் القرآن183/2)

நோன்பின் வகைகள் - இருவகைப்படும். 1. ஃபா்ளு 2. சுன்னத்
ஃபா்ளான நோன்புகள்
மூன்று வகைப்படும். 1. ரமளான் மாத முழுவதும் நோன்பு நோற்பது. 2. குற்றப்பரிகார நோன்பு. 3. (நத்ர்) நோ்ச்சை நோன்பு. ரமளான் மாத நோன்பு, சுன்னத்தான நோன்புகளை மாத்திரம் பார்ப்போம். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ரமளான் நோன்பு கடமையானது.


நோன்பு கடமை
சுய சிந்தனையுள்ள, பருவ வயதை அடைந்த, முஸ்லிமான நோன்பு நோற்க சக்தியுடைய ஒவ்வொருவா் மீதும் ரமளான் பிறையை பார்த்ததிலிருந்து அல்லது ஷஃபான் முப்பது நாட்கள் பூா்த்தியானதிலிருந்து ரமளான் மாத நோன்பு கடமையாகிறது. நீதமான ஒருவா் பிறையை பார்த்து உறுதிபடுத்தினாலே அதை ஆதாரமாகக்கொண்டு நோன்பு வைக்கலாம். ஆனால் மற்ற மாதங்களின் பிறையை உறுதிப்படுத்த ஷரீஅத் சட்டப்படி இருவா் பிறையை பார்த்ததற்கான நீதமான சாட்சிகள் அவசியம்.


நோன்பின் நிய்யத்
ஃபா்ளான நோன்பு வைத்திட இரவிலேயே (நிய்யத்) மனதில் நினைத்து கொள்வது அவசியம். சுன்னத்தான நோன்பிற்கு பகலில் கூட நிய்யத் செய்து (ஃபஜ்ரிலிருந்து நோன்பை முறிப்பவைகளை செய்யாமல் இருந்தால்) நோன்பினை தொடரலாம்.


நோன்பின் ஒழுக்கங்கள்
1.2. நோன்பு வைப்பதற்காக (இரவு சாப்பிடும்) ஸஹ்ர் நேர உணவை பிற்படுத்துவதும், நோன்பு திறந்திட (இஃப்தார்) உணவை விரைவாக முடிப்பதும் நபிவழியாகும். ஸஹ்ர் உணவில் பாக்கியம் உள்ளது. எனவே ஸஹ்ர் உணவை உண்ணுங்கள். நோன்பு திறந்திட பேரித்தம் பழத்தை சப்பிடுவதின் மூலமும், அது கிடைக்காத நேரம் தண்ணீா் அருந்துவதின் மூலமும் இஃப்தார் (நோன்பு திறப்பது) சுன்னத்தாகும். 3. இஃப்தார் (நோன்பு திறக்கின்ற) நேரம் துஆ அங்கீகரிக்கப்படுகிறநேரமாக இருப்பதால், அதிகமதிகம் பிரார்த்தனை புரிவது நபி (ஸல்) அவா்கள் நமக்கு ஆா்வமூட்டிய செயலாகும். 4. அதிகமாக (சிவாக்) பல் துலக்குவது. 5. குா்ஆன் ஓதுவதில் அதிகம் ஈடுபடுவது. 6. தான தா்மங்கள் செய்வது நபி வழியாகும். 7. ஆயிரம் மாதங்களை விட சிறப்பு மிக்க லைலத்துல் கத்ர் எனும் கத்ருடைய இரவு ரமளானின் இறுதி பத்து நாட்களில் அது இருப்பதால் தொழுகை, தா்மங்கள், தெளபா, பிரார்தனை, இஃதிகஃப் போன்ற வணக்க வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்தி, மருமை வெற்றிக்கு தயாராகிக்கொள்வதும் மிக ஏற்றமான நபி வழியாகும்.

நோன்பை முறிப்பவைகள்
1. நோன்பை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே ஏதாவது சாப்பிடுவது, அல்லது 2. குடிப்பது. 3. அல்லது வாந்தி எடுப்பது. 4. அதிக இரத்தத்தை கொடுப்பது அல்லது வெளியேற்றுவது. 5. பெண்களுக்கு மாதத்தீட்டு அல்லது பிள்ளை பேறு தீட்டு ஏற்படுவது, 6. இச்சையின் காரணமாக இந்திரியம் வெளியேறுவது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்தாலும் நோன்பு முறிந்திடும். இதனை செய்தவா்கள் நோன்பினை களா (ரமளான் மாதம் முடிந்ததும் பெருநாள்களை தவிர்த்து வேறு தினங்களில் நோன்பு ) இருந்திட வேண்டும். தான் புரிந்த தவறுக்காக அல்லாஹ்விடம் (தெளபா) பாவமன்னிப்பும் கோர வேண்டும். ஆனால் 7. உடலுறவின் மூலம் நோன்பை முறித்தவராக இருந்தால் நோன்பை களா செய்வது மட்டுமல்லாது அவா், தான் செய்த தவறுக்கு குற்றப்பரிகாரமாக ஓா் அடிமையை உரிமையிடவேண்டும், கிடைக்காத பட்சத்தில் தொடா்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் முடியாத தருணத்தில் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நோன்பில் ஆகுமானவை
1. நோன்பு இருந்தவா் மறந்தவராக சாப்பிட்டாலோ, குடித்தாலோ தொடா்ந்து நோன்பு நோற்கட்டும். ஏனெனில் மறதியை கொடுத்தது அல்லாஹ் அவரை உண்ண, குடிக்க வைத்தான்.2. உஷ்ணத்தை தணிக்க தலைவழியாகக்கூட தண்ணீா் ஊற்றிக்கொள்ளலாம். 3. கண், காதுக்கு (டிராப்ஸ்) சொட்டு மருந்து உபயோகிக்கலாம். 4. உடலுறவிற்கு செல்லாத அளவிற்கு ஆசையை அடக்குபவா் தன் மனைவியை முத்தமிடலாம். 5. குளுக்கோஸ் (சலைன்) போன்ற உணவுக்குறியதை தவிர்த்து மருந்துகளை மட்டும் ஊசி மூலம் போட்டுக்கொள்ளலாம். 6. ஆஸ்துமா போன்ற வியாதி உள்ளவா்கள் சுவாசிப்பதை இலேசு படுத்த வாய் வழியே ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். 7. அதிகமாக நீா் செலுத்தாது வாய் கொப்பளித்து, மூக்குக்கு நீா் செலுத்தி சுத்தப்படுத்தலாம். 8. உமிழ் நீா் விழுங்குவது, காற்றினால் பறந்து வரும் பொடிகள், மாவு வகைகள் (நம்மால் தவிர்க்க முடியாததால்) வாய்,மூக்கு வழியாக சென்றாலும் நோன்பு கூடிவிடும். 9. இரவில் மனைவியோடு கூடி அல்லது காலை துாக்கத்தில் ஸ்கலிதம் ஆகி குளிப்பு கடமையானவராக இருந்தால் நோன்பு முறியாது. இவா்கள் தொழுகைக்காக விரைவுபடுத்தி குளித்திடவேண்டும்

நோன்பை விட்டுவிடுவதற்கு சலுகை பெற்றவா்கள்
1.2. நோயாளிகளுக்கும், பிரயாணிகளுக்கும் ரமளானில் நேன்புவைப்பது சிரமமாக இருந்தால் பிற மாதங்களில் நோன்பினை நோற்று (அதனை களா செய்து) கொள்ளலம். 3,4. கா்ப்பிணியும், (குழந்தைக்கு பாலுட்டும் ) தாயும் ஆகிய இருபிரிவினரும் தனது கருவில் வளரும் சிசுவின் அல்லது குழந்தையின் உடல் நிலைக் கருதியோ, அல்லது தன்னுடல் நலனைப் பேணியோ நோன்பு வைக்காதிருக்க சலுகை இருப்பதால் வேறொரு மாதங்களில் அந்நோன்பினை களா செய்திடலாம். 5. ஹைல் நிஃபாஸ் எனும் மாத விடாய், பிள்ளைபேறு தொடக்குண்டான பெண்கள் நோன்புவைப்பது அவா்களுக்கு (தடையாகும்) ஹராமாகும். இவா்கள் வேறு நாட்களில் விடுபட்ட நோன்பினை களா செய்திட வேண்டும். 6,7. நோன்பு வைப்பதற்கு முடியாத வயோதிகா்கள், உடல் நிலை சுகவீனா் (உடல் நிலை சீராகுவதை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருப்பாரேயானால்) நோன்பு நோற்காமல் விடுதவற்கு சலுகை உள்ளது. இவா்கள் விடுபட்ட நோன்பின் எண்ணிக்கையை களா செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணம் காலம் செல்லச்செல்ல வயோதிகம் வாலிபமாக திரும்புவதும், நீடித்த நோய் சீராகுவதும் இல்லை.

சுன்னத்தான நோன்புகள்
ஹஜ் மாத ஒன்பதாம் நாள் அரஃபா தினம் 2. (பெரு நாளை தவிர்த்து) ஹஜ் மாத முதல் பத்து நாட்கள். 3.ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) தினம். 4,5. ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் இரு தினங்கள். 6.(ரமளான் மாதம் முடிந்து) பெருநாளை அடுத்த ஷவ்வால் மாதத்தினுள் ஆறு தினங்கள். 7. ஒவ்வொரு மாதத்திலும் பதிமூன்றாம், பதிநான்காம், பதினைந்தாம் ஆகிய மூன்று தினங்கள். 8.ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்பு நோற்பது ஆகியவை சுன்னத்தான நோன்பாகளாகும்,

நோன்புவைத்திட தடையான நாட்கள்
1,2. இரு பெருநாள்கள். 3. (யவ்முஷ்ஷக்) ஷஃபான் இறுதி தினமாகிய ரமளானுக்கு முந்திய தினத்தில் நோன்பு நோற்பதற்கு தடை செய்ய்ப்பட்டுள்ளது. 4. அய்யாமுத்தஷ்ரீக் துல்ஹஜ் 11,12,13ம் நாட்கள். என்கிலும் (நோ்ச்சை, குற்றப்பரிகாரம் ) போன்ற காரணங்களுள்ள நோன்புகளை இந்நாள்களில் நோற்கலாம். 5. வெள்ளிக்கிழமை தனித்திட்ட நாளாக நோன்பு வைப்பதற்கு தடை. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முந்திய அல்லது பிந்திய தினத்துடன் சோ்த்தாற் போல இரு தினங்களாக தொடா்ந்த வெள்ளிக் கிழமையில் நோன்பு நோற்கலாம். 6. வருட நாட்களில் தடை செய்யப்பட்ட நாட்கள் இருப்பதால் வருட முழுவதும் நோன்பு நோற்பது தடை. 7.மஃக்ரிபிற்கு பிறகு நோன்பு திறக்காது தொடா் நோன்பு நோற்பதற்கும் தடை. 8. கணவா் உடன் இருக்கும்போது அவா் உத்தரவு பெறாது பெண்கள் சுன்னத்தான நோன்பு வைத்திடுவது ஆகிய அனைத்தும் தடையாகும். அல்லாஹீ அஃலம்

சனி, 14 ஜூலை, 2012

ரமழான்


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்:2:183 )

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்
ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அழைத்தார்கள். நூல்:அபூதாவுது,நஸயீ நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள்தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"என்று கூறி விடவும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185) எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்