முக்கிய தகவல்கள்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

ஹஜ் செய்வது எப்படி

அல்லாஹ் சொல்கிறான்
وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ بِهِ أَذًى مِّن رَّأْسِهِ فَفِدْيَةٌ مِّن صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنتُمْ فَمَن تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَن لَّمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான் (அல்குர்ஆன் 2:195)


ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். (இந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:196)


ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:197)


(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது ''மஷ்அருள் ஹராம்'' என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள். (அல்குர்ஆன் 2:198)


பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:199)


ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், ''எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு'' என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. (அல்குர்ஆன் 2:200)


இன்னும் அவர்களில் சிலர், ''ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' எனக் கேட்போரும் அவர்களில் உண்டு. (அல்குர்ஆன் 2:201)


இவ்வாறு, (இம்மை-மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன். (அல்குர்ஆன் 2:202)


ஹஜ் செய்யும் முறைகள் மூன்று வகைகளாகும்

1-தமத்து

2-கிரான்

3-இஃப்ராத்


1-தமத்து: என்பது உம்ரா செய்துவிட்டு பின் துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ்ஜீக்கு இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றுவது


2-கிரான் : என்பது உம்ரா செய்து அந்த இஹ்ராமிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது


3-இஃப்ராத் : என்பது ஹஜ்ஜீக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுவது


தல்பியா (வாசகம்) கூறும் முறை:

اللهم لبيك لبيك لاشريك لك لبيك ان الحمد والنعمة لك والملك لاشريك لك

அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல்ஹம்த வன்னிஃமத லக, வல்முல்க், லாஷரீக லக' .

இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).


பொருள்: வந்துவிட்டேன். இறைவா! உன்னிடமே வந்துவிட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்துவிட்டேன் நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.


தல்பியாவை நிறுத்தவேண்டிய நேரம்

இஹ்ராம் கட்டிய நபர்கள் அதிகமதிகம் தல்பியாவைக் கூறவேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை தல்பியாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறிந்து முடித்தவுடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


நான் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினாவரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.

ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி)(புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.)


ஹஜ் தமத்து செய்யும் முறையும் நிய்யத்தும்

1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்

2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தலை முடியை மழிக்கவோ குறைக்கவோ வேண்டும்

5-இஹ்ராமிலிருந்து விடுபட்டு துல்ஹஜ் 8 ம் நாள் வரை காத்திருக்க வேண்டும் 8ஆம் நாள் அன்று ஹஜ்ஜீக்காக இஹ்ராம் அணியவேண்டும்.


ஹஜ் கிரான் செய்யும் முறையும் நிய்யத்தும்

1-மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க உம்ரதன் வ ஹஜ்ஜன் என்று கூறி நிய்யத் செய்யவேண்டும்

2-(தவாஃப்); தவாஃபுல் குதூம் (உம்ரா) செய்ய வேண்டும்

3-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

4-தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்


ஹஜ் இஃப்ராத் செய்யும் முறையும் நிய்யத்தும்

1- மீக்காத்தில் இஹ்ராம் அணிந்து லப்பைக்க ஹஜ்ஜன் எனக்கூறி நிய்யத் செய்ய வேண்டும்

2- மக்காவாசிகளும் (மக்காவில்) அங்கு தங்கியிருப்போரும் மீக்காத்திற்கு வரவேண்டியதில்லை தத்தம் இருப்பிடங்களிலேயே இஹ்ராம் அணிந்துக் கொள்ளலாம்

3- தவாஃபுல் குதூம் செய்யவேண்டும்

4- ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)

5- தொடர்ந்து இஹ்ராமிலேயே இருந்து ஹஜ்ஜை நிறைவேற்றவேண்டும்;


நாள் : துல் ஹஜ் பிறை 8 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

மினாவுக்குச் செல்ல வேண்டும் அங்கு ஐவேளை தொழுகைகளையும் ஜம்மு (சேர்த்து) செய்யாமல் அந்தந்த வேளைகளில் நான்கு ரக்அத் தொழுகைகளை மாத்திரம் இரு ரக்அத்களாக சுருக்கித் தொழ வேண்டும்


நாள் : துல் ஹஜ் பிறை 9 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்பவர்கள்

1- சூரியன் உதயமானதும் அரஃபாவை நோக்கி செல்ல வேண்டும் அங்கு ளுஹரையும் அஸரையும் சேர்த்து ளுஹர் நேரத்திலேயே முற்படுத்தி ஓரு பாங்கு இரண்டு இகாமத்களுடன் இரண்டு இரண்டு ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும், அரஃபாதினத்தில் இறைவனை தியானித்தல், குர்ஆனை ஓதுதல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்துவது சுன்னத்தாகும் துஆ செய்யும்போது கிப்லாவை முன்னோக்குவது நபி (ஸல்) அவர்களைப்போல கைகளை உயர்த்துவதும் சுன்னத்தாகும், அரஃபாதினத்தில் ஹாஜிகள் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதல்ல.


2- சூரியன் மறைந்ததும் முஸ்தலிஃபாவுக்கு செல்லவேண்டும், முஸ்தலிஃபாவை அடைந்ததும் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு பாங்கு இரு இகாமத்துடன் மக்ரிப் மூன்று ரக்அத்தும் இஷாவை இரண்டு ரக்அத்தாகவும் தொழவேண்டும்


3- மினாவில் பெரிய ஜமராவில் கல்லெறிவதற்கு ஏழு பொடிக்கற்களை எடுத்துக்கொள்ள வேண்டும் அவற்றை மினாவிலும் எடுத்துக்கொள்ளலாம்


4- முஸ்தலிஃபாவில் இரவு தங்கிவிட்டு அங்கேயே ஃபஜ்ரு தொழுதுவிட்டு பிறகு திக்ரு மற்றும் துஆக்களை அதிகப்படுத்த வேண்டும், சூரியன் உதிக்கும் முன்பு வரை அல் மஷ்அருல் ஹராமில் நின்று துஆசெய்வது விரும்பத்தக்கது, பலவீனமானவர்கள் நடு இரவுக்குப்பின்பு – சந்திரன் மறைந்ததன் பின் புறப்பட்டு மினாவந்துவிடலம்.


5- சூரியன் உதயமாகுமுன் மினாவைநோக்கிப் புரப்படவேண்டும்


நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்


2-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம் -மேலே கூறப்பட்ட இரண்டு செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது



3-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்


4-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)


குறிப்பு: நிங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும். -


(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்


நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் கிரான்; செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்


2-குர்பானி கொடுத்தல்


3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்


-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது



4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும் -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய) விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்

5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது)


குறிப்பு: நீங்கள் இஹ்ராம் கட்டி மக்காவந்து தவாஃப் செய்து பின் ஸயி செய்து இருந்தால் தற்போது ஸயி செய்ய தேவையில்லை, அப்படி செய்யாமல் இருந்தால் இன்று ஸயி செய்யவேண்டும்.


நாள் : துல்ஹஜ் பிறை 10 அன்று மினாவில் இருந்துக்கொண்டு ஹஜ் தமத்து செய்யக்கூடியவர்கள்

1-பெரிய ஜமராவில் மட்டும் ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறி நிதானமாக எறிய வேண்டும்


2-குர்பானி கொடுத்தல்

3-தலை முடியை மழிக்கவோ அல்லது குறைக்கவோ வேண்டும் மேலே கூறிய செயலை செய்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டீர்கள் வேறு ஆடையை அணிந்துக்கொள்ளலாம்


-மேலே கூறப்பட்ட மூன்று செயல்களையும் செய்துவிட்டால் அதற்கு (சிறிய விடுபடுதல்) முதல் விடுபடுதல் ஆகும் உடலுரவு கொள்ளல் கூடாது


4-மக்காவிற்கு சென்று (ஹஜ் தவாஃப்) தவாஃபுல் இஃபாளா (தவாஃப்) செய்யவேண்டும்


5-ஸயி செய்ய வேண்டும் ( ஸஃபா மர்வாவில் ஓடுவது) -(இது வாஜிப் முதல் நிலைக்கடமை) இதை செய்தால் இஹ்ராமிலிருந்து முழுமையாக (பொரிய)விடுபடுதல் உடலுரவு கொள்ளலாம்


குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும்போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் கல்லெறிவதற்கு முன்பே தலையை மழிந்து விட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் மற்றொருவர் அவர்களிடம் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாப் செய்துவிட்டேன் என்றார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை என்றார்கள் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) : புகார், முஸ்லிம், அஹ்மத்


நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிபாவிலிருந்து புறப்பட்டு பதனு முஹஸ்ஸர் என்ற இடத்தை அடைந்ததும் (ஒட்டகத்தைச்) விரைவுபடுத்தினார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா) அடையும் வழியில் புறப்பட்டார்கள் ஜம்ரதுல் அகபாவை (பெரிய ஜமரா)அடைந்ததும் ஏழுகற்களை எறிந்தார்கள் ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறினார்கள் சுண்டி எறியும் சிறுகற்களையே எறிந்தார்கள் பதனுல்வாதி என்ற இடத்திலிருந்து எறிந்தார்கள் : ஜாபிர் (ரலி) : முஸ்லிம் - சுருக்கம்.


நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து கொண்டு கல்லெறிந்ததை நான் பார்த்துள்ளேன் அங்கே அடிதடி இல்லை விரட்டுதல் இல்லை வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என்பது போன்ற கூச்சால் குலப்பபம் இல்லை : குதாமா பின் அப்துல்லாஹ் (ரலி) : நஸயீ, திர்மதி, இப்னுமாஜா


நாள் : துல்ஹஜ் பிறை 11 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-11 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்


2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்


நாள் : துல்ஹஜ் பிறை 12 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-12 ஆம் நாள் மினாவில் தங்குவது வாஜிபாகும்.


2-சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும், விரும்பினால் சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து மக்கா சென்று தவாஃபுல் விதாஃவை செய்து விட்டு ஊருக்கு பயணமாகலாம் அப்படி சூரியன் மறைவதற்கு முன்பு மினாவிலிருந்து செல்லமுடியவில்லையென்றால் அடுத்தநாள் அங்கு தங்கவேண்டும் குறிப்பிடப்பட்ட (11,12,13)நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது); அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் : அல் குர்ஆன் 2:203.


நாள் : துல்ஹஜ் பிறை 13 அன்று ஹஜ் தமத்து, ஹஜ் கிரான், ஹஜ் இஃப்ராத் செய்யக்கூடியவர்கள்

1-13 ஆம் நாள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் சிறிய ஜமராவிலும் நடுத்தரமான ஜமராவிலும் பெரிய ஜமராவிலும் மொத்தம் மூன்று ஜமராக்களிலும் தலா ஏழு கற்கள் வீதம் தக்பீர் சொல்லி எறிய வேண்டும் சிறிய ஜமரா மற்றும் நடு ஜமராக்களில் கல்லெறிந்த உடன் துஆ செய்ய வேண்டும்


2-மினாவிலிருந்து மக்கா செல்லுதல்


3-தவாஃபுல் விதா செய்தல் இது வாஜிபாகும் இதை விட்டால் பலி கொடுக்கவேண்டும் ஆனால் மாதவிடாய் மற்றும் பேற்றுத் தொடக்குள்ள பெண்களுக்கு இது வாஜிபல்ல பிறகு மக்காவிலிருந்து பயணமாகலாம்.


குறிப்பு: ஹஜ்ஜின் நாட்களில் குர்ஆன் ஓதுதல் துஆ செய்தல் ஆகியவற்றிற்கான சந்தர்ப்பமான சூல் நிலை ஆகவே வீணான பேச்சுக்கள் தர்க்கங்கள் இவைகளிலிருந்து விடுபட்டு நல்லறங்களில் ஈடுபட வேண்டும் (அல் குர்ஆன் : 2:197)


ஹஜ்ஜின் ருக்னுகள் நான்கு (முதல் நிலைக்கடமைகள்)

1-இஹ்ராம் அணிதல் ( நிய்யத் செய்தல் ) இது ஹஜ்ஜின் காரியங்களில் நுழைவதற்கான நிய்யத்து


2-அரஃபாவில் தங்குவது


3-தவாஃபுல் இஃபாளா


4-ஸஃபா மர்வாவில் (ஓடுதல்) ஸயி செய்வது


மேற்கூறப்பட்ட ருக்னுகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் அதைநிறைவேற்றும் வரை ஹஜ் நிறைவேறாது.


ஹஜ்ஜின் வாஜிபுகள் ஏழு ( இரண்டாம் நிலைக்கடமைகள்)

1-மீக்காத்தில் இஹ்ராம் அணிதல்

2-அரஃபாவில் சூரின் அஸ்தமிக்கும் வரை தங்குதல்

3-முஸ்தலிபாவில் இரவு தங்குதல்

4-மினாவில் இரவு தங்குதல்

5-பிறை 11, 12, 13, ஆம் நாள்களில் கல்லெறிதல்

6-தவாஃபுல் விதா செய்தல்

7-தலை மடியை மழித்தல் அல்லது குறைத்தல்

மேற்கூறப்பட்ட வாஜிபுகளளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் ஒரு பிராணியைப் பலியிட்டு (ஹரமிற்குள்) ஏழைகளுக்கு வழங்கவேண்டும் அவன் அதை சாப்பிடக்கூடாது


ஹஜ்ஜின் சுன்னத்துகள்

1-இஹ்ராமின் போது குளித்தல்

2-ஆண்கள் வெண்ணிறத்தில் இஹ்ராம் அணிதல்

3-தல்பியாவை உரத்து சொல்லுதல்

4-அரஃபா தின இரவில் மினாவில் தங்குதல்

5-ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்

6-இள்திபா செய்தல் (ஆண்கள் (தவாஃப்செய்யும்போது) உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் இஹ்ராம் ஆடையின் ஓர் ஓரத்தை வலது புற அக்குளுக்குக் கீழால் கொண்டு வந்து இடது தோளில் போடுவது)

7-உம்ரா தவாஃபில் அல்லது தவாஃபுல் குதூமில் மூன்று சுற்றுக்களில் சற்று விரைந்து செல்லல்.

8-ஹஜ் கிரான் மற்றும் இஃப்ராத் செய்பவர்கள் தவாஃபுல் குதூம் செய்தல் மேற்கூறப்பட்ட சுன்னத்துகளில் ஏதேனும் ஒன்றை விட்டுவிட்டால் எந்த குற்றமுமில்லை


இஹ்ராமில் தடுக்கப்பட்டவைகள் பதினொன்று

1-முடியை வெட்டுவது

2-நகங்களைக் களைதல்

3-ஆண்கள் தலையை மறைத்தல்

4-ஆண்கள் தையாலடையை அணிதல்

5-வாசளைத் திரவியங்களை உபயோகித்தல்

6-பெண்கள் கையுறைகள் அணிதல்

7-பெண்கள் முகமூடி அணிதல்

- இந்த ஏழு காரியங்களில் ஏதேனும் ஒன்றை ஒருவன் மறந்தோ அறியாமலோ செய்தால் எந்தகுற்றமுமில்லை அல்லது வேண்டமென்றே செய்தல் அதற்கு பரிகாரம் கொடுக்கவேண்டும்,

8-தரைவாழ் விலங்குகளை வேட்டையாடுதல் அல்லது அதற்கு உதவுதல் அதை விரட்டுதல் இன்னம் கொலை செய்தல் இதை செய்தல் அதற்கு பரிராகரம் கொடுக்கவேண்டும்

9- மனைவியை இச்சையுடன் கட்டியணைத்தல் மருமஸ்த்தானம் அல்லாத பகுதிகளில் தொடுவது, முத்தமிடுவதைப்போல இதனால் விந்து வெளிப்பட்டால் ஹஜ்ஜிற்கு பாதகமில்லை ஆனால் ஓர் ஒட்டகத்தை அறுத்து பலியிட்டு பரிகாரம் செய்யவேண்டும்


10-தனக்காகவோ பிறருக்காகவோ திருமண ஒப்பந்தம் செய்தல் இதை செய்தால் பரிகரம் ஒன்றும் இல்லை

11- உடலுரவு கொள்ளல் இது முதல் விடுபடுதலுக்கு முன்பு நிகழிந்தால் ஹஜ் நிறைவேறாது மற்ற காரியங்களை முழுமைப்படுத்தி விட்டு அதற்குப் பகரமாக வரும் ஆண்டில் கட்டாயமாக ஹஜ்ஜை களா செய்ய வேண்டும் மேலும் ஓர் ஒட்டகத்தை பலியிடவேண்டும், உடலுரவு கொள்ளல் முதல் விடுபடுதலுக்குப் பின்பு நிகழ்ந்தால் ஹஜ் நிறைவேறிவிடும் ஆனால் ஓர் ஆட்டைப் பலியிடவேண்டும்


இஹ்ராம் கட்டவேண்டிய காலம்

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன. என்றாலும்இ அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.


'ஹஜ் என்பது (அனைவராலும்) அறியப்பட்ட சில மாதங்களாகும்.' (அல்குர்ஆன் 2:197)


எனவே ஷவ்வால் மாதத்திலோஇ துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும், ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்துதான் துவங்குவதால், அதுவரை அவர்கள் தவாஃப் செய்து கொண்டும் தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிக் கொள்ள வேண்டும்.


தவாஃப் செய்யும் முறை

கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். இந்த ஆரம்ப தவாஃப் செய்யும்போது மட்டும் முதல் மூன்று சுற்றுகள் ஓடியும் நான்கு சுற்றுகள் நடந்தும் நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதீ


இவ்வாறு தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, அபுதாவுத்)


கஃபாவின் ஒரு மூலையில் 'ஹஜ்ருல் அஸ்வத்' எனும் கறுப்புக்கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும்போது ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்திலிருந்து, ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதீ


ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது

ஒவ்வொரு சுற்றின்போதும் அந்தக் கல்லை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும். நபி (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி


இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை எனவும் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நாபிவு. நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்


கையால் அதைத் தொடமுடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத்தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.


நபி (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும்போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள். அறிவிப்பவர் : ஆமிர் பின் வாஸிலா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபுதாவுத், இப்னுமாஜா


கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவதுபோல் சைகை செய்துகொள்ளலாம்


நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் தம் கையில் இருந்த ஏதோ ஒரு பொருளால் சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்


ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது.


'நீ எந்த நன்மையும் தீமையும் செய்யமுடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை முத்தமிட்டுருக்க மாட்டேன்' என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும்போது கூறினார்கள். நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா


ஹிஜ்ரையும் சேர்த்து சுற்றவேண்டும் கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரைவட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும். நபி (ஸல்) அவர்களின் இளமைப்பருவத்தில் கஃபாவை புணர் நிர்மாணம் செய்தபோது பொருள்வசதி போதாமல் சதுரமாகக் கட்டிவிட்டனர்


ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாப் செய்வது அவசியம்.


நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். 'ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழுவீராக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கிவிட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்திவிட்டனர்' என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : திர்மிதீஇ அபுதாவுத்இ நஸயீ
  

                           


ருக்னுல் யமானியை முத்தமிடுதல்

கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு மூன்றாவது மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகிறது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.


நபி (ஸல்) அவர்கள்இ நான்கு மூலைகளில் 'யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா

தவாஃப் செய்யும்போது 'உலூ' அவசியம்

தொழுவதற்கு எப்படி உலூ அவசியமோ அதுபோல் தவாஃப் செய்வதற்கும் உலூ அவசியமாகும். தூய்மையற்ற நிலையில் தவாஃப் செய்யக்கூடாது.


'நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தவுடன் செய்த முதல் வேலை உலூ செய்துவிட்டு கஃபாவை தவாஃப் செய்ததுதான்' அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்


ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது தவாஃப் தவிர மற்ற ஹஜ் கிரியைகள் அனைத்தையும் செய்யுமாறு நபி (ஸல்) கூறியுள்ளனர். (புகாரி, முஸ்லிம்) மாதவிலக்கு நிற்கும் வரை தவாஃப் செய்யக்கூடாது என்பதிலிருந்து தூய்மையின் அவசியத்தை உணரலாம்.


தவாஃப் செய்யும்போது கூறவேண்டியவை

தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துஆக்களையும் அறிந்து கொள்ளவேண்டும். ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வத்துக்கும் இடையே 'ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்' என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸாயீப் (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், நஸயீ, ஹாகீம்


'கஃபாவை தவாஃப் செய்வது ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுவது, கல்லெறிவது ஆகியவை அல்லாஹ்வின் நினைவை நிலை நாட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்று நபி (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்கள் : அஹ்மத், அபுதாவுத், திர்மிதீ


இறைவனை நினைவு கூறும் விதமாகவும் அவனைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் தவாஃபின்போது நடந்து கொள்ள வேண்டும். 'அல்லாஹ் அக்பர்' போன்ற வார்த்தைகளைக் கூறிக்கொள்ளலாம் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.


நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்

தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும். நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மூ ஸலமா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.


தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்

தவாஃப் செய்து முடித்தவுடன் 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும்போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்பட விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில்இ எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்தமாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.


நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்துவிட்டு 'மகாமே இப்ராஹீம்' என்ற இடத்தை அடைந்தபோது 'மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற வசனத்தை ஓதினார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அல்ஹம்து சூராவையும்இ குல்யாஅய்யுஹல் காபிரூன் சூராவையும்இ குல்ஹுவல்லாஹ் அஹத் சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்டு (முத்தமிட்டார்கள்) பிறகு ஸபாவுக்குச் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ


ஒவ்வொரு தவாஃப்க்குப் பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ஏழு சுற்றுகளுக்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை. அறிவிப்பவர் : ஸுஹ்ரீ நூல் : புகாரி


ஸயி செய்யும் முறை

ஸஃபா மர்வா எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது ஸஃபா மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓடவேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது தவாஃபை நிறைவேற்றிஇ இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'ஸஃபா'வுக்கு வந்து அதன் மேல் ஏறினார்கள். அங்கிருந்து கஃபாவைப் பார்த்து தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். அவர்கள் பிரார்த்திக்க நினைத்ததெல்லாம் பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத்


ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுவதற்கு முன்னால் 'ஸஃபா'வில் நமது தேவைகளை இறைவனிடம் கேட்டு துஆ செய்ய வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஸபாபை அடைந்ததும் 'நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்' என்ற வசனத்தை ஓதினார்கள். 'அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக' என்று கூறிவிட்டு ஸபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன்மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி 'லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா லாஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா. அன்ஜஸ வஃதா. வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா' என்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சமதரைக்கு வந்ததும்) 'பதனுல் வாதீ' என்ற இடத்தில் ஓடினார்கள். (தற்போது பச்சை(டியூப்) விளக்கு போடப்பட்டுள்ளது அந்த பச்சைவிளக்கு இடம் வந்ததும் ஓடவேண்டும் பச்சைவிளக்கு முடிந்ததும் நடந்துசெல்லவேண்டும்) (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும்வரை நடந்தார்கள். ஸபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், நஸயீ



                              
ஓட வேண்டிய பகுதி பச்சை விளக்குகளால் குறியிடப்பட்டுள்ளது.


ஸபாவில் செய்ததுபோலவே மர்வாவிலும் நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்து கொள்ள வேண்டும். ஸபா, மர்வாவுக்கிடையே ஓடுவது 'ஸஃயு' என்று கூறப்படுகின்றது. இவ்வாறு ஸஃயு செய்யும்போது மூன்று தடவை ஓட்டமாகவும், நான்கு தடவை நடந்து செல்ல வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் தவாஃப் செய்தார்கள். ஸஃயும் செய்தார்கள். (அப்போது) மூன்று தடவை ஓடியும், நான்கு தடவை நடந்தும் சென்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ


ஏழுதடவை ஸஃயு செய்யவேண்டும். ஸபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று. மர்வாவிலிருந்து ஸபாவுக்கு வருவது மற்றொன்று என்பதாகும்.


'நபி (ஸல்) அவர்கள் ஏழுதடவை ஸஃயு செய்தார்கள். ஸபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.' அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்
                                            

ஞாயிறு, 21 ஜூலை, 2013

நோன்பின் சட்டங்கள்

நோன்பு
அல்லாஹ்விற்காக ஃபஜ்ரிலிருந்து மஃக்ரிப் வரை உணணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளல் இவைகளிலிருந்து நோன்பு நோற்கிறேன் என்ற நிய்யத்துடன் தவிர்ந்து இருப்பது நோன்பாகும்

ஆதாரம்

விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் உள்ளச்சுத்தி பெற்று பயபக்தியுடையவர்களாகலாம். ( அல் குர்ஆன் القرآن183/2)

நோன்பின் வகைகள் - இருவகைப்படும். 1. ஃபர்ளு 2. சுன்னத்

ஃபர்ளான நோன்புகள்
மூன்று வகைப்படும். 1. ரமளான் மாத முழுவதும் நோன்பு நோற்பது. 2. குற்றப்பரிகார நோன்பு. 3. (நத்ர்) நோ்ச்சை நோன்பு. ரமளான் மாத நோன்பு, சுன்னத்தான நோன்புகளை மாத்திரம் பார்ப்போம். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் ரமளான் நோன்பு கடமையானது.

நோன்பு கடமை

சுய சிந்தனையுள்ள, பருவ வயதை அடைந்த, முஸ்லிமான நோன்பு நோற்க சக்தியுடைய ஒவ்வொருவர் மீதும் ரமளான் பிறையை பார்த்ததிலிருந்து அல்லது ஷஃபான் முப்பது நாட்கள் பூர்த்தியானதிலிருந்து ரமளான் மாத நோன்பு கடமையாகிறது. நீதமான ஒருவர் பிறையை பார்த்து உறுதிபடுத்தினாலே அதை ஆதாரமாகக்கொண்டு நோன்பு வைக்கலாம். ஆனால் மற்ற மாதங்களின் பிறையை உறுதிப்படுத்த ஷரீஅத் சட்டப்படி இருவர் பிறையை பார்த்ததற்கான நீதமான சாட்சிகள் அவசியம்.

நோன்பின் நிய்யத்
ஃபர்ளான நோன்பு வைத்திட இரவிலேயே (நிய்யத்) மனதில் நினைத்து கொள்வது அவசியம். சுன்னத்தான நோன்பிற்கு பகலில் கூட நிய்யத் செய்து (ஃபஜ்ரிலிருந்து நோன்பை முறிப்பவைகளை செய்யாமல் இருந்தால்) நோன்பினை தொடரலாம்.

நோன்பின் ஒழுக்கங்கள்

1.2. நோன்பு வைப்பதற்காக (இரவு சாப்பிடும்) ஸஹ்ர் நேர உணவை பிற்படுத்துவதும், நோன்பு திறந்திட (இஃப்தார்) உணவை விரைவாக முடிப்பதும் நபிவழியாகும். ஸஹ்ர் உணவில் பாக்கியம் உள்ளது. எனவே ஸஹ்ர் உணவை உண்ணுங்கள். நோன்பு திறந்திட பேரித்தம் பழத்தை சப்பிடுவதின் மூலமும், அது கிடைக்காத நேரம் தண்ணீர் அருந்துவதின் மூலமும் இஃப்தார் (நோன்பு திறப்பது) சுன்னத்தாகும். 3. இஃப்தார் (நோன்பு திறக்கின்ற) நேரம் துஆ அங்கீகரிக்கப்படுகிறநேரமாக இருப்பதால், அதிகமதிகம் பிரார்த்தனை புரிவது நபி (ஸல்) அவர்கள் நமக்கு ஆர்வமூட்டிய செயலாகும். 4. அதிகமாக (சிவாக்) பல் துலக்குவது. 5. குர்ஆன் ஓதுவதில் அதிகம் ஈடுபடுவது. 6. தான தர்மங்கள் செய்வது நபி வழியாகும். 7. ஆயிரம் மாதங்களை விட சிறப்பு மிக்க லைலத்துல் கத்ர் எனும் கத்ருடைய இரவு ரமளானின் இறுதி பத்து நாட்களில் அது இருப்பதால் தொழுகை, தர்மங்கள், தெளபா, பிரார்தனை, இஃதிகஃப் போன்ற வணக்க வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்தி, மருமை வெற்றிக்கு தயாராகிக்கொள்வதும் மிக ஏற்றமான நபி வழியாகும்.

நோன்பை முறிப்பவைகள்

1. நோன்பை வைத்துக்கொண்டு வேண்டுமென்றே ஏதாவது சாப்பிடுவது, அல்லது 2. குடிப்பது. 3. அல்லது வாந்தி எடுப்பது. 4. அதிக இரத்தத்தை கொடுப்பது அல்லது வெளியேற்றுவது. 5. பெண்களுக்கு மாதத்தீட்டு அல்லது பிள்ளை பேறு தீட்டு ஏற்படுவது, 6. இச்சையின் காரணமாக இந்திரியம் வெளியேறுவது ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்தாலும் நோன்பு முறிந்திடும். இதனை செய்தவர்கள் நோன்பினை களா (ரமளான் மாதம் முடிந்ததும் பெருநாள்களை தவிர்த்து வேறு தினங்களில் நோன்பு ) இருந்திட வேண்டும். தான் புரிந்த தவறுக்காக அல்லாஹ்விடம் (தெளபா) பாவமன்னிப்பும் கோர வேண்டும். ஆனால் 7. உடலுறவின் மூலம் நோன்பை முறித்தவராக இருந்தால் நோன்பை களா செய்வது மட்டுமல்லாது அவர், தான் செய்த தவறுக்கு குற்றப்பரிகாரமாக ஓர் அடிமையை உரிமையிடவேண்டும், கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதற்கும் முடியாத தருணத்தில் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நோன்பில் ஆகுமானவை

1. நோன்பு இருந்தவர் மறந்தவராக சாப்பிட்டாலோ, குடித்தாலோ தொடர்ந்து நோன்பு நோற்கட்டும். ஏனெனில் மறதியை கொடுத்தது அல்லாஹ் அவரை உண்ண, குடிக்க வைத்தான்.2. உஷ்ணத்தை தணிக்க தலைவழியாகக்கூட தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். 3. கண், காதுக்கு (டிராப்ஸ்) சொட்டு மருந்து உபயோகிக்கலாம். 4. உடலுறவிற்கு செல்லாத அளவிற்கு ஆசையை அடக்குபவர் தன் மனைவியை முத்தமிடலாம். 5. குளுக்கோஸ் (சலைன்) போன்ற உணவுக்குறியதை தவிர்த்து மருந்துகளை மட்டும் ஊசி மூலம் போட்டுக்கொள்ளலாம். 6. ஆஸ்துமா போன்ற வியாதி உள்ளவர்கள் சுவாசிப்பதை இலேசு படுத்த வாய் வழியே ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். 7. அதிகமாக நீர் செலுத்தாது வாய் கொப்பளித்து, மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தப்படுத்தலாம். 8. உமிழ் நீர் விழுங்குவது, காற்றினால் பறந்து வரும் பொடிகள், மாவு வகைகள் (நம்மால் தவிர்க்க முடியாததால்) வாய்,மூக்கு வழியாக சென்றாலும் நோன்பு கூடிவிடும். 9. இரவில் மனைவியோடு கூடி அல்லது காலை தூக்கத்தில் ஸ்கலிதம் ஆகி குளிப்பு கடமையானவராக இருந்தால் நோன்பு முறியாது. இவர்கள் தொழுகைக்காக விரைவுபடுத்தி குளித்திடவேண்டும்

நோன்பை விட்டுவிடுவதற்கு சலுகை பெற்றவர்கள்
1.2. நோயாளிகளுக்கும், பிரயாணிகளுக்கும் ரமளானில் நேன்புவைப்பது சிரமமாக இருந்தால் பிற மாதங்களில் நோன்பினை நோற்று (அதனை களா செய்து) கொள்ளலம். 3,4. கர்ப்பிணியும், (குழந்தைக்கு பாலுட்டும் ) தாயும் ஆகிய இருபிரிவினரும் தனது கருவில் வளரும் சிசுவின் அல்லது குழந்தையின் உடல் நிலைக் கருதியோ, அல்லது தன்னுடல் நலனைப் பேணியோ நோன்பு வைக்காதிருக்க சலுகை இருப்பதால் வேறொரு மாதங்களில் அந்நோன்பினை களா செய்திடலாம். 5. ஹைல் நிஃபாஸ் எனும் மாத விடாய், பிள்ளைபேறு தொடக்குண்டான பெண்கள் நோன்புவைப்பது அவர்களுக்கு (தடையாகும்) ஹராமாகும். இவர்கள் வேறு நாட்களில் விடுபட்ட நோன்பினை களா செய்திட வேண்டும். 6,7. நோன்பு வைப்பதற்கு முடியாத வயோதிகர்கள், உடல் நிலை சுகவீனர் (உடல் நிலை சீராகுவதை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருப்பாரேயானால்) நோன்பு நோற்காமல் விடுதவற்கு சலுகை உள்ளது. இவர்கள் விடுபட்ட நோன்பின் எண்ணிக்கையை களா செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணம் காலம் செல்லச்செல்ல வயோதிகம் வாலிபமாக திரும்புவதும், நீடித்த நோய் சீராகுவதும் இல்லை.

சுன்னத்தான நோன்புகள்

ஹஜ் மாத ஒன்பதாம் நாள் அரஃபா தினம் 2. (பெரு நாளை தவிர்த்து) ஹஜ் மாத முதல் பத்து நாட்கள். 3.ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) தினம். 4,5. ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன் இரு தினங்கள். 6.(ரமளான் மாதம் முடிந்து) பெருநாளை அடுத்த ஷவ்வால் மாதத்தினுள் ஆறு தினங்கள். 7. ஒவ்வொரு மாதத்திலும் பதிமூன்றாம், பதிநான்காம், பதினைந்தாம் ஆகிய மூன்று தினங்கள். 8.ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்பு நோற்பது ஆகியவை சுன்னத்தான நோன்பாகளாகும்,

நோன்புவைத்திட தடையான நாட்கள்
1,2. இரு பெருநாள்கள். 3. (யவ்முஷ்ஷக்) ஷஃபான் இறுதி தினமாகிய ரமளானுக்கு முந்திய தினத்தில் நோன்பு நோற்பதற்கு தடை செய்ய்ப்பட்டுள்ளது. 4. அய்யாமுத்தஷ்ரீக் துல்ஹஜ் 11,12,13ம் நாட்கள். என்கிலும் (நோ்ச்சை, குற்றப்பரிகாரம் ) போன்ற காரணங்களுள்ள நோன்புகளை இந்நாள்களில் நோற்கலாம். 5. வெள்ளிக்கிழமை தனித்திட்ட நாளாக நோன்பு வைப்பதற்கு தடை. ஆனால் வெள்ளிக்கிழமைக்கு முந்திய அல்லது பிந்திய தினத்துடன் சோ்த்தாற் போல இரு தினங்களாக தொடர்ந்த வெள்ளிக் கிழமையில் நோன்பு நோற்கலாம். 6. வருட நாட்களில் தடை செய்யப்பட்ட நாட்கள் இருப்பதால் வருட முழுவதும் நோன்பு நோற்பது தடை. 7.மஃக்ரிபிற்கு பிறகு நோன்பு திறக்காது தொடர் நோன்பு நோற்பதற்கும் தடை. 8. கணவர் உடன் இருக்கும்போது அவர் உத்தரவு பெறாது பெண்கள் சுன்னத்தான நோன்பு வைத்திடுவது ஆகிய அனைத்தும் தடையாகும். அல்லாஹீ அஃலம்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

ரமழான்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன்:2:183 )

ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அழைத்தார்கள். நூல்:அபூதாவுது,நஸயீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள்தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது

நோன்பாளி செய்யக் கூடாதவை 
எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி"என்று கூறி விடவும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185) எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்

ஞாயிறு, 16 ஜூன், 2013

ஷஃபான் மாதமும், நாமும்

இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, திடவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவை பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருங்கக் கூறின், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. இத்தகைய நோன்புகளை பெறும்போதனைகளாக மட்டுமின்றி தமது வாழவிலும் செயல்படுத்திக் காட்டியவர்கள் தான் காருண்ய நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.

இந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் தான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை, என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

மற்றுமொரு அறிவிப்பில்,

நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்) என வந்துள்ளது.

ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதால் அம்மாதம் நபி (ஸல்) அவர்களுக்கு மிக விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அம்மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள். எனினும், அவர்கள் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். (நஸஈ).

ஷஃபான் மாதம் முழுவதும், அம்மாத்தின் அதிகமான நாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என வந்துள்ள மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போன்று வெளிப்படையாகத் தோன்றினாலும், அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்காது அம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மாத்திரம் தான் நோற்றிருக்கின்றார்கள் என்பதை குறித்து ஹதீஸ்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது எவ்வித முரண்பாடுகளுமின்றி விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்கும்படி பணிக்கப்பட்டதன் ரகசியம் :

உஸாமா (ரலி) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ,ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)

மக்கள் அசிரத்தையாக காட்டும் ஷஃபான் மாதம் சிறப்பு வாய்ந்தது. அடியார்கள் செய்யக் கூடிய அமல்கள் அம்மாதத்தில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் எடுத்துக் காட்டப்படும் பொழுது, நோன்பும் கூட இருந்தால் தான் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது என மேற்படி ஹதீஸ் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அதுமட்டுமின்றி ஷஃபான் மாத நோன்பு ரமழான் மாத நோன்பிற்கான சிறந்ததோர் பயிற்சியாகவும் அமைகிறது. இயல்பிலேயே - திடீரென ஏற்படும் உடல், உள ரீதியான கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை.  ஆனால் அதை முன்கூட்டியே ஒரு பயிற்சியாககக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகிறது. எனவே தான் பசி, தாகம், இச்சை போன்றவற்றை அடக்கி ஷஃபான் மாத நோன்பை கஷ்டமாகக் கருதாது இலகுவாக நோற்று விடுவான். இந்த வகையில் ஷஃபான் நோன்பு, ரமழான் நோன்பிற்கான முன்னுரைசயாகவே அமைகிறது.

ஷஃபான் மாதத்தில் எந்தளவு நோன்பு நோற்க முடியுமோ அந்தளது நோற்பது நபிவழியாக இருக்கிறது. மாறாக, 15 ம் நாள் தான் சிறப்பான நாள், அதுவே பராஅத் துடைய நாள், அன்று நோற்கும் நோன்பு மட்டுமே சிறப்பானது எனக் கூறுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணானது.

பராஅத் இரவும், வணக்கங்களும் :

நபி (ஸல்) அவர்கள் அதிம் அழுத்தம் கொடுத்துப் போதித்துச் சென்ற ஷஃபான் மாத நோன்புகள் இன்று புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் காட்டித் தராத பராஅத் நோன்பும், அதில் புரியப்படும் சில வணக்கங்களும் சுன்னாவின் பெயரால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வேதனை தருவதாகும்.

ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் இரவே பராஅத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்கு இப்படியொரு பெயரை அல்லாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ சூட்டியதற்கு சரியான சான்றெதுவும் இல்லை. அவ்விரவுக்குச் சிறப்பிருப்பதாகக் கருதிச் செய்யப்படும் தொழுகை பிரார்த்தனை போன்ற வணக்கங்கள் கண்ணியத்திற்குரிய இமாம்களாலும், இஸ்லாமிய அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.

பராஅத் என்றொரு இரவு இல்லை. அதற்கு எவ்வித சிறப்புக்களுமில்லை என இவ்வளவு தெளிவுபடுத்தப்பட்டபின்னரும், அந்த இரவில் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் ஸுறா யாஸீனை ஓத வேண்டுமெனவும், அவ்வாறு ஓதவதால் ஆயள் நீளமாக்கப்படுகிறது. ரிஸ்க் விஸ்தீரணமாக்கப் படுகின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன போன்ற பலவிதமான பயன்கள் கிடைக்கின்றன எனக் கூறுவது எவ்வளவு தவறானது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட பயன்கள் மூன்று விதமான உத்தரவாதங்கள் ஆகும். இத்தகைய உத்தரவாதங்களை அல்லாஹ்வோ, அவனது தூதரோதான் வழங்க முடியும். அவ்விருவரில் ஒருவர் வழங்குவதானால் அது அல்குர்ஆனிலோ அல் ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்று யாஸீன் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் அறிவுறுத்தியதற்கு எந்தவித ஆதாரமுமில்லை.

ஆயுளை நீடிப்பதும், ரிஸ்க்கை விஸ்தீரனமாக்குவதும், பாவங்களை மன்னிப்பதும் அல்லாஹ் செய்ய வேண்டியவைகளாகும். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி இத்தகைய உத்தரவாதங்களை மனிதர்கள் வழங்குவது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையீடு செய்வது ஆகும்.

ஷவ்வால் ஆறு நோன்வுகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)

வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)

அரஃபா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்).

இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளெதுவும் இல்லாத, எந்த விதமான உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது கவலைப்பட வேண்டியதும், தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும்.

எனவே, ஷஃபானின் 15 ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மறுமையின் மீது நம்பிக்கை


அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'நான் நிம்மதியான, கவலையற்ற வாழ்க்கை எப்படி வாழ முடியும்? ஸூர் எனும் எக்காளத்தை ஊதும் பொறுப்புடைய வானவர் (இஸ்ராஃபீல் (அலை) அவர்கள்) எக்காளத்தை வாயில் வைத்துக்கொண்டு செவி சாய்த்து, தலைதாழ்த்திய வண்ணம் - எப்போது ஊதும்படி கட்டளை பிறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (இராணுவத்துக்கு அபாய அறிவிப்பு தரப்படுகின்ற அல்லது இராணுவத்தக்கு திரட்டுவதற்காக ஊதப்படுகின்ற ஊதுகுழலுக்கு ஸூர் - எக்காளம் என்பர். இறுதித் தீர்ப்புநாளில் ஊதப்படும் குழலின் எதார்த்த நிலையை எவரால் அறிந்திட முடியும்?) மக்கள் வினவினார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றீர்கள்? அதற்கு அண்ணலார் பதிலளித்தார்கள்: 'அல்லாஹ்வே நமக்குப் போதுமானவன், அவன் சிறந்த பாதுகாவலன் (ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் ) என்று சொல்லிக் கொண்டிருங்கள்! (திர்மிதி)

விளக்கம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய நிம்மதியின்மையும், கவலையையும் கண்டு மக்கள் இன்னும் அதிகமாகத் திகைப்புற்றார்கள். 'தாங்களே இப்படி நினைக்கிறீர்கள் என்றால் அந்த நாளில் எங்களுடைய நிலை என்னவாகுமோ தெரியவில்லையே? என்று கேட்டார்கள். மேலும் அந்த நாளில் வெற்றியடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குக் காண்பியுங்கள் என்று கோரினார்கள். அண்ணலார் அவர்களுக்கு விளக்கிக் கொடுத்தார்கள், அதாவத, இறைவனையே முழவதும் சார்ந்திருங்கள், அவனது உதவியிலும் பாதுகாப்பிலும் வாழ்க்கையைக் கழியுங்கள்! அவனை வணங்கி அடிபணந்து வாழ்பவர்கள்தாம் வெற்றியடைவார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவன் மறுமை நாளை தன் கண்களால் காண விரும்பினால், அவன் இதஷ் ஷம்ஸுகுவ்விரத் (அத்தியாயம் 81), இதஸ்ஸமாஉன் ஃபதரத் (அத்தியாயம் 82),  இதஸ்ஸமாஉன் ஷக்கத் (அத்தியாயம் 84), ஆகிய மூன்று அத்தியாயங்ளையும் ஓதட்டும்! நெஞ்சில் பதியும் வண்ணம், மறுமை நாள் குறித்து இந்த மூன்று அத்தியாயங்களிலும் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. (திர்மிதி)

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'யவ்ம இதின் துஹத்திஸு அக்பாரஹா' (அந்த நாளில் பூமி தன் நிலைமைகள் அனைத்தையும் எடுத்துரைக்கும்) என்னும் வசனத்தை ஓதினார்கள். பின் தம் தோழர்களை நோக்கி, 'தன் நிலைமைகளை எடுத்துரைக்கும் என்பதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று வினவினார்கள். 'அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்தாம் தெரியும்!!' என்று தோழர்கள் பதிலளித்தார்கள். அண்ணலார் கூறினார்கள்: 'இன்ன ஆண், இன்ன பெண் என் முதுகின் மீது, இன்ன நாளில், இன்ன நேரத்தில், இந்தக் கெட்ட செயலை அல்லது நல்ல செயலைச் செய்தார்கள்' என்று பூமி மறுமைநாளில் சாட்சியளிக்கும். இதுதான் இந்த வசனத்தின் பொருளாகும். மக்களின் செயல்களையே நிலைமைகள் என்று இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (திர்மிதி)

அறிவிப்பாளர்: அதீ (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: 'உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் நேரடியாகப் பேசுவான். (கணக்கு வாங்குவான்) அங்கு பரிந்துரை செய்பவர்  எவரும் இருக்கமாட்டார், அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான், பரிந்துரை செய்பவர், உதவுபவர் யாராவது உள்ளனரா என்று! அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது. பின்னர் இடப்பக்கம் நோட்டமிடுவான். அங்கும் அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் தென்படாது பின்னர் முன்பக்கம் பார்வையினை செலுத்;;;;துவான். அங்கு (தனக்கே உரிய பயங்கரங்கள் அனைத்துடனும் தென்படும்) நரகத்தை மட்டுமே காண்பான். எனவே மக்களே! நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள், பாதி பேரீத்தம் பழத்தை தருமம் செய்தேனும்!'

விளக்கம்:

இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணலார் (ஸல்) அவர்கள், மக்களுக்கு இறைவழியில் செலவிடுதல் பற்றி (இறைநெறிக்காகவும், ஆதரவற்ற மக்களுக்காகவும் செலவிடுவது பற்றி) அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள். எனவே, அதனைப் பற்றி மட்டும் குறிப்பிட்டார்கள். ஒரேயொரு பேரீத்தம் பழம் ஒருவனிடம் இருந்து அதில் பாதியை மடடுமே அவன் இறைவழியில் செலவிட்டாலும் அதுவும் இறைவனின் பார்வையில் விலை மதிப்பு மிக்கதாகும். செலவிடப்பட்ட செல்வம் அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்று இறைவன் பார்ப்பதில்லை. மாறாக, செலவிடுபவரின் உணர்வுகளைத்தான் பார்க்கின்றான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: '(மறுமைநாளில்) ஒரு மனிதன் இறைவன் முன்னால் வருவான். இறைவன் அவனிடம் கூறுவான்: 'நான் உனக்கு கண்ணியத்தையும் சிறப்பையும் வழங்கவில்லையா? உனக்கு மனைவியை வழங்கவில்லையா? நான் உனக்கு அவகாசம் கொடுத்திடவில்லையா? அந்த வாய்ப்பை பயன்படுத்தி நீ மக்கள் மீது ஆட்சி செலுத்தவில்லையா? அவர்களிடம் வரி வசூலிக்கவில்லையா?' அதற்கு மனிதன் இறைவன் அளித்த அருட்கொடைகளை எல்லாம் ஒப்புக்கொள்வான். பின்னர் அல்லாஹ் அவனிடம் கேட்பான்: 'ஒருநாள் என் முன்னால் நீ நிறுத்தப்படுவாய் என்று நினைக்கவில்லையா?' அகற்கு அவன் 'இல்லை! நினைக்கவில்லை' என்று பதிலளிப்பான். அல்லாஹ் அவனிடம் கூறுவான்: 'நீ எப்படி என்னை உலகில் மறந்திருந்தாயோ அவ்வாறே இன்று நான் உன்னை மறந்து விடுவேன்.'

பின்னர் இவ்வாறே இரன்டாம் மனிதன் (மறுமையை மறுத்தவன்) இறைவனின் முன்னால் வருவான். அவனிடமும் இவ்வாறே வினவப்படும். பின்னர் மூன்றாமவன் வருவான். (இறைமறுப்பாளர்களான) முந்திய இருவரிடமும் கேட்ட அதே கேள்விகளையே அல்லாஹ் அவனிடமும் கேட்பான். இந்த மூன்றாமவன் பதில் கூறுவான்: 'என் இறைவனே! நான் உன் மீதும், உன் வேதத்தின் மீதும், உன் திருத்தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான் தொழுது வந்தேன், நோன்பு நோற்று வந்தேன், உன் வழியில் என் செல்வத்தைச் செலவிட்டு வந்தேன்'. (அண்ணலார் கூறினார்கள்:) இவ்வாறே முழு வலிமையுடன் தன்னுடைய இன்னும் பல நற்செயல்களை எண்ணிக் காட்டுவான். அப்போது அல்லாஹ் அவனிடம் கூறுவான்:

'போதும் நிறுத்து!' பின்னர் மீண்டும் இறைவன் 'நாம் இப்போதே உனக்கெதிராக சாட்சியம் சொல்பவரை அழைக்கிறோம்' என்று கூறுவான். அப்போது 'எனக்கெதிராக சாட்சியம் அளிப்பவன் எவனாயிருப்பான்?'என்று அந்த மனிதன் தன் மனத்திற்குள் எண்ணுவான். பின்னர் அவனது வாய்க்கு முத்தரை வைத்து அடைக்கப்பட்டுவிடும்! (ஏனெனில் உலகில் இவன் எப்படி இறைத்தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் முன்னால் வெட்கமின்றி தன்னைத் தூய்மையானவன் என்று பொய்யாக பறைசாற்றி வந்தானோ, அவ்வாறே அல்லாஹ்வின் முன்னால் கூட பொய் சொல்ல வெட்கப்படமாட்டான்) அவனது தொடை, சதை, எலும்புகள் ஆகியவற்றிடம் வினவப்படம். அவையனைத்தும் இந்த மனிதனின் சூழ்ச்சிகரமான செயல்களை மிகச்சரியாக எடுத்துரைத்துவிடும். இவ்விதம் புனைந்து பொய் பேசும் வழியை அல்லாஹ் அடைத்துவிடுவான். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'இவன்தான் உலகில் நயவஞ்சகம் புரிந்த மனிதன் ஆவான்: இவன்தான் அறைக் கோபத்திற்குரியவனாகிவிட்ட மனிதன் ஆவான்.'(முஸ்லிம்)

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில தொழுகைகளில், 'இறiவா! என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக!' என்று இறைஞ்சுவதை நான் கேட்டிருக்கின்றேன்.

'இலேசான கணக்கு என்பதன் பொருள் என்ன?' என்று நான் வினவினேன். அதற்கு அண்ணலார் பின்வருமாறு பதிலளித்தார்கள்: 'அல்லாஹ் மனிதனின் வினைச் சுவடியைப் பார்த்து, அதில் பதிக்கப்பட்டிருக்கும் தீய செயல்களைப் புறக்கணித்து விடுவதே இலேசான கணக்காகும். ஆயிஷாவே! கணக்கு வாங்கப்படும்போது எவனுடைய ஒவ்வொரு செயலும் துரவி ஆராயப்படுகின்றதோ, அவன் அழிந்துவிட்டான் என்றுதான் பொருள்!'  (முஸ்னத் அஹமத்)

விளக்கம்:

எவர்கள் இறைவழியில் நடைபோடுகின்றார்களோ, தீய சக்திகளுடன் போரிட்டுக் கொண்டே இருக்கின்றார்களோ, அவ்வாறு போரிட்ட வண்ணமே அவர்களுடைய ஆயுட்கால தவணையும் முடிவடைந்து விடுகின்றதோ அவர்களடைய தவறுகளை இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ் மன்னித்துவிடுவான் என்னும் நற்செய்தி திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுடைய நற்செயல்களை மதித்து அவர்களை சுவனத்தில் புகுத்துவான்.

அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருச்சமூகம் சென்று நான் கேட்டேன்: 'மக்கள் கேள்வி கணக்குக்காக அகிலங்களின் அதிபதியின் முன்னால் நிற்கக்கூடிய அந்த நாளைச் சற்று சிந்திப்பாயாக' என இறைவன் கூறியுள்ளானே - அந்த நாளில் இறைவன் திருமுன் எவர்தான் நிற்க முடியும்? அந்த நாள்தான் ஆயிரம் நாட்களுக்குச் சமமானதாயிற்றே!' என்று வினவினேன். அண்ணலார் பதிலளித்தார்கள்: '(அந்த நாள் குற்றவாளிகளுக்கும், இறை துரோகிகளுக்கும் கடுமையான நாளாய் இருக்கும். அது அவர்களுக்கு ஒராயிரம் ஆண்டாகத் தோன்றும். துன்பத்திற்குள்ளான மனிதனின் நாள் நீளமானதாக இருக்கும். அது தள்ளினாலும் நகர்வதில்லை.) அந்த நாள் இறைநம்பிக்கையாளனுக்கு இலேசானதாக இருக்கும். இலேசானதாக மட்டுமல்ல, கடமையான தொழுகை கண்களுக்கு குளிர்ச்சியாக இருப்பதுபோல் அந்தநாள் அவன் கண்களுக்கு குளிர்ச்சியாக அமையும்!' (மிஷ்காத்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'அல்லாஹ் கூறுகின்றான்: எந்தக் கண்ணும் காணாத, உந்தக் காதும் கேட்காத, எவருடைய உள்ளத்திலும் தோன்றாத அருட்கொடைகளை என் நல்லடியார்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளேன். நீங்கள் விரும்பினால் குர்ஆனின் பின்வரும் வசனத்தை ஓதுங்கள்: நல்லடியார்களுக்காக எத்தனைக் கண்குளிர் சாதனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன - ( மறுமைநாளில் அவர்களுக்குக் கிடைக்க இருக்கின்றன) என்பது பற்றி எந்த மனிதனும் அறியமாட்டான்.'   ( புகாரி, முஸ்லிம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'சுவனத்தில் ஒரு சாட்டை வைக்கின்ற சிறிதளவு இடம்கூட உலகம் மற்றும் உலகின் பொருட்களைவிடச் சிறந்ததாகும்.'    (புகாரி, முஸ்லிம் )

விளக்கம்:

சாட்டை வைக்கின்ற இடம் என்பது, மனிதன் தன் படுக்கையை விரித்து படுத்துக் கொண்டிருக்கின்ற சிறிய இடத்தைக் குறிக்கின்றது. இதன் கருத்து: இறைநெறியின்படி வாழ்வதனால் ஒருவருடைய உலக வாழ்வு அழிந்துவிட்டாலும், அவர் வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் இழந்துவிட்டாலும் அதற்குப் பகரமாக சுவனத்தில் சிறிய இடமொன்று கிடைத்துவிட்டால், இது மிக இலாபகரமான வியாபாரமாகும். ஏனெனில் அழிந்துவிடக்கூடிய ஒரு பொருளை தியாகம் செய்ததன் பயனாக, அல்லாஹ் அவருக்கு என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு பொருனை அளித்துவிட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

(இறுதித் தீர்ப்புநாளில்) உலகில் அனைவரையும்விட வளமாக வாழ்ந்த நரகவாசி ஒருவன் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவான். நெருப்பு அவனது உடம்பில் தனது பாதிப்பு முழவதையும் ஏற்படுத்தி விடும்போது, அவனிடம் 'எப்போதேனும் நீ நிம்மதியான காலகட்டத்தை அனுபவித்ததுண்டா?' என்று வினவப்படும். அவன் பதிலளிப்பான்: 'இல்லை! என் இறைவா, உன் மீதாணையாக! ஓருபோதும் கண்டதில்லை.'

பின்னர் உலகில் மிகவும் கடினமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த சுவனவாசி ஒருவன் கொண்டு வரப்படுவான். சுவனத்தின் அனைத்து இன்பங்களின் செழிப்பும் அவன் மீது நன்கு பிரதிபலிக்க ஆரம்பித்துவிடம்போது அவனிடம் 'நீ எப்போதாவது வறுமையை - கடினமான நிலையில் கண்டதுண்டா? எப்போதாவது நீ துன்பம் அனுபவித்ததுண்டா?' என்று வினவப்படும். அவன் கூறுவான்: 'என் இறைவா! நான் வறுமையிலும் வசதியின்மையிலும் ஒருபோதும் சிக்கியதில்லை. நான் துன்ப நிலையை என்றுமே பார்த்ததில்லை.' (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'இன்பங்கள், ஆசாபாசங்கள் ஆகியவற்றால் நரகம் சூழப்பட்டிருக்கிறது. கஷ்டங்கள், துன்பத் துயரங்கள் ஆகியவற்றால் சுவனம் சூழப்பட்டிருக்கிறது.' (புகாரி, முஸ்லிம் )

விளக்கம்:

எவன் தன் மனஇச்சைகளின்படி நடந்து, உலகத்தின் இன்பங்களிலேயே நிலையித்திருக்கின்றானோ அத்தகையவனின் இருப்பிடம் நரகமாகும். சுவனத்தை அடைய வேண்டும் என்னும் ஆசையுள்ளவன் முட்கள் நிறைந்த வழியினைத் தேர்ந்தெடுத்து, மனஇச்சைகளுடன் போராடி, அவற்றைத் தோல்வியுறச் செய்ய வேண்டும். எல்லாவித கஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் மனோதிடத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தக் கஷ்டம் சூழ்ந்த மேடுபள்ளங்களைக் கடந்து செல்லாதவன் சுகமும் சொகுசு வாழ்வும் உள்ள சுவனத்தை எங்ஙனம் அடைவான்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:

'நான் நரக நெருப்பைவிட பயங்கரமான ஒன்றைப் பார்த்ததில்லை. ஆனால், அதனை விட்டு வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான். நான் சுவனத்தைவிட உயர்ந்த ஒன்றைப் பார்த்ததில்லை. ஆனால், அதனை விரும்பக்கூடியவன் உறங்கிக் கொண்டிருக்கின்றான்.' (திர்மிதி)

விளக்கம்:

பயங்கரமான ஒன்றைப் பார்த்த பிறகு மனிதனுக்கு தூக்கம் பறந்தோடிவிடுகிறது. அதிலிருந்து  வெருண்டோடுகின்றான்! அது குறித்து அவனுக்கு நிம்மதி ஏற்படாதவரை அவன் உறங்குவதில்லை. இதேபோன்று ஒருவனுக்கு ஒரு நல்ல பொருளின் மீது நாட்டம் ஏற்பட்டுவிட்டால் அதனை அடையாத வரை அவன் உறங்கவும்மாட்டான், நிம்மதியுடன் அமரவும் மாட்டான். எதார்த்த நிலை இவ்வாறு உள்ளபோது சுவனத்தை அடைய நினைப்பவர்கள் ஏன் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்? நரகத்தை விட்டுத் தப்பித்து ஓடும் நினைப்பு ஏன் இவர்களுக்கு வருவதில்லை?

ஒருவனுக்கு ஒன்றைக்குறித்து அச்சம் ஏற்படுமாயின் அதைப்பற்றி அவன் அலட்சியமாகவும், ஒன்றும் தெரியாதது போலவும் இருக்கமாட்டான். நல்லவற்றில் ஆர்வம் கொண்ட ஒருவன் எப்பொழுதும் துடிப்புடன் இருப்பான். கொஞ்சம் நேரம்கூட அமைதியுடன் அமரமாட்டான்.

அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தவரை நோக்கிக் கூறினார்கள்:

'நான் (கவ்ஸர் எனும்) தடாகத்தை உங்களுக்கு முன் சென்றடைந்து உங்களை வரவேற்பேன், உங்களுக்குத் தண்ணீர் புகட்டுவதற்கான ஏற்பாட்டினைச் செய்வேன். என்னிடம்  வருபவர்கள் (கவ்ஸரின் நீரை ) அருந்துவார்கள். அதனைப் பருகியவர்களுக்கு இனி ஒருபோதும் தாகம் ஏற்படாது. சிலர் என்னிடம் வருவர். அவர்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன். அவர்களும் என்னை யார் என்று புரிந்துகொள்வார்கள். ஆயினும், அவர்கள் என்னை அடையமுடியாதவாறு தடுக்கப்படுவார்கள். அப்போது நான் 'இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்தாம்(என்னிடம் வர அனுமதியுங்கள்!) என்று கூறுவேன். அதற்கு 'இவர்கள் உங்களின் மரணத்திற்குப்பின் நீங்கள் கொண்டுவந்த தீனில் (வாழ்கை நெறியில்) எத்தனை எத்தனையோ புதிய பித்அத்களை (அநாச்சாரங்களை) நுழைத்துவிட்ட செய்தியினை தாங்கள் அறியமாட்டீர்கள்!' என்று என்னிடம் சொல்லப்படும். 'அவ்வாறாயின் எனக்குப் பின்னால் தீனுடைய அமைப்பையே சீர்குலைத்த அவர்கள் தொலைந்து போகட்டும்! தொலைந்து போகட்டும்!' என்று நான் கூறுவேன்.'

விளக்கம்:

இந்த ஹதீஸ் தன்னுள் ஒரு மகத்தான நற்செய்தியினையும் மிகப்பெரிய அச்சுறுத்தலையும் கொண்டு திகழ்கிறது. நற்செய்தி இது: தாம் கொண்டு வந்த தீனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயலாற்றியவர்களைப் பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கு வரவேற்பார்கள். எச்சரிக்கை இது: எவர்கள் வேண்டுமென்றே தீனுக்கு முற்றிலும் எதிரான புதுப்புது விஷயற்களை தீன் என்ற பெயரிலேயே நுழைய வைக்கின்றார்களோ, அத்தகையோர் பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களின் திருக்கரங்களால் 'கவ்ஸர்' என்னும் தண்ணீரைப் பருகும் பேற்றனை இழந்துவிடுவார்கள்!

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: 'தூய்மையான எண்ணத்துடன் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை மொழிந்தவன் மறுமைநாளில் என்னுடைய பரிந்துரையைப் பெறுவான்.' (புகாரி)

விளக்கம்:

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் இரத்தினச்சுருக்கமானவை. ஆயினும் பொருட்செறிவு மிக்கவை. இதன் கருத்து: எவன் ஓரிறைக் கொள்கையை மேற்கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லையோ, எவன் இறைவனுக்கு இணைவைக்கும் அருவருக்கத்தக்க மாசுகளில் உழல்கின்றானோ அத்தகையவனுக்கு பெருமானார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிட்டாது. இதே போன்று ஒருவன் நாவினால் மட்டும் திருக்கலிமாவை மொழிந்து, உள்ளத்தால் அதனை அவன் மெய்யென்று உறுதிகொள்ளவில்லையென்றால், அவனும் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிந்துரையைப் பெறும் வாய்ப்பினை இழந்துவிடுவான்.

'உள்ளத்தில் ஏகத்துவத்தைக் குறித்து உறுதி கொண்டவனாக' - என்று வேறு ஹதீஸ்களில் காணப்படுவது போல் - உள்ளத்தால் ஈமானில் உறுதி கொண்டவர்களுக்கும், ஓரிறைக் கொள்கை உறுதியானது, தலைசிறந்தது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மட்டுமே பெருமானார் (ஸல்) அவர்கள் பரிந்துரை வழங்குவார்கள். உள்ளத்தின் உறுதிதான் மனிதனைச் செயலின் பக்கம் ஊக்குவிக்கின்றது என்பது தெளிவு. தன் குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது என்ற செய்தி ஒருவனுக்கு கிடைத்துவிட்டாலே போதும் - அலறி அடித்து ஓடுகின்றான்! உள்ளத்தில் ஈமான் கொள்வதன் நிலையும் இது போன்றதுதான். இது மனித உள்ளத்தில் ஈடேறும் கவலையைத் தோற்றுவித்து செயலாற்ற அவனை ஊக்குவிக்கின்றது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: 'உங்களில் மிக நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்' எனும் அஷ்ஷுஅரா அத்தியாயத்தின் திருவசனம் இறங்கிய போது, பெருமானார் (ஸல்) அவர்கள் (குறைஷிகளை நோக்கி) 'குறைஷிக் கூட்டமே! உங்களை நீங்களே நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள்! அல்லாஹ்வின் வேதனை உங்கள் மீது வருவதை என்னால் இம்மியளவும் தடுத்திட முடியாது.

அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அல்லாஹ்வின் வேதனை உங்கள் மீது வருவதை கொஞ்சமும் என்னால் போக்கிட முடியாது. அப்பாஸ்பின் அப்துல் முத்;தலிபே!(இவர் பெருமானாரின் சொந்த சிற்றப்பா) அல்லாஹ்வின் வேதனை எங்கள் மீது வருவதை என்னால் சிறிதளவும் அகற்றிட முடியாது. என் மாமியான ஸஃபிய்யாவே! அல்லாஹிவின் தேனையிலிருந்து உம்மை சிறிதளவும் என்னால் காப்பாற்ற முடியாது. என் மகளான பாத்திமாவே! நீ என்னுடைய பொருளிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கேள்! கேட்பதை அளிக்க சக்தி பெற்றுள்ளேன். ஆயினும், அல்லாஹ்வின் வேதனை உன் மீது வருவதை என்னால் தடுத்திட முடியாது! (எனவே நீங்களே உங்களைக் காத்துக் கொள்ள கவலைப்படுங்கள்! நன்னம்பிக்கையும், நற்செயல்களுமே மறுமையில் பயனளிக்கும்')

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே ஒருநாள் உரையாற்றினார்கள். அதில், போரில் கிடைக்கும் பொருட்களைத் திருடும் பிரச்சனையைக் குறித்து பெரும் முக்கியத்துவத்துடன் எடுத்துரைத்தார்கள். பின்னர் அண்ணலார் கூறினார்கள்:

1. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் ஒட்டகம் ஒன்று அமர்ந்து உரக்க அழுதுகொண்டு இருக்க, அவர் 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிடுங்கள்!' (இப்பாவத்தின் மீது விளைவிலிருந்து காப்பாற்றுங்கள்) என்று மன்றாட, நானோ 'சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்' என்று நான் சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

2. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் குதிரை ஒன்று அமர்ந்து கனைத்துக்கொண்டிருக்க, அவர் 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிட விரைந்து வாருங்கள்!'என்று கூறிட, நானோ 'உனக்காக எதுவும் என்னால் செய்ய முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு நான் அறிவித்து விட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

3. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் ஆடு ஒன்று அமர்ந்து கத்திக்கொண்டிருக்க, 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிட வாருங்கள்!'  என்று கூவியழைத்துக் கொண்டிருக்க, அப்போது நான் அவரது முறையீட்டிற்கு பதிலளிக்கும் வகையில், 'உனக்காக எதுவும் செய்ய முடியாது. உலகில் உன்னிடம் இறைக்கட்டளைகளைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

4. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் ஒரு மனிதர் அமர்ந்து கொண்டு மனங்கிக் கொண்டிருக்க, அவரோ'அல்லாஹ்வின் தூதரே!, எனக்கு உதவிட வாருங்கள்!'  என்று முறையிட்டுக் கொண்டிருக்க, அதற்கு நான் பதில் தரும் வகையில், 'இங்கு நான் உனக்காக எதுவும் செய்திட இயலாது. உலகில் உன்னிடம் இந்தச் செய்தியை நான் எடுத்துரைத்துவிட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

5. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் துண்டுத்துணிகள் பறந்து கொண்டிருக்க, அவர் 'அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவி செய்யுங்கள்' என்று அழைத்திட, அதற்கு நான் பதிலளிக்கும் வகையில், 'நான் உனக்காக எதுவும் செய்திட இயலாது. நான் உலகிலேயே உனக்குச் செய்தியை சமர்ப்பித்து விட்டேன்' என்று கூறுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.

6. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காண வேண்டாம் அதாவது, அவருடைய கழுத்தில் தங்கமும் வெள்ளியும் சவாரி செய்ய 'தூதரே எனக்கு உதவிடுங்கள்!' என்று கூவிக்கொண்டிருக்க, அவருக்கு பதில் அளிக்கும் வகையில் 'உன் பாவத்தின் கோர விளைவுகளை இம்மியளவும் நான் அகற்ற இயலாது, இச்செய்தியை உலகிலேயே உனக்கு அறிவித்து விட்டேன்' என்று சொல்லும் நிலைமை ஏற்பட வேண்டாம். (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:

பிராணிகள் பேசுவதாகவும் துணிகள் அசைந்து பறப்பதாகவும் கூறப்பட்டிருப்பதன் கருத்து இதுதான்: போரில் கிடைக்கும் பொருட்கள் தொடர்பான இந்தத் திருட்டுகளை இறுதித் தீர்ப்புநாளில் மறைக்க முடியாது. ஒவ்வொரு பாவமும் கூவிக்கூவியழைத்துக் கூறும், அவன் குற்றவாளி என்பதை அறிவிக்கும்! இது போரில் கிடைக்கும் பொருட்களைத் திருடும் விஷயத்தில் மடடுமல்ல, எல்லாப் பெரிய பாவங்களின் விஷயத்திலும் இதே நிலைதான் ஏற்படும். அல்லாஹ் இந்தத் தீய கதியிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமையும் காப்பாற்றட்டும்! மரணம் வருவதற்கு முன்னாரேயே பாவமன்னப்புக் கோருவதற்கான நற்பேறு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கிட்டட்டும்!

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

விதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'உங்களில் ஒவ்வொருவரின் சொர்க்கமும் நரகமும் முன்னரே எழுதப்பட்டுவிட்டன.' மக்கள் வினவினார்கள்: 'அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால் நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை நம்பிக்கொண்டு செயல்படுவதை விட்டுவிடலாமல்லவா?' அறிவிப்பாளர் : அலீ (ரலி)

அண்ணலார்: 'இல்லை! செயல்படுங்கள்! ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளானோ அகற்கான தவ்ஃபீக் (இறைவன் அருளும் பேறு) அளிக்கப்படுகிறது. எவன் பாக்கியவானோ அவனுக்குச் சுவனத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் இறையுதவி அளிக்கப்படுகிறது. மேலும், எவன் துர்ப்பாக்கியவானோ (நரகவாசியோ) அவனுக்கு நரகத்துக்குரிய செயல்கள் புரியும் வகையில் பேறு அளிக்கப்படுகிறது.'

இதன் பின் அண்ணலார் திருக்குர்ஆனிலுள்ள 'அல்லைல்' அத்தியாயத்தின் பின்வரும் இரு வசனங்களை ஓதினார்கள்: எவனொருவன் பொருளைச் செலவு செய்து இறையச்சத்தின் பாதையை மேற்கொண்டு, இன்னும் நன்மையானதை உண்மைப்படுத்தினானோ (அதாவது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானோ) அவனுக்கு நாம் நல்ல வாழ்க்கைக்குரிய (சுவனத்துக்குரிய) பாதையில் செல்வதற்கு பேறு அளிப்போம். எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் புரிந்து, இறைவனைக் குறித்து அலட்சியமாக வாழ்ந்து, நல்லதொரு வாழ்வைப் பொய்யென்று கூறினானோ அவனுக்கு நாம் துன்பமிகு வாழ்க்கைக்குரிய (நரகத்துக்குரிய) பாதையில் செல்வதற்கு பேறு அளிப்போம்.' (புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:
மனிதன் என்னென்ன செயல்களின் காரணத்தால் நரகம் செல்வான், மேலும் என்னென்ன செயல்களின் காரணத்தால் சுவனம் செல்வான் என்பது அல்லாஹ்விடம் தீர்மான்க்கப்பட்டுவிட்டது. இறைவன் இந்த விதி நிர்ணயத்தை மிகவும் விளக்கமாக திருக்குர்ஆனில் எடுத்துரைத்துள்ளான். மேலும், அண்ணலாரும் இவ்வுண்மையைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இனி, நரகத்தின் பாதையில் நடைபோடுவதா, சுவனத்தின் பாதையில் நடைபோடுவதா என்பதை முடிவு செய்வது மனிதனின் வேலையாகும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவனது பொறுப்பேயாகும். ஏனெனில், சுயவிருப்பப்படி தேர்ந்தெடுக்கும் ஆற்றலை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். பாதையைத் தேர்ந்தெடுத்திட அவனைச் சுதந்திரமாக விட்டுவிட்டான். இந்தச்சுதந்திரந்தான் அவனுக்கு தண்டனையை வாங்கித் தரும், அதுவே, அவனுக்கு சுவனத்தைப் பெற்றுத் தரும். ஆனால், விவரம் புரியாத பலர் தமது பொறுப்பை இறைவனின் மீது சுமத்திவிட்டு தம்மைத்தாமே கட்டாய நிலையிலுள்ளவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள்.

அறிவிப்பாளர்: அபூ கிஸாமா (ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து.

எனது தந்தை கூறினார்கள்: நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், 'நாங்கள் எங்களுடைய நோய்கள் குணமாவதற்கு ஓதி ஊதி பிரார்த்தனை செய்வதும், எங்களுடைய நோய்களை நீக்கிக்கொள்வதற்காக நாங்கள் மருந்துகளைப் பயன்படுத்துவதும், துன்பங்களிலிருந்து தப்பித்திட நாங்கள் மேற்கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் விதியைக் கொஞ்சமாவது தடுத்திடுமா?' என வினவினேன். அதற்கு 'இவையனைத்தும் கூட அல்லாஹ்வின் விதியே ஆகும்' என அண்ணலார் கூறினார்கள்.

விளக்கம்:
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய பதிலின் சாரமாவது: எந்த இறைவன் இந்த நோயை நம் விதியில் எழுதினானோ, அதே இறைவன்தான் இந்த நோயை இன்ன மருந்தினால் அல்லது இன்ன வழிமுறையினால் போக்கிவிட முடியும் என்று தீர்மானித்துள்ளான். நோயைக் கொடுத்தவனும் இறைவனே, அதனை நீக்கும் மருந்தைப் படைத்தவனும் அவனே! அனைத்துமே அவனால் தீர்மானிக்கப்பட்ட நியதிகள், சட்டங்களின்படியே நடைபெறுகின்றன.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நான் ஒருநாள் வாகனத்தில் அண்ணலாரின் பின்னால் அமர்ந்திருந்தேன். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மகனே! உனக்கு சில விஷயங்களைக் கூறுகின்றேன் ( கவனத்தடன் கேள்!) நீ இறைவனை நினைவு கூறு, இறைவன் உண்னை நினைவுகூறுவான். நீ இறைவனை நினைவில் வைத்தால், அவனை உன் முன்னாலேயே காண்பாய். கேட்டால் இறைவனிடமே கேள்! ஏதேனும் துன்பத்தில் நீ உதவி கோரினால் இறைவனிடமே உதவி கேள்! இறைவனை உனக்கு உதவியாளனாக ஆக்கு! மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உனக்கு நன்மையேதும் செய்திட விரும்பினாலும் அல்லாஹ் உனக்காக எழுதி வைத்த அளவே கிடைக்கும். அதைத் தவிர வேறு எவராலும் உனக்கு எதுவும் அளித்திட இயலாது (அதாவது, கொடுப்பதற்கென எவரிடத்திலும் எதுவுமில்லை. அனைத்தும் இறைவன் வழங்கியவைதாம். எவருக்கு எந்த அளவு கொடுக்க வேண்டுமென அவன் முடிவு செய்கின்றானோ அந்த அளவுதான் அவருக்குக் கிடைக்கும். அது எந்த வழியில் - எவர் மூலமாக கிடைத்தாலும் சரியே!) மேலும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி உனக்குத் தீங்கு விளைவிக்க நாடினாலும், அல்லாஹ் உனக்கு விதித்து வைத்ததைத் தவிர வேறெந்தத் தீங்கினையும் அவர்களால் உனக்கு விளைவித்திட முடியாது. (எனவே, அல்லாஹ்வை மட்டுமே நீ உனக்கு ஒரே துணைபுரிபவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்)'. (மிஷ்காத்).

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பலவீனமான இறைநம்பிக்கையாளனை விட வலிமையான இறைநம்பிக்கையாளன் சிறந்தவனும், இறைவனுக்கு மிகவும் விருப்பமானவனும் ஆவான். இருவருக்கும் நன்மையும், பயனும் உண்டு. மேலும், நீ (மறுமையில்) பயனளிக்கும் விஷயத்தையே ஆசைப்படு! உன் சிரமங்களில் இறைவனிடம் உதவி கேள்! ஊக்கம்மிழக்காதே! உனக்கு துன்பம் ஏதும் வந்தால், 'நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்கும்' என்றெண்ணாதே! மாறாக, அல்லாஹ் இதனை விதித்துள்ளான், அவன் விரும்பியதைச் செய்தான் என்று கருது! ஏனெனில் இப்படிச் செய்திருந்தால் - அப்படிச் செய்திருந்தால் என்றெண்ணுவது ஷைத்தானின் செயல்பாட்டுக்கு வழி திறந்துவிடும்.' (மிஷ்காத்)

விளக்கம்:
இந்த நபிமொழியின் முதல் பகுதியின் கருத்து இது: ஓர் இறைநம்பிக்கையாளன் இருக்கின்றான், அவன் உடல்பலமும், சிந்தனை வலிமையும் அதிகம் பெற்றிருக்கின்றான். இப்படிப்பட்டவன் தன் வலிமை அனைத்தையும் இறைவழியில் செலவிடுவானாயின் - பலவீனமான, ஆரோக்கியம் சீர்கெட்டிருக்கின்ற நம்பிக்கையாளனைவிட அல்லது சிந்தனை ரீதியாக உயர்ந்திராத நம்பிக்கையாளனைவிட அதிகமாக மார்க்கப் பணியாற்றிட அவனால் முடியும். பலவீனமான இறைநம்பிக்கையாளனும் இறைவழியில் தன் ஆற்றல்களைக் செலவிடத்தான் செய்வான் என்றாலும், முதலாமவன் அளவிற்கு அவனால் பணியாற்றிட முடியாது. எனவே, அவனுக்கு இரண்டாமவனை விட அதிகமாகவே வெகுமதி கிடைக்க வேண்டும். ஆனால், இருவரும் ஒரே பாதையில் - இறைவழியில் - நடைபோடும் பயணிகளாய் இருப்பதால் பலவீனமான அந்த இறைநம்பிக்கையாளனுக்கு அவனது பணி சிறிதளவில் இருக்கும் காரணத்தால் வெகுமதி மறுக்கப்படாது. உண்மையில், இந்த நபிமொழியின் நோக்கம், வலிமையுள்ள இறைநம்பிக்கையாளனுக்கு 'உன் வலிமையின் மதிப்பை உணர்ந்துகொள், அதன் வாயிலாக எவ்வளவு முன்னேற முடியுமோ அவ்வளவு முன்னேறு, பலவீனம் வந்துவிட்ட பின்னால் மனிதன் எதனையாவது செய்ய நினைத்தாலும் அவனால் செய்ய முடியாது' என்று உணர்த்துவதேயாகும்.

இறுதிப்பகுதியின் கருத்தாவது: இறைநம்பிக்கையாளன் தனது புத்திக்கூர்மை, அறிவாற்றல், தனது திட்டமிடும் திறன், வலிமை ஆகியவற்றைத் தன் துணையாகக் கொள்வதில்லை. மாறாக, அவனுக்குத் துன்பம் நேர்ந்தால் அவனது உள்ளம் இவ்வாறு சிந்திக்கும்:

'இந்தத் துன்பம் என் இறைவனிடத்திலிருந்து வந்திருக்கின்றது, எனக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது.' மேலும், இவ்வாறு அந்தத் துன்பம் - இறைநம்பிக்கையாளனின் 'தவக்குலை' - முற்றிலும் இறைவனைச் சார்ந்து வாழும் பண்பினை வளர்க்கும் கருவியாக அமைந்து விடுகின்றது.

புதன், 10 ஏப்ரல், 2013

மரண அறிவிப்பு - (கமருல் ஜமான் கடல்கரைத்தெரு (மரணம் சவுதி தம்மாம்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடல்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹீம் அப்துல்லதீப் அவர்களின் மகனும் முத்தலிப், அய்யூப், அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரருமாகிய கமருல் ஜமான் அவர்கள் இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஃபஜ்ருக்குமுன்னால் சவுதிஅரேபியா தம்மாமில் வஃபாத்தாகிவிட்டார்கள்

انا لله وانا اليه راجعون
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக

தொடர்பு : சகோதரர் அப்துல் முத்தலிப் -  தம்மாம்
0501109822

புதன், 20 பிப்ரவரி, 2013

சகுனம் பார்ப்பது

தொற்று நோய், சகுனம் பார்ப்பது (இஸ்லாத்தில்) இல்லாதது. எனினும் நல்ல சகுனம் எனக்கு விருப்பமானது. அதுவோ அழகிய வார்த்தையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அனஸ் (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம், திர்மிதி.

சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்:அபூதாவூத்.

பயன்கள் :
சகுனம் பார்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அது பறவைகள் அல்லது மற்றவற்றைக் கொண்டு சகுனம் பார்ப்பது ஒரு செயலைச் செய்யாது விட்டு விடுவதற்குச் சொல்லப்படும்.

இது ஒரு செயலைச் செய்யாமல் விடுவதற்குக் காரணமாக இருந்தால் ஷிர்க்காகும். காரணம் நன்மையோ, தீமையோ அளிக்கக் கூடிய சக்தி அல்லாஹ் அல்லாதவற்றுக்கு இருக்கின்றது என்று கருதுவதால்.

நல்ல சகுனம் பார்ப்பது விரும்பத்தக்கதாகும். அதில் அல்லாஹ்வைப் பற்றிய நல்லெண்ணம் இருப்பதால்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல்

யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன். (65:33)

முஃமின்கள் அலலாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும். (64:13)


பல உம்மத்தினர் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது நான் ஒரு நபியைப் பார்த்தேன். அவருடன் சிறு கூட்டமே இருந்தது. இன்னொரு நபியைக் கண்டேன். அவருடன் ஒன்றிரண்டு பேர் இருந்தனர். மற்றொரு நபியைக் கண்டேன் அவருடன் யாருமே இல்லை. அந்நேரத்தில் ஒரு மாபெரும் கூட்டம் எனக்குக் காட்டப்பட்டது. அவர்கள் என் உம்மத்தினர் தான் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்கள் மூஸாவும் அவருடைய சமுதாயத்தினர் என்று எனக்குக் கூறப்பட்டது.

பிறகு மற்றொரு பெரும் கூட்டத்தை நான் பார்த்தேன். இவர்கள் தான் உமது உம்மத்தினர் என எனக்குக் கூறப்பட்டது. அவர்களுடன் கேள்வி கணக்கின்றி, வேதனையின்றி சுவர்க்கம் செல்லக் கூடிய எழுபதாயிரம் பேர்கள் இருந்தனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் எழுந்து நமது வீட்டிற்குள் சென்று விட்டனர். அதன் பிறகு அங்கிருந்த மக்கள் அவர்கள் யார் என்ற சர்ச்சையில் மூழ்கி விட்டனர். சிலர், அவர்கள் இஸ்லாத்திலேயே பிறந்து அல்லாஹ்வுக்கு எதையுமே இணை கற்பிக்காதவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் வேறு விதமாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்ததும் மக்கள் அவர்களிடம் விஷயத்தைக் கூறினார்கள். அப்போது, அவர்கள் தாம் பிறரிடம் ஓதிப் பார்க்கத் தேடாதவர்களும் (நோய்காக) சூடு போடாதவர்களும் சகுனம் பார்க்காதவர்களும், தம் இறைவன் மீதே நம்பிக்கை வைப்பவர்களும் ஆவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்.

பயன்கள் :
தவக்குல் (நம்பிக்கை) வைப்பதன் நிலையை அறிந்து கொள்வது, அது வணக்கங்களில் மிக முக்கியமானது.

தவக்குலை மெய்ப்படுத்துவது கேள்வி, கணக்கின்றி சுவர்க்கம் செல்வதற்குக் காரணமாக அமையும்.