- இஸ்லாமிய வரலாற்றில் ஷஅபான் மாதம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். "(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!" (புகாரி) - ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!" என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையே விருப்பமானதாக இருந்தது.ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள். (புகாரி)
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
- வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்கள் (புகாரி)
- அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள்அறிவிக்கிறார்கள்:
- (ரமழானிற்கு)பிறகு ஷஅபான் மாதத்தைவிட, வேறு எந்த மாதத்திலும் நபி(ஸல்) அவர்கள்அதிகமாக நோன்பு வைப்பவர்களாக இருக்கவில்லை.ஏனெனில் ஷஅபான் முழுவதுமே நோன்பு வைப்பார்கள்.மற்றொரு அறிவிப்பில் ஷஅபானில் சில நாட்களைத்தவிர, அதிகமான நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (புகாரி,முஸ்லிம்)
- ஷஅபான் மாதம் பதினைந்தாம் இரவுஅல்லாஹுத் தஆலா தன் படைப்பினங்கள் அனைத்தின்பக்கமும் கவனம் செலுத்துகின்றான். படைப்புகள்அனைத்தையும் மன்னித்து விடுவான். ஆனால் இருவர் மன்னிக்கப்படுவதில்லை.
- 1.அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்.
- 2.எவருடனாவது விரோதம் கொண்டவர் எனநபி(ஸல்) அவர்கள் அருளியதாக அப்துல்லாஹ் இப்னுஅம்ரு(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்)
இம்மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்
கிப்லாவை மாற்றம் செய்தல்:நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்றதிலிருந்துபைத்துல் முகத்திஸை நோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். ஹிஜ்ரத் செய்த பதினேழாவதுமாதத்தில் (ஷஅபனில்) பைத்துல் முகத்தஸிலிருந்து,மஸ்ஜிதுல் ஹராம்(கஃபதுல்லாஹ்வின்) திசையைகிப்லாவாக மாற்றி அல்லாஹ் குர்ஆனில் ஆயத்தைஅருளினான்.நபியே), உம்முடைய முகம் (கிப்லா மாற்றக்கட்டளையை எதிர்பார்த்து) வானத்தின் பக்கம்திரும்புவதை நாம் காணுகிறோம். ஆகவே, நீர்விரும்புகின்ற கிப்லாவுக்கு உம்மை நிச்சயமாக நாம்திருப்பிவிடுகிறோம்; எனவே, உம்முகத்தை ( தொழும்போதுமக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்புவீராக! (முஃமின்களே) நீங்களும் எங்கிருந்தாலும் (தொழும்போதுமஸ்ஜிதுல் ஹராமாகிய) அதன் பக்கம் உங்களுடையமுகங்களை திருப்பிக் கொள்ளுங்கள். (குர்ஆன் 2;144) - நோன்பு கடமை:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ஷஅபான்மாதத்தில் தான் ரமழானில் நோன்பு வைப்பது கடமையாக்கப்பட்டது.நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்குமுன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்தது போல்உங்கள் மீதும் நோன்பு (நோற்பது)கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள்இறையச்சமுடையவர் ஆகலாம். (குர்ஆன் 2;183)
ஷஅபான் மாதத்தில் 4 நான்கு யுத்தங்கள்
அதில் ஒன்று பனூ முஸ்தலக் யுத்தம்:(இதை "அல் முரஸீஃ யுத்தம்" என்றும்கூறப்படுகிறது) இப்போரிலிருந்து திரும்பும்போது தான்அன்னை ஆயிஷா(ரழி) அவ்ர்கள் மீது, நயவஞ்சகர்கள்அவதூறு சம்பவத்தை பரப்பினர். இதனால்கவளையடைந்திருந்த அன்னையார் அவர்களுக்கு,அவர்களின் பத்தினித்தனத்தை பறைசாற்றிஅல்லாஹுத்தஆலா குர்ஆனில் அத்தியாயம் 24 இல், 11முதல் 20 வரை உள்ள வசனங்களை இறக்கி வைத்தான்.
துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ:
اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا
அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா
பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
புகாரி-4478.
-
வியாழன், 22 ஜூலை, 2010
இஸ்லாமிய வரலாற்றில் ஷஅபான் மாதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)