துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

செவ்வாய், 22 மே, 2012

அறிவுரை


என்னருமைத் தங்கைகளுக்காக!

ஆதம் (அலை) அவர்கள் காலம் தொட்டு இன்று வரை ஆக்கத்துக்கும் அழிவுக்கும் பின்னால் நிற்பது பெண் தான் என்கிறார்கள். அழிவுப் பாதை நமக்கு வேண்டாம. எம்மால் ஆனவரை ஆக்கத்துக்காகக உழைக்க வேண்டாமா? அவ்வாறாயின் அதற்கான சில செயற்பாடுகளை வாழ்வில் நடைமுறைப்படுத்திப் பார்த்தால் என்ன?

இஸ்லாத்துக்காக மறுமைக்காக உழைக்க ஒரு கொள்கையுடன் கல்வியை மேற்கொள்ளுங்கள். இஸ்லாமிய சமூகத்துக்காய் வாழ அதிகம் முயற்சி செய்யுங்கள்.

பாதையில் பணிவாகச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முஸ்லிம் பெண்ணல்லவா? ஷரீஅத்திற்குட்பட்ட ஆடை அணியுங்கள். ஹிஜாப் அணிதல் பர்ளு என்பதை மறவாதீர்கள். அதிலென்ன பெரிய கஷ்டம்? உங்கள் சகோதரிகள் அணியவில்லையா என்ன?

பிறர் வீட்டுக்குச் சென்று படிக்க நேர்ந்தாலோ, உங்கள் வீட்டில் பிறர் வந்து படிக்க நேர்ந்தாலோ ஆண் மாணவர்களுடன் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள்

உங்களது ஜுனியர்களுக்கு பாடம் படித்துக் கொடுப்பது மட்டும் உங்கள் கடமை அல்ல.அவர்கள் இஸ்லாமிய நெறியில் வாழ்வதற்கான ஊக்கத்தை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் ஈருலக வெற்றி உங்களது வெற்றியல்லவா?

உங்கள் தம்பி தங்கைகளுக்கு வளமான குர்ஆன் ஓதல், கல்வியை வழங்குங்கள். அவர்களுக்கு முன் மாதிரியாய் வாழுங்கள்.

தயவு செய்து பாதைகளையும், பாடசாலைகளையும், டியூசன் வகுப்புகளையும் பீச்சாக, பார்க்காக மாற்றி விடாதீர்கள். கல்விக்கு மதிப்பளியுங்கள்.

ஓய்வு நேரங்களை பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் கழியுங்கள். டிவி யிலோ தரங்கெட்ட பத்திரிக்கைளிலோ வாரத்தில் எவ்வளவு நேரத்தை நீங்கள் கழிக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.

பாடசாலை வாழ்க்கையில், மாணவர் மன்றங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அல்லது உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்களை நிறைவேற்றும் இடங்களில் இந்த தீனின் செய்தியை எத்தி வைத்தீர்களா?

உங்கள் வகுப்புத் தோழியோடு உள்ள உறவை சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளதல், பரஸ்பர ஒத்துழைப்பு, அழகிய முறையில் உரையாடுதல் என்ற அம்சங்களுடன் பேணிக் கொள்ளுங்கள் வெறும் சுயநலத்துக்காக உறவை அமைத்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பாடசாலை செல்ல வாய்ப்புக் கிடைக்காத உங்களைப் போன்ற பெண்கள் இருக்கக் கூடும். அவளுக்கு அல்குர்ஆன் ஓதிக் கொடுக்க, அடிப்படை எழுத்தறிவைப் போதிக்க கொஞ்ச நேரத்தை ஒதுக்குங்கள்.

உங்கள் எதிர்காலத் தேர்வுகளை தீனுக்காக என்று திடவுறுதி கொள்ளுங்கள். மீதியை அல்லாஹ்வின் பக்கம் பொறுப்புச் சாட்டி விடுங்கள். நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களோடு இருக்கிறான்.

மொத்தத்தில் ஒரு கொள்கைவாதியாக வாழ்ந்து மரணிக்க உறுதி பூணுங்கள்.