முக்கிய தகவல்கள்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

1- நீங்கள் குர்ஆனை ஓதுங்கள் அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிசு செய்யும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


2- குர்ஆனையும் அதைக்கொண்டு உலகத்தில் அமல் செய்தவர்களையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். சூரத்துல் பகராவும் சூரத்துல் ஆல இம்ரானும் முன்வந்து குர்ஆனை ஓதியவருக்கு(சுவர்க்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக) வாதாடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


3- குர்ஆனை ஓதியவருக்காக (நாளை மறுமையில்) சொல்லப்படும். ''நீர் குர்ஆனை ஓதிக்கொண்டு சுவர்க்கத்தின் (படித்தரத்தில்) ஏறிக்கொண்டு செல்வீராக. உலகத்தில் நிறுத்தி நிறுத்தி ஓதியது போன்று (இங்கேயும்) நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக. நீர்; ஒதி முடிக்கும் கடைசி ஆயத்தே சுவர்க்கத்தின் உமது அந்தஸ்தாகும்'' என அவருக்குக் கூறப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் , திர்மிதி)


4- குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ''அலிஃப்,லாம்,மீம் என்பது ஒரு எழுத்து'' என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும், லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)''


குர்ஆனை ஓதுவதினால் எந்த அளவக்கு நன்மைகள் குவிகின்றன'' என்பதை எண்ணிப்பாருங்கள். நீங்களும் இந்தக் குர்ஆனை ஒவ்வொரு நாளும் உரிய முறையில் ஓதப்பழகிக் கொள்ளுங்கள். அதன் மொழியாக்கத்தையும் படிப்பினை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு நிதானமாகப்படியுங்கள். அதன் ஏவல் விலக்கல்களை எடுத்தும் தவிர்த்தும் நடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நமது ஈருலக வாழ்க்கையையும் வெற்றி உள்ள வாழ்க்கையாக ஆக்கப் போதுமானவன். யா அல்லாஹ்! ''இந்தக் குர்ஆனை நாளை மறுமையில் எங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடிய குர்ஆனாக'' ஆக்கி வைப்பாயாக.