முக்கிய தகவல்கள்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மரணம் நிரந்தரமல்ல


உன் மரணம் நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மறுபடியும் நீ எழுப்பப்படுவாய்

மறுமை எனும்

நியாயத்தீர்ப்பு நாளில்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மண்ணறையினில் கூட - நீ

மகிழ்வாய் உறங்கமாட்டாய்

நன்மை செய்தவர் சுகமான உறக்கத்தில்

தீமை செய்தவன் தீராத மண்ணறை வேதனையில்

கப்றுகள் கூட உன்னை நிராகரிக்கும்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மட்கிய உன் உடலுக்கும்

உயிர் தருவான் எம்மிறைவன்

உலகின் உன் செயல்களுக்காய்

உடல் உறுப்புகள் பதில் சொல்லும்

களவாடிய கைகளும்

பொய், புறம் பேசிய நாவும்

தனித்தனியே தம்மை எடுத்து வைக்கும்

உன் நன்மைகள் நற்கணக்கில்

பாவங்கள் தண்டைனைக்கு உரம் போடும்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

சொர்க்கத்தின் சுகந்தங்களுக்காக

நன்மையைத் தேடிக் கொள் - உன்

பாவக்கரங்களை தவ்பாவில் மீண்டு

கழுவிக் களைந்துக் கொள்

மனிதா!

மரணம் உனக்கு நிரந்தரமல்ல

மண்ணின் இடைக்கால விடுதலை

மறுமை நாளை பயந்துகொள்

மரணம் வரும் முன் திருந்திக் கொள்.

1 கருத்து:

  1. ஆலிம்களின் ..ஒவ்வொரு ..வார்த்தைகளும்

    மனிதனுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாவும்

    நல்வழி காட்டுவதாகவும் அமைய வேண்டும் ...,

    அதனை அற்புதமாக அதிரை ஆலிம் ..

    நடைமுறை படுத்துவதை வரவேற்கிறேன்

    கவிதை ..மனதை அழவைத்து விட்டது ..

    மனம் பக்குவப்பட துஆ செய்யுங்கள்

    பதிலளிநீக்கு