துஆ ஏதேனும் காரியம் சிரமமாகிவிடும் போது ஓதும் துஆ: اللهم لاسهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا அல்லாஹீம்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹீ சஹலா வ அன்த தஜ்அலுல் குஜ்ன இதா ஷிஃத சஹ்லா பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர பேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் துயரத்தை இலகுவாக்கி விடுகிறாய்
இறைவன் குறள் وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. 17:82
நபி மொழி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். புகாரி-4478. -

ஞாயிறு, 27 மார்ச், 2011

இறுதி நபியின்... இறுதி பயணம்...

1.மாண்பு நபியின் மரண அறிகுறி!


நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை பரிபூரணப்படுத்தி இஸ்லாம் பல பகுதிகளுக்கும் பரவியபோது நபியவர்களின் ,செயல்களிலிருந்து அவர்களின் மரணத்திற்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பித்து விட்டன.


1. ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் 20 நாட்கள் நபியவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.


2. இவ்வாண்டு ரமழான் மாதத்தில் இரண்டு முறை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். 3. நபியவர்கள் கடைசி ஹஜ்ஜின் போது கூறினார்கள். இந்த வருடத்திற்குப்பிறகு இவ்விடத்தில் இனிமேல் உங்களை நான் சந்திக்காமல் இருக்கலாம்.


4. அய்யாமுல் தஷ்ரீகீன் நடுப்பகுதியிலே சூரத்துன் நஸ்ர் இறங்கியது, இதைக்கண்டு அவர்களின் மரணம் நெருங்கியதாக அறிந்துகொண்டார்கள். இறுதி நோயின் துவக்கம் ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ஸபர் மாதம் 29ஆம் தேதி திங்கட்கிழமை நபி (ஸல்) அவர்கள் ஜன்னதுல் பகீயில் ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டுத்திரும்பி வரும்போது நபியவர்களுக்கு தலைவலியும், பெரும் காய்ச்சலும் ஏற்பட்டது. அதனால் அவர்களின் தலையில் அணிந்திருந்த தலைப்பாகைக்கு மேல் அதன் சூடு தென்பட்டது. நபியவர்கள் நோயாளியாக இருந்து கொண்டே பதினொரு நாட்கள் மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள். நபியவர்கள் நோயாளியாக இருந்த நாட்கள் 13 அல்லது 14 நாட்கள்.


கண்ணிய நபியின் கடைசி வாரம்


நபியவர்களின் நோய் அதிகரித்துவிட்டது. 'நான் நாளைக்கு எந்த மனைவியிடம் செல்லும் நாள், நான் நாளைக்கு எந்த மனைவியிடம் செல்லும் நாள்' எனக்கேட்க ஆரம்பித்தார்கள். நபியவர்களின் நோக்கத்தைத்தெரிந்து கொண்ட மனைவிமார்கள் நீங்கள் விரும்பிய வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என அனுமதியளித்தார்கள். பழ்ல் இப்னு அப்பாஸ், அலீ இப்னு அபீதாலிப் என்னும் இரு நபித்தோழர்களுக்கு மத்தியில் தலையை (துணியால்) கட்டியவர்களாக இரண்டு கால்களும் (நடக்க முடியாத காரணத்தால்) இழுபட்ட நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களின் வீட்டிலேயே அன்னாரின் வாழ்க்கையின் கடைசி வாரத்தை கழித்தார்கள்.


மரணத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்...??


நபியவர்கள் பள்ளிக்குள் நுழைந்து மிம்பரில் அமர்ந்து அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து, மனிதர்களே! என் பக்கம் கவனம் செலுத்துங்கள், 'தங்களுடைய நபிமார்களின் கப்ருகளை பள்ளி வாசல்களாக (வணங்குமிடமாக) எடுத்துக் கொண்ட யூத, கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் எனக் கூறினார்கள்.


நான்கு நாட்களுக்கு முன்....??


நபியவர்கள் நோயாளியாக இருந்தும் மக்களுக்கு எல்லாத் தொழுகைகளையும் தொழவைத்தார்கள். இஷா நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத அளவுக்கு நோய் அதிகரித்து விட்டது. மக்கள் தொழுது விட்டார்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இல்லை அல்லாஹ்வின் தூதரே அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என நாங்கள் கூறினோம். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுங்கள் எனக்கூறினார்கள். நாங்கள் தண்ணீரை ஊற்றினோம், நபியவர்கள் குளித்தார்கள். பள்ளிக்கு செல்வதற்கு முயற்சித்தார்கள். ஆனால் மயக்கம் ஏற்பட்டு மயங்கிவிட்டார்கள். மயக்கம் தெளிந்த பின் மக்கள் தொழுது விட்டார்களா? எனக் கேட்டார்கள். ஆரம்பத்தில் நடந்தது போன்றே நடந்தது. மூன்றாவது முறையும் அப்படியே நடந்தது. அபூபக்கர் (ரலி) அவர்களை மக்களுக்கு தொழ வைக்கும்படி நபியவர்கள் செய்தி அனுப்பினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மீதியான நாட்களில் (நபியவர்கள் மரணிக்கும் வரை உள்ள தொழுகைகளை); தொழவைத்தார்கள் (புகாரி, முஸ்லிம்).


அதாவது, நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது பதினேழு நேர தொழுகைகளை அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழவைத்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் (புகாரி).


ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்...??


சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை நோய் குறைந்திருந்ததை நபியவர்கள் உணர்ந்து, இரண்டு மனிதர்களின் உதவியோடு அவ்விருவருக்கும் மத்தியில், ளுஹர் தொழுகைக்காக பள்ளிக்கு வெளியானார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்கள் வருவதைக்கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர ஆரம்பித்தார்கள். பின் வராமல் அங்கேயே நிற்கும்படி நபியவர்கள் அவர்களுக்கு சைகை செய்தார்கள். என்னை அவருக்கு அருகாமையில் உட்கார வையுங்கள் என அவ்விருவருக்கம் கூறினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் இடது புறத்தில் நபியவர்களை அவ்விருவரும் உட்கார வைத்தார்கள். நபியவர்களை பின்பற்றி அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுதார்கள். மக்களுக்கு நபியவர்களின் தக்பீரை கேட்கவைப்பதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் (தக்பீரை) கூறினார்கள் (புகாரி).


இறுதி தினத்திலும் இருந்ததெல்லாம் வழங்கிய நபி (ஸல்) அவர்கள்! மரணமடைவதற்கு ஒரு நாளைக்கு முன் தன்னிடத்திலிருந்த அடிமையை உரிமையிடடு ஆறு அல்லது ஏழு தங்கக்காசுகளை தர்மம் செய்தார்கள். அவர்களின் ஆயுதத்தை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள். அந்த இரவு ஆயிஷா (ரலி) அவர்கள் தன்னுடைய விளக்கை அனுப்பி ஒரு பெண்ணிடமிருந்து எண்ணெய்யை வாங்கி விளக்கை ஏற்றினார்கள். நபியவர்கள் ஒரு யூதனிடம் தன்னுடைய கவச ஆடையை முப்பது ஸாஉ கோதுமைக்கு அடமானம் வைத்திருந்தார்கள்.


இறுதி தினமும் இரகசியச்செய்தியும்...??


திங்கட்கிழமை சுபஹுதொழுகையை அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழவைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையிலிருந்து திரையை விலக்கிக்கொண்டு தொழுது கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்முறுவலாக சிரித்தார்கள். நபியவர்கள் தொழுவதற்காக வரப்போகிறார்கள் என நினைத்து அபூபக்கர் (ரலி) அவர்கள் பின்னுக்கு வர நினைத்தார்கள். நபியவர்களை பார்த்த சந்தோஷத்தில் மக்கள் தங்களின் தொழுகையில் குழம்பிக் கொள்ளும் அளவுக்கு ஆகிவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 'நீங்கள் உங்களின் தொழுகையை பரிபூரணப்படுத்துங்கள்' எனக்கூறிவிட்டு நபியவர்கள் அறைக்குள் சென்று திரையை மூடிவிட்டார்கள். அதன் பின் நபியவர்களுக்கு வேறு எந்த தொழுகையும் தொழ வாய்ப்பு கிடைக்கவில்லை.


சூரியன் உதயமாகும் போது நபியவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு செய்தியை இரகசியமாக கூறினார்கள். அதைக்கேட்டதும். பாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, இன்னுமொரு முறை அவர்களை அழைத்து ஒரு செய்தி கூறினார்கள். அதைக்கேட்டதும் சிரித்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். அதன்பின் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவ்விரு செய்திகள் பற்றி நாங்கள் கேட்டோம். அந்த நோயினால், நபியவர்கள் மரணிக்கப்போவதாக கூறினார்கள். அதைக்கேட்டு நான் அழுதேன். அவர்களின் குடும்பத்தில் நபியவர்களுக்குப்பின், முதலில் மரணிப்பவர் நான் என கூறினார்கள், அதற்கு நான் சிரித்தேன் எனக் கூறினார்கள்.


அவர்களுக்கு நோய் அதிகரித்துக்கொண்டே சென்றது. கைபரில் யூதப் பெண் கொடுத்த நஞ்சின் விளைவை உணர்ந்தார்கள். ஆயிஷாவே! கைபரில் உண்ட உணவின் (நஞ்சின்) வேதனையை உணருகின்றேன், அந்த நஞ்சின் காரணமாக என் கல் ஈரல் துண்டிக்கப்படும் நேரம் வந்து விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


அண்ணலின் சகராத் நேரம்


நபியவர்களுக்கு சகராத் நேரம் வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர்களை தன்னோடு அணைத்துக் கொண்டார்கள். 'நபியவர்கள் என்னுடைய வீட்டில் இருக்கும்போது என்னுடைய நாளிலே என்னுடைய அணைப்பிலேயே மரணமடைந்தது' அல்லாஹ் எனக்களித்த பெரும் அருளில் ஒன்றாகும். நபியவர்கள் என் மீது சாய்ந்து படுத்திருக்கும் போது என்னுடைய சகோதரர் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் தன்னுடைய கையில் மிஸ்வாக் ஏந்தியவர்களாக வீட்டிற்குள் நுழைந்தார்கள். நபியவர்கள் அந்த மிஸ்வாக்கின் பக்கம் தன் பார்வையை திருப்புவதை நான் பார்த்து நபியவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புவதை தெரிந்து கொண்டு உங்களுக்கு அதைத் தரவா? என கேட்டேன் நபியவர்கள் தன் தலையால் 'ஆம்' என சாடை செய்தார்கள். அதை எடுத்து அவர்களுக்கு கொடுத்தேன். அது அவர்களுக்கு கடினமாக இருந்ததால் அதை மென்மையாக்கித்தரவா? எனக் கேட்டேன். நபியவர்கள் தன் தலையால் 'ஆம்'; என சாடை செய்தார்கள். அவர்களுக்கு மென்மையாக்கிக் கொடுத்தேன். அவர்கள் மிஸ்வாக் செய்தார்கள். நபியவர்களுக்கு பக்கத்தில் ஒரு தண்ணீர் பாத்திரம் இருந்தது. அதில் தனது இரு கரத்தையும் வைத்து தன் முகத்தை தடவிக் கொண்டு லா இலாஹ இல்லல்லாஹ் 'நிச்சயமாக மரணத்திற்கு சகராத் வேதனை உண்டு' எனக்கூறினார்கள் (புகாரி).


நெஞ்சை உருக்கும் நிறைவான விடைபெறல்!


மிஸ்வாக் செய்து முடித்ததும், தன் கையை அல்லது விரலை உயர்த்தி விழிகள் விண்ணை நோக்க, இதழ்கள் மெல்ல அசைந்தன. உதடுகள் உதிர்த்ததை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் செவி சாய்த்துக் கேட்டார்கள். مَعَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّـيْـنَ وَالصِّدِّيْقِيْـنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِـحِيْـنَ 'நீ அருள் புரிந்த நபிமார்களோடும், உண்மை யாளர்களோடும், ஷுஹதாக்களோடும், நல்லடியார்களோடும் (என்னை) சேர்த்து விடுவாயாக'. இறைவா! 'என் பாவங்களை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக! உயர்ந்தவனாகிய அல்லாஹ் (வாகிய உன்) அளவில் என்னைச் சேர்த்துக் கொள்வாயாக' இந்த கடைசி வார்த்தையை மும்முறை மொழிந்த போது 'அவர்களின் கரம் சாய்ந்தது'. உயர்ந்தவனாகிய அல்லாஹ் அளவில் சேர்ந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு, ரபீஉல் அவ்வல், பிறை 12 திங்கட்கிழமை, சூரிய வெப்பம் அதிகமான நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் இறையடி சேர்ந்தார்கள்.


மாண்பு நபியின் புனித உடல் மண்ணுக்குள் அடக்கம்


நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு யார் கலீபாவாக வருவது என்னும் கருத்துமோதல் ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏற்பட்டு கடைசியில் அபூபக்கர் (ரலி) அவர்களை கலீபாவாக ஏகமனதோடு ஏற்றுக்கொண்டார்கள். திங்கள் கிழமை பகல்பகுதி கலீபாவாக யாரை முடிவு செய்வதென்பதிலேயே முடிந்து விட்டது. செவ்வாய்க்கிழமை இரவு சுப்ஹு வரைக்கும் நபியவர்களை அடக்கம் செய்யும் விஷயத்தில் ஈடுபட்டார்கள், நபியவர்களின் புனித உடல் கோடிடப்பட்ட பருத்தி துணியினால் மூடப்பட்ட நிலையில் அன்னாரின் விரிப்பிலேயே படிந்திருந்தது, அவர்களின் குடும்பத்தினர் கதவை மூடிவைத்திருந்தார்கள், செவ்வாய்க்கிழமை அன்னாரின் தோழர்கள், அன்னாரின் புனித உடலைக் குளிப்பாட்டியபோது அன்னாரின் உடையை நீக்காமலேயே குளிப்பாட்டினார்கள்.


நபியவர்களின் உடல் இருந்த அறைக்கு மக்கள் சென்று பத்து, பத்து பேராக, தனிமையில் நபியவர்களுக்கு ஜனாஸா தொழுகை தொழுதார்கள், முதலில் நபியவர்களின் குடும்பத்தினரும், அதன் பின் முஹாஜிரின்கள், அன்ஸாரிகள், 'சிறியவர்கள், பெண்கள் (அல்லது) பெண்கள், சிறியவர்கள்' என்ற வரிசையில் தொழுதார்கள் இவைகளைச் செய்வதிலேயே செவ்வாய்கிழமையின் முழு நாட்களும் புதன் கிழமையின் இரவின் பெரும்பகுதியும் சென்று விட்டது. புதன் இரவின் கடைசிப்பகுதியில்தான் அன்னாரின் ஜனாஸாவை அடக்கம் செய்யப்பட்டது.


இரவின் கடைசிப்பகுதியிலே கப்ரை மூடும் மண்ணின் சத்தத்தை கேட்கும்வரைக்கும் நபியவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் (அஹ்மத்).


சிந்திக்க சில வரிகள் இதுவரை நபியவர்களின் மரணச் செய்தியை படித்தீர்கள், அதைக்கேட்ட நபித்தோழர்கள் துடியாய்த் துடித்தார்கள். ஆனால் இன்று நாம் அவர்கள் மரணித்த நாளை கொண்டாடும் நாளாக எடுத்துக்கொண்டோமா இல்லையா? இது இறைவிசுவாசியின் பண்பாக இருக்கமுடியுமா?


நபியவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் தேதி பிறந்தார்களா? என்பதில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கின்றது. ஆனால் ரபீஉல் அவ்வல் 12ஆம் தேதி மரணித்தார்கள் என்பது ஊர்ஜிதமானதே. இதில் எந்த அறிஞருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ரபீஉல் அவ்வல் பிறை 12ல் மீலாது விழா இன்று கொண்டாடப்படுவது நபியவர்களின் பிறந்த நாளுக்காகவா? அல்லது இறந்த நாளுக்காகவா? சிந்திக்கமாட்டீர்களா?


நபியவர்களின் பிறந்த நாளை கொண்டாடுவது நபியவர்களை புகழ்வதென்றால் அல்லது இஸ்லாத்தில் உள்ள நற்கருமமாக இருந்தால் நபியவர்களே ஒவ்வொரு வருடத்திலும் ரபீஉல் அவ்வல் பிறை 12ல் அதைச் செய்திருப்பார்கள். ஸஹாபாக்கள் அதை பின்பற்றி இருப்பார்கள். தாபியீன்கள், இமாம்கள் அதைச் செய்திருப்பார்கள். இவர்களில் யாரும் இதை செய்யவில்லையே. ஹிஜ்ரி 300க்குப் பிறகு மிஸ்ரை ஆட்சி செய்த ஃபாத்திமீயீன்கள் அரசியல் லாபத்திற்காக செய்த வேலையே மீலாத் மேடைகள், இதே போன்றுதான் நபியவர்களின் பெயரில் பாடப்படும் பாடல்களும்இ இதற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. மாறாக இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத் என்னும் வழிகேடாகும்.


நேச நபியை நேசிப்பதென்பது...???


நேச நபியை நேசிப்பதென்பது அல்லாஹ்வும்இ நபியவர்களும் காட்டிய மார்க்கத்தை அப்படியே பின்பற்றுவதான். (நபியே!) நீர் கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் 3-31 என்னை யார் நேசிக்கின்றாரோ அவர் என் வழிமுறைகளை பின்பற்றட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி)


இதுதான் அல்லாஹ்வின் தூதரை நேசிக்கும் முறையாகும். அல்லாஹ் நம் அனைவரையும் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நேசித்தவர்களாக வாழ்ந்து மரணிக்க வாய்ப்பளிப்பானாக.

செவ்வாய், 22 மார்ச், 2011

குர்ஆனிய சமுதாயம்


மனிதன் இந்த உலகில் வாழவே பிறக்கின்றான். அதுவும் ஏனைய உயிரினங்களைப் போலல்ல. அவற்றை விடச் சிறப்பாக இவன் வாழ வேண்டும். எனவே, அதற்கேற்ற விதத்தில் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொண்டு, சீராகவும் ஒழுங்கு கட்டுப்பாடுகளுடனும் வாழ வழி செய்து கொள்வது அவசியம்.

ஆனால், மனிதருள் ஒரு சாரார் தாம் சார்ந்துள்ள மதங்களின் மீது ஏற்பட்ட அபரிமிதமான பற்றின் காரணமாக உலக வாழ்வை, மனைவி மக்களை மற்றும் கடமைகளைத் துறந்து காடு, மலைகளிலும் ஆசிரமங்களிலும் தஞ்சமடைந்தார்கள். அங்கு தனித்துத் தவமிருந்து, தியானங்கள் புரிந்து முக்தி நிலை காண முயற்சிகளை மேற்கொண்டார்கள். இன்றும் அத்தகையவர்கள் இல்லாமலில்லை.

அதே மதங்களைச் சார்ந்த மற்றுமொரு சாராருக்கு மதம் ஒரு தனிப்பட்ட விவகாரமாகி விட்டது. ஏதோ சில கிரியைகள், மதாசார வைபங்கள், சம்பிரதாய ரீதியான சடங்குகள், திருவிழாக்கள் என்பவற்றுடன் அவர்களது மதக்கடமைகள் முடிந்து விடுகின்றன.

அவற்றுக்கு அப்பால்,அவர்களது வாழ்வு சார்ந்த மற்றைய துறைகளில், ஒன்றில் மற்றாரிடமிருந்து கடன் வாங்கிய கொள்கை வழியிலோ அல்லது தமது மன இச்சை தரும் வழியிலோ செயற்படுவர். எனவே, சம காலத்தில் அவர்கள் ஒரு மதத்தினை ஏற்றவர்களாக இருந்து கொண்டே அந்த மதத்தை நிராகரிக்கும் கொள்கை வழியில் செல்பவராக இருப்பர். தமது மதத்தின் மூல மந்திரங்களாகவும், சூது, விபச்சாரம் போன்றவற்றைத் தொழிலாகச் செய்பவர்களாகவும் இருப்பர். இப்படி மற்றைய நடவடிக்கைகளும் இருக்கும்.

அதேவேளை, அவர்களில் நல்லவர்களும் இல்லாமலில்லை. அவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத நல்ல தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு தம் வாழ்வை நடத்திச் செல்கின்றனர் என்றாலும், அவர்களும் அவர்கள் ஏற்ற மதத்தின் மூலக் கருத்துக்களுக்கு இசைவாகத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டதாகச் சொல்ல முடியாது. அவர்களும் தமது ஏதாவது காரியத்தைச் செய்ய முற்படும் போது தம் மதத்துடன் இணக்கமாக வருகிறதா அல்லது முரண்படுகிறதா எனப்பார்ப்பது மிகக் குறைவு. மாறாக, தம் மனதுக்கு சரியெனப்படுகிறது - செய்கிறார்கள்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், யாரெல்லாம் முக்தி வேண்டி ஆசிரமங்களில் தியானம் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்கள் கூட தமது ஊண், உடை மற்றும் தேவைகள், ஆசிரம பரிபாலனம் போன்றவற்றுக்கு மேற்காண்பவர்களைத் தான் அண்டி நிற்க வேண்டும். ஏனெனில், இவர்கள் உழைப்பதில்லையே! இந்த நிலையில் இந்த இரு சாராரையும் உலகியல் கொள்கைகளே வழிநடத்துகின்றன என்பது தெளிவு.

இதற்கு இந்த மக்களை முழுமையாக குற்றவாளிகள் எனக் கணித்து குற்றக் கூண்டில் ஏற்ற முடியாது. இந்நிலை தோன்றுவதற்கான காரணிகள் அம்மதங்களிலும் உள்ளன.

பொதுவாக, பல மதங்களில், மனிதனின் முழு வாழ்வும் சார்ந்த அத்தனை அம்சங்களையும் குறிப்பிட்டதோர் அமைப்பில் ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் மிக மிகக் குறைவு.

உதாரணமாக, மனிதனின் பொருளாதாரத்துறையை அந்த மதமொன்றின் மூல அடிப்படைக் கருத்துக்கமைய சீர் செய்ய வேண்டுமாயின் அதற்கான திட்டம் என்ன?

இதே போன்று,
ஆண்-பெண் தீயொழுக்கம் பாவமானது எனக் கூறும் ஒரு மதம் அதனை இல்லாமலாக்க அறிமுகப்படுத்திய திட்டம் என்ன?

திருடுவது குற்றம் எனக் கூறும் ஒரு மதம், அதனை ஒழித்துக் கட்ட நடைமுறைப்படுத்திய திட்டம் என்ன?

இதோ இருக்கிறது என யாரேனும் ஒரு திட்டத்தை முன் வைக்கலாம். நான் இங்கு கேட்பது, அந்தந்த மதங்களின் நிறுவனர்கள் அறிமுகப்படுத்தி, அவர்கள் கண்ணெதிரே ஒரு சமூகத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட திட்டங்கள் என்ன என்பதாகும்.

இந்த வகையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய அனைத்துக் கருத்துக்களும் அச்சொட்டாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட சமுதாயமொன்று இருக்கிறது.

அதனை நாம், குர்ஆனிய சமுதாயம் என்போம். அது அல்லாஹ்விடமிருந்து அல்குர்ஆனைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்கள் தாமாக முன்னின்று வழிகாட்டி 23 வருட காலத்திற்குள் கட்டியெழுப்பிய சமுதாயம் என்று கூறி வைக்க விரும்புகிறேன்.

அதனைப் பற்றி நீங்கள் அறிவது அவசியம்.
இஸ்லாம் மனித வாழ்வை ஆன்மீகம், உலகாதாயம் எனக் கூறு போடவில்லை. மாறாக, இரு பகுதிகளையும் இணைத்து ஓர் அமைப்பில் இயங்கச் செய்தது. எனவே, மற்ற மதங்களிலான உலகாயத் அம்சங்களிலிருந்து விடுபட்ட துறவறப் போக்கோ ஆன்மீகத்தை ஒதுக்கி விட்ட உலகாயத போக்கோ, இஸ்லாம் தோற்றுவித்த குர்ஆனிய சமுதாயத்தில் அறவே இருக்கவில்லை.

ஒருவகையில் அந்தக் குர்ஆனிய சமுதாயத்தைச் சேர்ந்த அனைவரும் துறவிகள் தாம். அதன் கருத்து, அவர்கள் குடும்ப வாழ்வை, சமூக நிர்மாணப்பணிகளை, அரசியலை மற்றும் வாழ்வியல் தொடர்புகளைத் துறந்து விட்டவர்கள் என்பதல்ல. மாறாக, அத்துறைகள் யாவற்றிலும் முழுமையாக ஈடுபட்டு காரியமாற்றி வரும் போது, அவ்வழியில் காணப்படும் பாவச் செயல்கள், தீமைகள் ஆகியவற்றைத் துறந்தவர்கள். அவற்றை விட்டுத் தூர விலகி நின்றவர்கள் என்பதே அதன் சரியான கருத்தாகும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிய தூதை சமர்ப்பிக்கும் முன்னர் அவர்கள் வழிகேட்டில் இருந்தனர். பல வகையான தீமைகள் மனமுவந்து செய்பவர்களாகக் காணப்பட்டனர். பாவங்கள் செய்வதில் தமக்கிணை யாரும் இல்லை என்பது போல் நடந்து கொண்டனர். ஆனால், அவர்கள் - ஆண்களும், பெண்களும் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்த போது தீய பாவங்களிலிருந்து அரைகுறையாக அல்ல, முற்றாகவே ஒதுங்கி விட்டனர்.

பல தெய்வ வழிபாட்டை வீட்டுக்கு வீடு விக்கிரகங்கள் வைத்துக் கொண்டு வணங்கி வந்ததை விட்டு விட்டு ஒரே இறைவனை – அல்லாஹ்வை – மட்டும் முழுமனதுடன் ஏற்று, அடிபணிந்து வணங்கி வர முற்பட்டனர்!

பெண்களுடன் சல்லாபிப்பதை விச்சாரத்தில் ஈடுபடுவதைப் பேரின்பமாகக் கருதியவர்கள் அதை அடியோடு துறந்து விட்டது மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு அரண்களாக மாறி விட்டார்கள். தன் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது போய் தப்பித் தவறியாவது அந்தப் பாவச் செயலில் ஈடுபட்டவர்கள் தாமாக முன் வந்து இந்தப் பாவத்தைச் செய்து விட்டேன். தண்டனை தாருங்கள் எனக் கேட்டு, தண்டனை பெற்றுத் தூய்மையாகி விட்டார்கள்.

மதுபானத்தைப் புகழ்ந்து பாடி, வீட்டுக்கு வீடு பீப்பாய்களில் பத்திரப்படுத்தி பருகி வந்தவர்கள், மதுபானத்தை விட்டொழியுங்கள் என்ற இஸ்லாத்தின் தடை வந்தபோது, அதை விடுவதா? இல்லையா? என்று சிந்திக்கவில்லை. மதுப் பீப்பாய்கள் பாதைகளில் உருண்டன. மதுக் கிண்ணங்கள் தூள் தூளாயின. மதுவை அருந்திக் கொண்டிருந்தவர்கள் அதை காறி உமிழ்ந்து விட்டனர். அத்துடன் மதுவுக்கு எதிரான பிரச்சாரகர்களாகவும் மாறி விட்டனர்!

மற்றாரின் பொருளைக் கொள்ளையடித்து வாழ்ந்தவர்கள். அந்த ஈனச் செயலை முற்றாகத் துறந்தனர். அத்துடன் ஏழை எளியவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்யவும், கடன்பட்டோரின் கடன்களைத் தீர்க்கவும் உதவினர். மேலும், மற்றவர்களின் அமானிதப் பொருட்களைத் தம் பொருட்களை விடவும் பேணுதலாகப் பாதுகாப்பவர்களாயினர்!

அன்று ஓர் அரபியின் வீட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்து விட்டால் அந்த அரபி தன் இல்லத்தை விட்டுவெளியே வர வெட்கப்படுவான். பெண் குழந்தை பிறந்துள்ளது எனக் கூறுவது அவனுக்குப் பெரும் அவமானமாகத் தெரிந்தது. எனவே, அக் குழந்தையை கதறக்கதற குழி தோண்டி உயிருடன் புதைப்பது அவனது வழக்கமாகி விட்டது. அப்படி வாழ்ந்த அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பொழுது ஒரு குருவிக்குக் கூட அநியாயம் செய்யாத ஜீவகாருண்யம் படைத்தவர்களாக மாறி விட்டார்கள்!!

குலக் கோத்திரப் பெருமையைப் பாடி வந்தவர்கள். தம் குலத்துக்கும் கோத்திரத்துக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியவர்களை கொன்றொழித்து மகிழ்ந்தவர்கள். இஸ்லாத்தை ஏற்றபின் சாதாரண மக்களை சமமாக நடத்தினர் அடிமைகளாக இருந்தவர்களை அகநிறைவுடன் கௌரவித்தனர். தம் உற்ற சகோதரர்களாய் மதித்து நடத்தினர்!

இஸ்லாத்தைத் தழுவு முன் பெரும் பாவகரமாக தீமைகளைச் செய்து விட்டு அவற்றின் பெருமித்தில் திளைத்து நின்றவர்கள். இஸ்லாத்தைத் தழுவிய பின் அற்பத் தவறுகளுக்காகக் கூட அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பவர்களாக மாற்றம் பெற்றனர். தம்மால் ஒரு சகோதரருக்குத் தீங்கொன்று நேர்ந்து விட்டால், அத்தீங்கு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்புக்காக ஏங்கித்தவித்தனர். கெஞ்சி நின்றனர்!

கூட்டமைப்பு முயற்சிகள்!!
மேற்காணும் விதத்தில் தீமைகளைத் துறந்து திருந்திய அவர்கள் தனித்தனியாக வாழவில்லை. மாறாக, அவர்களிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒரே கொள்கையை ஏற்றுக் கொணட அவர்கள் அதன் வழியிலான ஒரு சமுதாயமாக அமைந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தலைமையில் வீறு நடை போட ஆரம்பித்தார்கள். அந்த வகையில் பல்வேறு கூட்டு முயற்சிகள் உருவாயின. அல்லாஹ்வும் அவன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் திட்டம் தந்து வழிகாட்ட அவை வளர்ச்சிப் பாதையில் செல்லாயின.

அவர்களுக்கு மத்தியில் உருவான புதிய சமூக உணர்வுகள் :
· அண்டைஅயலாருடன் இணக்கமாக வாழ்தல்
· பெரியோருக்கு மரியாதையும், சிறியோருக்கு அன்பும் செலுத்துதல்
· கோள், புறம், அவதூறு, பொய் போன்றவற்றைத் தவிர்த்தல்
· தீமைகளுக்கு இடம் கொடாது இருத்தல்
· வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்த்தல்
· ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவுதல்
· ஒழுக்க வரம்பு மீறாத வகையில், இஸ்லாம் விரும்பும் கூட்டு முயற்சிகளில் ஈடுபடல்

இவற்றில் அதிகக் கவனம் கொள்ளத் தூண்டின!
அவர்களின் பொருளாதாரச் சிந்தனையானது :
· வியாபாரம், விவசாயம் கால்நடை வளர்ப்பு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துதல்
· வட்டியில்லா நிதிமுறை
· ஸகாத் மற்றும் தான தர்மங்களைப் பேணுதல்
· இஸ்லாத்தின் இணக்கமான வரிகள் கொண்டுவரல்.
என்பவற்றில் அதி தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயல்படத் தூண்டின.

அதனால், பொருளாதாரத் துறை சார்ந்த தவறுகளுக்கு வழியில்லாது போய் விட்டது.

அவர்களது அரசியல் துறை அமைப்பானது :
· பொது நிர்வாகம், ஒழுங்கு,கட்டுப்பாடு
· சட்டம், நீதி, தண்டனை
· யுத்தம், சமாதானம், ஒப்பந்தங்கள்
· முஸ்லிமல்லாதாரின் பாதுகாப்பு, உரிமைகள்
ஆகியன தொடர்பான அத்தனை அம்சங்களும் கொண்டதாக மிளிர்ந்து காணப்பட்டது.

பொதுவான வரலாற்றாசிரியர்கள் அந்தக் குர்ஆனிய சமுதாயத்து முஸ்லிம்களைக் கீழ்கண்டவாறு வியந்துரைப்பதாகக் குறிப்பிடுகிறது.

பகல் வேளைகளில் நாம் அவர்களை நோக்கினால் இவ்வுலகத்தையே கட்டி ஆள வந்தவர்கள் போல்உலக விவகாரங்களில் ஈடுபடுவதைக் காணலாம். ஆனால், இரவு வேளைகளிலோ அவர்கள் இவ்வுலகத்தை முற்றும் துறந்து விட்டவர்கள் போல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதைக் காணலாம்.

ஒட்டு மொத்தமாகக் கூறுவதாயின் அவர்களது முழுச் சமுதாயமும் முற்றாகத் திருத்தியமைக்கப்பட்ட உறுதியும் கம்பீரமும் உடைய ஒரு கட்டிடத்தை ஒத்திருந்தது எனலாம்.

அதன் அடித்தளம்.

லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ்
என்பதாகும்.

அதாவது அல்லாஹ்வைத் தவிர (வணங்குவதற்கும், வழிபடுவதற்கும், சட்டம் இயற்றுவதற்கும், கீழ்படிவதற்கும், பிரார்த்தனைகள் புரிவதற்கும், நேர்ச்சைகள் வைப்பதற்கும்) வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் (முழு மனித சமுதாயத்திற்கும் எல்லாத் துறைகளிலும் வழிகாட்டும்) அல்லாஹ்வினுடைய (இறுதித்) தூதராவார் என்பதே அந்தக் குர்ஆனிய சமுதாயத்தின் அடிப்படை நம்பிக்கையும் நடைமுறைக் கொள்கையும் ஆகும்.

புதன், 16 மார்ச், 2011

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்


ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன். அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு' என்றான்.

'தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே' என்றேன். அதற்கு ஷைத்தான் 'நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார். தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!' என்றான். அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன். சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன். அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து 'வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது' என்றான்.

நான் தௌபா செய்ய நாடினேன். உடனே ஷைத்தான் 'உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை முழுமையாக அனுபவி' என்றான்.

நான் 'மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்', என்றேன். அதற்கவன் 'பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது முடிவடையாது' என்றான்.

நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான்.

நான் 'அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்' என்றேன். 'இல்லை, இல்லை. நீ இரவு படுக்குமுன் துஆ செய்யலாமே' என்றான்.

நான் 'உம்ரா செல்ல நாடியுள்ளேன்' என்றேன்.'நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்' என்றான்.

நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் ' நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?' என்றான்.

நான் 'பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்' என்றேன். உடனே அவன் 'மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து கருத்து வேற்றுமை உள்ளது' என்றான். 'இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான் படித்துள்ளேன்' என்றேன். உடனே அவன் ' அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை பலஹீனமானது' என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன். உடனே அவன் 'என்ன வெட்கப்படுகிறாய்? முதல் பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!' என்றான். 'அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்' என்றேன். அவன் சிரித்து விட்டு 'இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் ' என்றான்.

நான் 'தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்' என்றேன். உடனே அவன், 'ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?' என்றான். 'என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது' என்றேன். உடனே அவன் 'இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன் அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்' என்றான்.

நான் 'இமாம் அஹமது இப்னு ஹன்பல் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அவர் மக்களை குர்ஆன் மற்றும் சுன்னத்தின் பக்கம் அழைத்து என்னை எதிர்த்தார் ' என்றான்.

நான் 'இமாம் இப்னு தைமிய்யாவை பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்?' என்றேன்.அதற்கு அவன் 'அவருடைய வார்த்தைகள் என் தலையை பிளக்கின்றன.' என்றான்.

நான் 'இமாம் புகாரி எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அவர் தொகுத்த ஹதீஸ் கிதாப் என் வீட்டில் இருந்தால் என் வீட்டையே கொளுத்தி விடுவேன்' என்று கோபமாகக் கூறினான்.

நான் 'ஸலாவுதீன் அய்யூபி எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அவரைப் பற்றி பேசாதே. என்னையும், என் தோழர்களையும் கேவலப்படுத்தி, எங்களை மண்ணோடு புதைத்தார்' என வெறுப்போடு கூறினான்.

நான் 'முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்' என இழுத்தேன். அதற்கு அவன், 'நீ என்னை கோபப்படுத்துகிறாய். அவருடைய பேச்சும், எழுத்தும் எரி நட்சத்திரம் போன்று என்னை சுட்டெரிக்கிறது' எனக் கத்தினான்.

நான் 'பிர்அவ்ன் எப்படி? ' என்றேன். அதற்கு அவன் 'அவனுக்கு என் ஆதரவு உண்டு. அவன் வெற்றி பெற விரும்பினேன்' என்றான்.

நான் 'அபு ஜஹ்ல் பற்றி என்ன நினைக்கிறாய்?' எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன், 'அப்படிக் கேளு. நானும், அவனும் உடன் பிறவா சகோதரர்கள்' என்று உற்சாகமாகக் கூறினான்.

நான் 'அபூ லஹப் எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'நாங்கள் என்றென்றும் இணைபிரியாத தோழர்கள்' என்றான்.

நான் 'லெனின் எப்படி?' என்றேன். அதற்கு அவன். 'என் சிறந்த சீடர்;, ஸ்டாலின் என்ற என் சிறந்த தளபதியை உருவாக்கினார்,' என்றான்.

நான் 'மஞ்சள் பத்திரிக்கைகள் பற்றி?' என இழுத்தேன். உடனே அவன் 'அவை தான் என் வேத புத்தகங்கள்' என்றான்.

நான் 'மார்க்கப் பத்திரிக்கைகள் பற்றி என்ன கூறுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'அல்-ஜன்னத், சமரசம், விடியல் வெள்ளி, அல் முபீன், ஒற்றுமை, முஸ்லிம் பெண்மணி பற்றித் தானே கேட்கிறாய்? அவர்கள் எல்லாம் காசு சம்பாதிக்கும் எழுத்து வியாபாரிகள். அவற்றை நான் படிப்பது வீண் விரயம்' என்றான் கேலியாக.

நான் 'டி.வி., சாடிலைட் சேனல் பற்றி' என்றேன். அதற்கு அவன் 'அவை தான் மக்களை என்றென்றும் என் ஞாபகத்திலேயே வைத்திருப்பவை' என்றான்.

நான் 'பிபிசி, சிஎன்என் சேனல் பற்றிக் கூறு' என்றேன்.
அதற்கு அவன் 'அவை மட்டுமல்ல சன், ஜெயா, விஜய், ஸ்டார், ஜீ, ஸஹாரா, தமிழன், சோனி, பொதிகை, தூர்தர்ஷன், ராஜ் இவையெல்லாம் என் ஆயுதங்கள். அதன் மூலம் தான் விஷம் தடவிய தேனை மக்கள் பருகுமாறு செய்கிறேன். முஸ்லிம்களுக்கு, இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரத்தை இவை மூலமே வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்' என்று பெருமையாகக் கூறினான்.

நான் 'காபி ஷாப், இண்டர்நெட் கஃபே எப்படி?' என்றேன். அதற்கு அவன் 'அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் மக்களைத் திசை திருப்பும் எந்த செயலையும் நான் வரவேற்கிறேன்' என்றான்.

நான் 'சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பிளாஸா பற்றி என்ன கூறுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'அவை தான் என் தோழர்கள் கூடும் சங்கம்-கிளப்', என்றான்.

நான் 'கம்யூனிஸ்ட் கட்சி பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'என் எண்ணங்கள், நோக்கங்கள், பிரார்த்தனைகள், சொத்துக்களை அவர்களுக்கு அளித்து, அவர்களை இஸ்லாத்துக்கு எதிராக உருவாக்கினேன்' என்று பெருமையோடு கூறினான்.

நான் 'இஸ்ரேல் யூத நாடு பற்றி என்ன நினைக்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'நீ புறம் பேசாதே. என் விருப்பத்திற்குரிய என் தாய் நாட்டை பற்றி தவறாக பேசி என்னை நோகடிக்காதே' என்றான்.

நான் 'வாஷிங்டன் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அதுவே என் புகுந்த வீடு. என் இராணுவம் அங்கு தான் நிலைகொண்டுள்ளது. என் தலைமை அலுவலகமும் அதுவே,' என்று பெருமையாகக் கூறினான்.

நான் 'மக்களை எவ்வாறு வழிகெடுக்கிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'பேராசை, சந்தேகம், வீண் பொழுது போக்கு அம்சங்கள், பாடல், ஆட்டம், குழப்பம் மற்றும் பொய், போலியான நம்பிக்கைகள் மூலம் தான். இன்னும் புறங்கூறுவது, வீண் வதந்திகளைப் பரப்புவது, நேரத்தை வீணடிப்பது, தேவையற்ற விவாதங்கள், இவற்றின் மூலம் வழிக்கெடுக்கின்றேன்'. ஆமாம், என்ன நீ என் தொழில் ரகசியங்களை கேட்கின்றாயே, எதற்கப்பா? என்று வினவினான்.

'சரி மார்க்க அறிஞர்களை எப்படி வழிதவறச் செய்கிறாய்?' என்று நான் வினவினேன். அதற்கு அவன் 'அது தான் மிகவும் சுலபம். பெருமை, புகழ், பாராட்டு, கர்வம், பொறாமை, இயக்கம் மூலம் தான்' என்றான்.

'சரி வியாபாரிகளை எப்படி உன் வழிக்கு கொண்டு வருகிறாய்?' என்று நான் வினவினேன்.அதற்கு அவன் 'அவர்களை லஞ்சம் கொடுக்கவும், வட்டிக்கு கடன் வாங்கவும், கொடுக்கவும் மற்றும் ஜகாத், ஸதகா கொடுப்பதை விட்டு தடுப்பது, கலப்படம், மோசடி செய்யத் தூண்டியும் அவர்களை சரிகட்டுகிறேன்' என்றான்.

'நான் பெண்களை எப்படி வழிகெடுப்பது?' எனப் பேச்சை மாற்றினேன்.
அதற்கு அவன் 'சபாஷ். நீ அவர்களை வழிகெடுக்க யோசனை கேட்கிறாய். எக்ஸலண்ட். என் வழிமுறை என்ன தெரியுமா? அவர்கள் உள்ளத்தில் பேரழகி என்ற மாயையை, போதையை ஏற்படுத்தி, தங்கள் அங்க அவயங்களை அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாக்கத் தூண்டுவது. ஹலாலைவிட ஹராமை சிறந்ததாக அவர்களுக்கு போலியான தோற்றத்தை உண்டாக்குவது. ஒரு பெண்ணை வழிகெடுத்தால் அவள் மூலம் குறைந்தது நான்கு ஆண்களை வழிதவறச் செய்யலாம். 1. தந்தை, 2. சகோதரன், 3. கணவன், 4. மகன். சுருங்கச் சொன்னால் ஒரு பெண் மூலம் ஒரு குடும்பத்தையே வழிகெடுக்கலாம்' என உற்சாகம் கொப்பளிக்கக் கூறினான்.

நான் 'இளைஞர்களை எப்படி சரிகட்டுகிறாய்?' என்றேன்.
அதற்கு அவன் 'சினிமா, இசை, இண்டர்நெட், டிஸ்கோ, காதல், சிகரெட், போதை மருந்து, கவர்ச்சியாக உடை உடுத்துவது, சைட் அடிப்பது, மார்க்க விஷயத்தில் அசட்டை, அரசியல், இயக்க வெறி மற்றும் ஹராமை பேண போலியான ஆதாரங்களை காட்டுவது மூலம் தான்' என்றான்.

நான் 'சரி நவீன, புதிய கலாச்சாரம் ((Modern Culture-Society)) பற்றி கூறேன்' என்றேன்.
அதற்கு அவன் 'என் கொள்கைகளை முழுவதும் பின்பற்றி, பரப்பும் சினிமா மற்றும் பத்திரிக்கை உலகைச் சார்ந்த என் சகோதரர்களால் ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம் மக்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுகிறது. ஆகவே அது சிறந்தது தானே?' என்றான்.

நான் 'மூட நம்பிக்கைகள் குறித்து என்ன கூறுகிறாய்?' என்றேன். அதற்கு அவன் 'அது தான் என் ஈமான். அதை பரப்புபவர்கள் மந்திரவாதிகளும், ஜோஸ்யர்களும். நாங்கள் மூவருமே வெவ்வேறு பெயர்களுடைய ஒரு தாய் மக்கள்' என்றான்.

நான் 'ஏகத்துவத்தை நோக்கி மக்களை அழைப்பவர்களை விமர்சனம் செய்' என்றேன்.
அதற்கு அவன் கோபமாக 'அவர்கள் என்னை சிறுமைப்படுத்தி, நோவினை செய்கிறார்கள். என் பலத்தைக் குலைத்த சதிகாரர்கள். நான் கஷ்டப்பட்டு வழிகெடுத்தவர்களையெல்லாம் நேர்வழிக்கு திருப்பிய சண்டாளர்கள். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள். நான் பாட ஆரம்பித்தால் அவர்கள்; திக்ர் செய்கிறார்கள். என் பேச்சை அவர்கள் மதிப்பதே இல்லை. என்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறார்கள்' என்று இயலாமை கலந்த வருத்தத்தில் கூறினான்.

நான் 'காரூனிடம் என்ன வித்தை காட்டினாய்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன் உற்சாகமாக, 'நான் அவன் காதுகளில் கிசுகிசுத்தேன். கிழவனின் இளமையான மகனே! உன் பொக்கிஷங்களை நிரப்பு. நீ தான் கடவுள் என்றேன். குஷியாக என் வலையில் வீழ்ந்தான்' என்று கூறினேன்.

நான் 'பிர் அவ்ன் எப்படி உன் வலையில் வீழ்ந்தான்' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'நான் பிர் அவ்னிடம் கூறினேன். நீ தான் மாபெரும் சக்தியாளன். உன்னை எதிர்ப்பவர் இந்த எகிப்திலோ, பூமியிலோ உள்ளனரா? என்றேன். அவனும் என் அடிமையானான்' என்று கூறினான்.

நான் 'ஒரு மனிதனை எப்படி மதுவிற்கு அடிமையாக்குகிறாய்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன் 'அது மிகவும் எளிது. இது திராட்சை ரசம். உன் உடல் நோய்கள்; அனைத்தையும் இது தீர்க்கும். இது குற்றம் இல்லை. அப்படியே இருந்தாலும் மன்னிப்பு தேடுவதற்கு உனக்கு ஆயுள் இருக்கிறதே. ஏன் அஞ்சுகிறாய்? என்று மயக்குவேன்' எனக் கூறினான்.

நான் 'உன் துஆ எது?' என்றேன். அவன் 'சினிமா பாடல்கள்' என்றான்.

நான் 'உன் குறிக்கோள் என்ன?' என்றேன். அதற்கு அவன் 'மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை வழிகெடுப்பது' என்றான்.

நான் 'எது உன்னை அழிக்கும்?' என்று கேட்டேன்.
அதற்கு அவன், 'குர்ஆனில் உள்ள ஆயத்துல் குர்ஸி 2வது அத்தியாயம் 255வது வசனம் யார் ஓதுகிறார்களோ அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான்,' என்று கூறினான்.

நான் 'அடடே! அப்படியா', எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன். உடனே ஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.

மூலம் - இஸ்லாம்வெப்.காம் - ஷேக் அயாத் அல் கர்னி

எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
பார்த்தீர்களா ஷைத்தானுடைய விஷம, விபரீத விளையாட்டை! எப்படி மனிதர்களை அவன் வழிகெடுக்கிறான் பாருங்கள். அவனுடைய வேலை நம்மை நேரடியாக நன்மை செய்வதை தடுப்பது அல்ல - அதைத் தாமதப்படுத்தி அதன் மூலம் மறைமுகமாகத் தடுப்பதே. இந்த உரையாடலை எடுத்துக் கொண்டால்,

1. பஜ்ர் தொழ எழுபவரை என்ன கூறி தடுத்தான் - 'இப்பொழுது தான் பாங்கு கூறினார்கள். இகாமத் வரை சிறிது தூங்கு'. பின்பு, இகாமத் கூறும்பொழுது 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆகவே சிறிது தூங்கு' – ' அப்படியே தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி உள்ளதே' என எப்படி நம்மை தொழுவதிலிருந்து தடுக்கிறான் பார்த்தீர்களா!

2. துஆ ஓத ஆரம்பித்தால், உடனே 'இரவு படுக்கும் முன் ஓதலாமே' எனக் கெடுப்பான். தூங்கும் முன் துஆ ஓத ஆரம்பித்தால், 'களைப்பாக இருக்கிறதே' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஓதாமல் தூங்கச் செய்து விடுவான்.

3. உம்ரா செல்ல நாடினால், சுன்னத்தை விட பர்ளு முக்கியம். எனவே, ஹஜ் செய்யலாமே, என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கெடுப்பான். பின்பு ஹஜ் காலத்தில் தங்கை நிக்காஹ், மகனின் படிப்பு செலவு, வீடு கட்டுவது என பல்வேறு செலவினங்களை முன்னிறுத்தி ஹஜ் செய்வதையும் தடுப்பான்.

4. ஹராமான காரியங்களை - இசை போன்றது - ஹலால் மாதிரி காட்டுவான். ஹதீஸ் கலை வல்லுநர்களிடையே கருத்துவேற்றுமை உள்ளது - பலஹீனமான ஹதீஸ் என தவறான எண்ணத்தை ஏற்படுத்துவான்.

5. அந்நியப் பெண்ணை பார்க்கலாம் - 'முதல்பார்வைக்கு அனுமதி உள்ளது' என்பான் - பின்பு, 'அழகை கலைக்கண் கொண்டு ரசிக்கலாம்' எனப் பாவம் செய்யத் தூண்டுவான்.

6. தாவா வேலை செய்வதைத் தடுக்க அவன் ஏற்படுத்தும் தீய எண்ணம் 'நாம் பெருமைக்கு செய்கிறோம்' எனத் தடுப்பது அல்லது நல்ல நோக்கில் செய்து வரும்போது மனதில் பெருமையை உண்டாக்குவது.

மேலும், மார்க்க அறிஞர்களை, ஆண்களை, பெண்களை, இளைஞர்களை எவ்வாறெல்லாம் வழிகெடுக்கின்றான் எனப் பார்த்தோம். அவனுடைய வழிமுறைகளை அறிந்த நாம் அவற்றிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வதே சிறந்தது - நம்மை நரக நெருப்பில் வீழ்வதை விட்டும் தடுக்கும்.
அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,

' நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள். ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான் ' குர்ஆன் 2 : 208

ஆகவே, இன்ஷாஅல்லாஹ் நாம் அனைவரும் ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம். நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம் செயல்பட அறிவுறுத்துவோம்.

செவ்வாய், 15 மார்ச், 2011

தூங்கும் முறை


தூங்கும் நேரத்தையும் நன்மை(கூலி)தரக்கூடிய ஒன்றாக ஆக்கிக்கொழ்வதற்கு முறைப்படி நம் தூக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். காரணம் தூக்கத்திலேயே நம் கால் வாசிப்பகுதியைக் கழிக்கின்றோம்

1. தூங்கி எழுந்தால் உடலுக்கு ஏற்பட்ட களைப்பு நீங்கி விடும். மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் தூங்க வேண்டும். நான் தூங்கும் போதும் அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்தவனாக தூங்குகின்றேன் என்பதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.

2. முன் இரவிலே தூங்கிவிட வேண்டும், (அதாவது இஷாத்தொழுகைக்குப்பின் தூங்கி விடுவது,) இரவில் கண்விழித்து நீண்ட நேரம் விழித்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு, சுப்ஹு தொழுகைக்கும் ஆபத்து.

இஷாத்தொழுகைக்குப்பின் கண் விழித்து பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : புகாரி

3. பாதுகாப்பான இடத்தில் தூங்கவேண்டும்.
பாதுகாப்பில்லாத (மொட்டை) மாடியில் தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : திர்மிதி

4. ஒவ்வோரு நாளும் தூங்கும்போது அன்று செய்த செயல்களைப்பற்றி சுய பரிசோதனை செய்து (தனக்கு தானே கேள்வி கணக்கு கேட்டுக் ) கொண்டு அதற்குரிய பரிகாரத்தையும் செய்யவேண்டும் .

நீங்கள் கேள்வி கணக்கு கேட்கப்படும்முன் உங்களை நீங்களே கேள்வி கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள் என்று உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.

5. ஏதாவது வஸிய்யத்து செய்ய வேண்டி இருந்தால் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் தூங்கக்கூடாது. தூக்கத்தில் உயிர் பிரிவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

ஏதாவது ஒரு வஸிய்யத்து செய்ய வேண்டி உள்ளவர் அவருடைய தலைமாட்டிற்கு கீழ் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் இரண்டு இரவை கழிக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6. படுக்கை விரிப்பு விசயத்தில் அளவு கடந்து சிரமத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது , சாதாரணமான விருப்பில்தான் நபியவர்களும் தூங்கி இருக்கின்றார்கள்.

7. பத்து வயதடைந்த பிள்ளைகளை தனித்தனியாக பிரித்து தூங்க வைக்க வேண்டும்.

(பிள்ளைகள்) பத்து வயதை அடைந்து விட்டால் அவர்களின் படுக்கை இடத்தை பிரித்து விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரம் : அஹ்மத்

8. தூங்கும் விரிப்பை சுத்தம் செய்து(உதறிக்) கொள்ளவேண்டும், காரணம் ஏதாவது நோவினை தரும் ஒன்று படுக்கை விரிப்புக்குக்கீழ் இருக்கலாம்.
உங்களில் ஒருவர் தன்படுக்கைக்கு சென்றால் தன் படுக்கை விரிப்பை உதறிக்கொள்ளட்டும். அதற்கு அடியில் என்ன இருக்கிறதென்று அவருக்கு தெரியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

9. தூங்கும் போது விளக்கை அணைத்து விடவேண்டும், கதவை மூடிவிடவேண்டும், தோல்பையை கட்டிவிட வேண்டும், பாத்திரங்களை மூடிவிடவேண்டும்.

நிச்சயமாக ஷைத்தான் மூடப்பட்ட கதவை திறக்கமாட்டான், கட்டப்பட்ட தோல்பையை அவிழ்க்கமாட்டான், மூடப்பட்ட பாத்திரத்தை திறக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

நெருப்பு உங்களின் விரோதி நீங்கள் தூங்கினால் நெருப்பை அணைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி - முஸ்லிம்

10. தூங்கும்போது வுளு செய்து கொள்வது சிறப்பாகும்.
நீங்கள் தூங்குவதற்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளு செய்துகொள்ளுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

11. தூங்குவதற்கு முன் வித்ர் தொழுகை தொழுது கொள்வது மிகவும் நல்லது. யாருக்கு இராத்(தஹஜ்ஜத்) தொழுகை தொழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதோ அவர்கள் இராத் தொழுகையை முடித்தபின் வித்ர் தொழுகையை தொழுவதே சரியானது.

எனக்கு எனது தோழர் (ஸல்) அவர்கள் மூன்று விசயத்தை வஸிய்யத்து செய்தார்கள். ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்பு பிடிக்கும்படியும், இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழும்படியும், நான் உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகை தொழும்படியும் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் , ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

12. இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு தூங்கவேண்டும்
இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு யார் தன் தூங்குமிடத்துக்கு வந்து தூங்கி நித்திரை (அதிகரித்ததின்) காரணமாக சுப்ஹு நேரம் வரும் வரை தூங்கிவிட்டாலும் அவரின் எண்ணத்திற்கேற்ப அல்லாஹுவிடத்தில் இரவுத்தொழுகை தொழுத நன்மை எழுதப்படும், அவரின் தூக்கம் ஒரு தருமமாக ஆகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவதெல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

13. ஒரு போர்வைக்குள் இரு ஆண்களோ, அல்லது இரு பெண்களோ ஒன்று சேர்ந்து தூங்கக்கூடாது.

ஒரே போர்வைக்குள் இரண்டு ஆண்களோ , அல்லது இரண்டு பெண்களோ நிர்வாணமாக தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்

14. தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய திக்ருகள்
சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதவேண்டும். ஆயத்துல் குர்ஸி, இன்னும் சூரத்துல் பகறாவின் கடைசி இரு ஆயத்துக்கள் (285, 286)

لاَ اِلَهَ إِلاَ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ وَلَهُ الْـحَمْدُ يُـحْيِ وَيُـمِيْتُ وَهُوَ حَيٌّ لاَ يَـمُوْتُ بِيَدِهِ الْـخَيْــرِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ .
என்று பத்து தடவை ஓத வேன்டும் ,

சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் இம்மூன்றையும் ஓதி கையில் ஊதி தலையில் இருந்து ஆரம்பித்து முகம் மற்றும் உடம்பில் முடியுமான எல்லா இடங்களிலும் மூன்று முறை தடவுவது.

اَللَّهُمَ أَسْلَمْتُ نَفْسِيْ إِلَيْكَ இ وَوَجَّهْتُ وَجْهِيْ إِلَيْكَ இ وَفَوَّضْتُ أَمْرِيْ إلَيْكَஇ وَأَلجْأْتُ ظَهْرِيْ إِلَيْكَஇ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَஇ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَى مِنْكَ إِلاَّ إِلَيْكَ இ آمَنْتُ بِكَتَابِكَ الَّذِيْ أَنْزَلْتَ ، وَبِنَبِيِّكَ الَذِيْ أَرْسَلْتَ (رَوَاهُ الْبُخَارِيُ) .

என்ற பிரார்த்தனையை கடைசியாக ஓதவேண்டும்,அதுவே கடைசி வார்த்தையாக இருக்கவேண்டும், இந்த துஆவை ஓதி அதே இரவில் மரணித்தால் இஸ்லாத்திலேயே மரணித்ததாக பதியப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

15. தூங்குவதற்கு முன் ஓதும் துஆ
اللَّهُمَ بِاسْـمِكَ أَمُوْتُ وَأَحْيَا

16. வலது கையை வலது கன்னத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு வலது பக்கத்தில் சாய்ந்து தூங்க வேண்டும்.

நீ தூங்குவதற்காக உன் தூங்குமிடத்துக்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளுசெய்து கொண்டு உன் வலது பக்கத்தில் தூங்கிக்கொள் என்பதாக பராஉ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி,முஸ்லிம்

17. முகம் குப்பற படுக்கக் கூடாது.
முகம் குப்புற படுத்த ஒரு மனிதனை பார்த்த நபியவர்கள் இது அல்லாஹ் கோபிக்கக் கூடிய படுக்கை என்பதாக கூறினார்கள். ஆதாரம் : அபூ தாவூத்

18. தூக்கத்தில் கெட்ட கனவுகளை கண்டால் .
தான் விரும்பாத வெறுக்கத்தக்க செய்திகளை யாராவது கனவில் கண்டால் இடது பக்கம் துப்புவது போன்று சைக்கினை செய்துவிட்டு ஷெய்த்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்.(أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم என்று சொல்லவேண்டும்) இதனால் அவனுக்கு எந்த ஒரு இடஞ்சலும் ஏற்படாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

இன்னும் ஒரு அறிவிப்பில் : அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வந்திருக்கின்றது . ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

இன்னும் ஒரு அறிவிப்பில் : படுத்த பக்கத்தை விட்டுவிட்டு மறு பகக்கம் திரும்பி படுக்கும்படி நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

19. தூக்கத்தில் நல்ல கனவுகளை கண்டால் .
உங்களில் ஒருவர் தான் விரும்பக்கூடிய கனவை கண்டால் , நிச்சயமாக அது அல்லாஹுவிடத்தில் நின்று உள்ளதென்று (எண்ணிக்கொள்ளட்டும்) அதற்காக அல்லாஹுவை போற்றி புகழ்ந்து , அதை மற்றவர்களுக்கும் சொல்லட்டும்.
இன்னும் ஒரு அறிவிப்பில் - தான் விரும்பியவர்களுக்கு (மாத்திரம்)அறிவிக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

21. தூங்கி விழித்துதம்.
اَلْـحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَ إِلَيْهِ النُّشُوْرُ

தூக்கத்தில் இருந்து விழித்தபின் மூன்று முறை கையை கழுவிய பின் தான் கையை பாத்திரத்தினுள் நுழைக்க வேண்டும். ஊங்களில் ஒருவர் தன் தூக்கத்திலிருந்து விழித்தால் மூன்று முறை கையை கழுவும் வரைக்கும் கையை பாத்திரத்தில் நுழைவிக்கக்கூடாது அவரின் கை இரவில் எங்கிருந்தது என்பது அவருக்கு தெரியாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி

சனி, 12 மார்ச், 2011

ஆடை அணியும் முறை

இஸ்லாத்தில் ஆடை அணிவதற்கும் பல வழிமுறைகள் கூறப்பட்டிருக்கின்றன, அவைகளை நாமும் பேணி நடப்பதினால் நாம் அணியும் ஆடையும் ஒரு கூலிபெற்றுத்தரும் நன்மையாக கருதப்படும்,அவைகள் பின்வருமாறு.

1. அன்னிய மதத்தவர்கள் தங்களின் மதத்தை அடையாளம் காட்டுவதற்காக அணியும் ஆடைகளை அணியக்கூடாது.

யார் இன்னொரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவரைச்சேர்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

2. ஆண், பெண் அணியும் ஆடையைப் போன்றோ, பெண் ஆண், அணியும் ஆடையைப் போன்றோ அணியக்கூடாது.

பெண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய ஆணையும்,; ஆண் அணியும் ஆடையைப்போன்று அணியக்கூடிய பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : அபூதாவூத்

பெண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய ஆண்களையும், ஆண்களைப்போன்று வேஷம்போடக்கூடிய பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். ஆதாரம் : புகாரி

3. பெருமைக்காக ஆடை அணியக்கூடாது

யார் (இவ்வுலகில்) பெருமைக்காக ஆடை அணிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையில் இழிவான ஆடையை அணிவிப்பான். பின்பு அதில் நெருப்பு பிடித்துவிடும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் : அபூதாவூத்

ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியக்கூடாது.

கரண்டைக்கு கீழே இறங்கும் ஆடையின் பகுதி நரகத்தில் வேதனை செய்யப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

இன்னும் ஒரு அறிவிப்பில் :-நாளை மறுமையில் அல்லாஹ் மூன்று பேரோடு பேசவும்மாட்டான், இன்னும் அவர்களை பார்க்கவும் மாட்டான். அவர்களை (பாவத்திலிருந்து) தூய்மை படுத்தவும்மாட்டான். அவர்களுக்கு பெரும் வேதனையுமுண்டு என்று மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அப்போது) அபூதர் (ரலி) அவர்கள் (அப்படி) நஷ்டவாளியும் கைசேதமுமுள்ளவர்கள் யார் என வினவினார்கள்? கரண்டைக்கு கீழ் ஆடை அணிபவனும், கொடுத்ததை சொல்லிக்காட்டுபவனும், பொய்ச்சத்தியம் பண்ணி தன் பொருளை விற்பவனும் என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்

கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணிபவர்கள் காட்டும் பொய்ச் சான்றுகள்.

1. அதிகமானவர்கள் கரண்டைக்காலுக்கு கீழ்தானே ஆடை அணிகிறார்கள் ,

2. தையல் காரர் நீளமாக தைத்துவிட்டார் ,

3. நான் பெருமைக்காக அணியவில்லை.

4. கரண்டைக்கு மேல் அணிந்தால் மக்கள் என்னைப் பழிப்பார்கள்.

5. இதைப்பற்றிய சட்டமோ தண்டனையோ எனக்கு தெரியாது.

6. இது பெரும்பாவமில்லை.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கிய சாட்டு என்பதைப் போல் அல்லாஹ்வின் நபியின் பொன்மொழிக்கு இப்படி விளக்கம் கொடுப்பது ஒரு முஃமினின் பண்பாக இருக்கக்கூடாது. யார் அல்லாஹ்வையும், அவனின்தூதரையும் முற்றிலும் அஞ்சுகிறாரோ அவருக்கு மேலே கூறப்பட்ட நபி மொழியே போதுமானது.

5. உருவமுள்ள ஆடையை அணியக்கூடாது. இதில் ஆண்களும் பெண்களும் சமமே.

ஆயிஷா (ரலி) அவர்கள் உருவமுள்ள தலையணையை வாங்கியிருந்தார்கள், நபியவர்கள் வீட்டுக்குள் வந்தபோது அதைக்கண்டு வீட்டுக்குள் நுழையாமல் கதவடியிலேயே நின்று விட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபியவர்களின் முகத்திலே வெறுப்பைத் தெரிந்து கொண்டபின் நான் அல்லாஹ்விடத்திலும் அவனின் தூதரிடத்திலும் பாவமன்னிப்புத்தேடுகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டேன். இந்த உருவத்தை தீட்டியவர்கள் நாளை மறுமையிலே வேதனை செய்யப்படுவார்கள், இன்னும் நீங்கள் படைத்ததற்கு உயிரூட்டுங்கள் என்றும் அவர்களுக்கு சொல்லப்படும், என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் . ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

6. ஆடை அணியும் விஷயத்தில் வீண் விரயம் செய்யக்கூடாது இதில் ஆண்களும் பெண்களும் சமமே .

பெருமை இல்லாமலும், வீண் விரயம் செய்யாமலும் உண்ணுங்கள், பருகுங்கள், ஆடை அணியுங்கள், தர்மமும் செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :அபூதாவூத்

7. மேனி தெரியுமளவுக்கு மெல்லிய, அல்லது சிறிய உடையை அணியக்கூடாது.

8. வெள்ளை ஆடை அணிவது மிகவும் நல்லது.

வெள்ளை ஆடையை அணியுங்கள் அது மிகவும் தூய்மையும் நல்லதுமாயிருக்கும். உங்களின் மைய்யித்தை அதிலேயே கஃபனுமிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : அபூதாவூத், நஸாயி , திர்மிதி

9. பெண்கள் தங்களின் மேலாடையை எப்படி வைத்துக்கொள்வது என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ஒரு சாண் இறக்கி உடுக்கவேண்டுமென்று நபியவர்கள் விடையளித்தார்கள். அப்போது கால்பாதம் தெரிகின்றதே! என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்க ஒரு முழமளவிற்கு நீட்டி உடுத்துக்கொள்ளட்டும். அதைவிடவும் அதிகப்படுத்தக்கூடாது என்றார்கள் நபியவர்கள். ஆதாரம் : திர்மிதி

10. இறுக்கமான, மற்றவர்களின் உள்ளத்தில் தவறான சிந்தனைகளை உருவாக்கும், இன்னும் உறுப்புக்களின் அமைப்பை வெளிப்படுத்தக்கூடியது போன்ற ஆடைகளை அணியக்கூடாது விஷேஷமாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

11. ஆண்கள் தங்கம் இன்னும் பட்டாடையை அணியக்கூடாது.

தங்கத்தையும் , பட்டையும் அணிவது என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டிருக்கின்றது, இன்னும் அந்த உம்மத்தின் பெண்களுக்கு அது ஹலாலா (ஆகுமா ) க்கப்பட்டிருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் கையில் தங்க மோதிரத்தைப் பார்த்து அதைக்கழட்டி வீசிவிட்டு உங்களில் ஒருவர் நெருப்புத்தணலை எடுத்து தன் கையில் வைத்துக் கொள்கின்றார் என்று கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் சென்றதற்கு பிறகு அந்த மனித(நபித்தோழ)ரிடம் அந்த மோதிரத்தை எடுத்து பிரயோசனமடைந்து கொள் என்று (அங்கிருந்த நபித்தோழர்கள்) கூறினார்கள் , அதற்கு அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் வீசிய மோதிரத்தை நான் எடுக்க மாட்டேன் என்று கூறி (அதை எடுக்க மறுத்து விட்டார்) ஆதாரம் : முஸ்லிம்

12. செருப்பு, இன்னும் ஆடைகளை அணியும் போது வலது பக்கத்திலிருந்து ஆரம்பிப்பது சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் செருப்பு அணியும்போதும், தலைவாரும் போதும் சுத்தம் செய்யும்போதும் இன்னும் அவர்களின் எல்லாக்கருமங்களிலும் வலது பக்கத்தை முற்படுத்துவதை விரும்புவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி

13. ஒரு செருப்பை மாத்திரம் அணிந்து கொண்டு நடக்கக்கூடாது. அப்படி நடப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்

ஒரு செருப்பை அணிந்துகொண்டு உங்களில் ஒருவர் நடக்கவேண்டாம் , இரண்டையும் அணிந்து கொண்டு நடக்கட்டும், அல்லது இரண்டையும் கழட்டிவிட்டு நடக்கட்டும் என்பதாக நபி (ஸல்) கூறினார்கள். ஆதாரம் : புகாரி முஸ்லிம்

14. நஜீஸான (அசுத்தமான) தோலினால் செய்யப்பட்ட செருப்பை அணியக்கூடாது.

15. புதிய ஆடையை அணிந்த ஒருவரை பார்க்கும்போது இந்த துஆவை ஓதவேண்டும்
اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَـمِيْدًا وَمُتْ شَهِيْدًا

16. புது ஆடையை அணியும் போது ஓதும் துஆ
اَللَّهُمَّ لَكَ الْـحَـْمدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْـرِهِ وَخَيْـرِ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَّرِّ مَا صُنِعَ لَهُ.

17. ஆடை அணியும்போது بـسمِ الله என்று சொல்லி அணிந்து , மேலும் பின்வரும் துஆவையும் ஓத வேண்டும் .
اَلْـحَمْدُ للهِ الَّذِيْ كَسَانِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ .


இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது :தூங்கும் முறை

செவ்வாய், 8 மார்ச், 2011

உண்ணும் முறை


இஸ்லாத்தில் உணவு உண்பதற்கும் பல வழிமுறைகள் உள்ளன, அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய ஒன்றாக பதியப்படும், அவைகள் பின்வருமாறு.

1. இறைவனை வணங்கி வழிபடுவதற்கு உடல் வலிமை பெறுவதற்காக இந்த உணவை உண்ணுகிறேன் என்று எண்ணி உண்பது.

2. ஹலாலான உணவையே உண்பது, குடிப்பது.

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172)

3. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்

4. பணிவான முறையில் அமர்ந்து உண்பது.

ஒருக்கணித்து சாய்ந்த நிலையில் நான் உண்ண மாட்டேன். நான் (அல்லாஹ்வின்) அடியான் ஒரு அடியான் உண்பதைப்போல் உண்பேன். ஒரு அடியான் உட்காருவதைப்போல் உட்காருவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

5. உணவை பார்க்கும் நேரத்தில் இந்த துஆவை ஓத வேண்டும்.

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْـرًا مِنْهُ

6. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக( பிஸ்மில்லாஹ் என்று)கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أََوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:அபூதாவூத்

பிஸ்மில்லாஹ் சொல்வதின் பிரயோசனங்கள் பின் வருமாறு:

1. சாப்பிடும்போது ஷைத்தான் நம்முடன் சேர மாட்டான்.

2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றிய நன்மை கிடைக்கும்.

3. அதில் அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுகின்றது.

4. அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுவதால் அதில் அல்லாஹ் அருள் புரிகின்றான்

7. வலது கையால் உண்ணவேண்டும்.

நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா(ரலி)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

உங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷெய்த்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி , அபூதாவூத்

இடது கையால் சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவுகள்:

1. ஷைத்தான் நம்முடன் சேர்ந்து கொள்கிறான்.

2. ஷைத்தானின் செயல்களுக்கு ஒப்பாகிறது,

3. அல்லாஹ்வின் அருள் இறங்காது.

4. பெருமையின் அடையாளம்.

5. நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமான நடைமுறை.

8. சாப்பிடும் போது நம்பக்கத்தில் உள்ளதையே சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதுதான் நபிவழியும் ஒழுக்கமான நடைமுறையுமாகும்,

9. பாத்திரத்தின் ஓரத்திலிருந்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். பாத்திரத்தின் நடுவிலிருந்து ஆரம்பிக்கக்கூடாது.

(அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின் )ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின் ) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி

10. சாப்பிடும்போது மற்றவர்களை நோட்டமிடக்கூடாது அது அவர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தும் .

11. மற்றவர்களுக்கு அருவருப்பு தரும் செயலை செய்யக்கூடாது. உதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாத்திரத்திற்குள் கையை உதறுவது, வாயை சுத்தம் செய்வது இன்னும் இது போன்ற செயல்கள் .

12. விரிப்புக்கு மேல் உணவை வைத்து சாப்பிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மேஜைக்கு மேல் வைத்து உணவை உண்ணவுமில்லை, சிறு பாத்திரத்தில் உண்ணவுமில்லை, இன்னும் நபியவர்களுக்கு மெல்லிய ரொட்டி சுடப்படவுமில்லை என்று (கதாதா -ரலி-அவர்கள் கூறிய போது)எப்படி நபியவர்கள் சாப்பிட்டார்கள்? என நான் கதாதா (ரலி) அவர்களிடம் கேட்டேன் இந்த விருப்புக்கள் மீதுதான் என கதாதா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் : ஷமாயிலுத்திர்மிதி

13. உணவில் வீண்விரயம் பண்ணக்கூடாது.

14. உணவில் பெருமை அடிக்கக் கூடாது.

பெருமை இல்லாமலும், வீண்விரயம் செய்யாமலும், தான தருமம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள், இன்னும் உண்ணுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத்,நஸாயி

15. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும். அதுவே சிறந்தது.
உங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம் , அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்)அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

16. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது.

ஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி

17. தனக்கு கிடைத்த உணவை பொருந்திக்கொள்ள வேண்டும்; உணவை குறைகூறக்கூடாது , விருப்பமாக இருந்தால் உண்பது, விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடுவது.

எந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

உணவை குறைகூறுவது அல்லாஹ்வின் அருளை அவமதிப்பதாக கருதப்படும், அது பெருமையின் அடையாளமாகும்.

18. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.

உங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

19. உணவில் ஊதக்கூடாது (உணவு, பானம்)

(உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள.; ஆதாரம் : திர்மிதி

20. மூன்று முறடாக பானங்களை குடிப்பது நபிவழியாகும் .

நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

21. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ கூடாது .
தங்கம் , வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள் , மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி

22. வயிறு புடைக்க எல்லைமீறி உண்ணக்கூடாது.

ஆதமுடைய மகன் நிரப்பும் பாத்திரத்தில் மிகவும் கெட்டது அவன் தன் வயிற்றை நிரப்புவது. ஆதமுடைய மகன் தன் முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்வதற்கு சில பிடி உணவே போதுமானது. அதை அவனால் சுமந்து கொள்ள முடியாவிட்டால் வயிற்றில் மூன்றில் ஒரு பங்கை உணவுக்காகவும், மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்காவும், மூன்றில் ஒரு பங்கை தன் உள்ளத்தின் அமைதிக்காகவும் விட்டுவிடட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

23. சமைக்காமல் பச்சையாக வெங்காயம் இன்னும் வெள்ளைப்பூடை சாப்பிட்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் பள்ளிக்குள் செல்லக்கூடாது, சமைத்து சாப்பிட்டால் பறவாயில்லை.

யார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்

24. ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது அல்லாஹ்வின் அருள் அதில் இறங்குகின்றது.

இரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கும், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா? ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச்சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா

25. விருந்துக்கு அழைக்கப்படாதவரை விருந்து உண்பதற்கு கூட்டிக்கொன்டு சென்றால் விருந்து கொடுப்பவரிடம் அனுமதி பெற்ற பின்புதான் விருந்தில் உட்கார வைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அளைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து)உண்பதற்கு உத்தரவழியுங்கள், நீங்கள் (உத்தரவழிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்

26. மற்றவர்களோடு சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி அதிகம் அதிகம் அள்ளி உண்ணக்கூடாது.

உரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்:-திர்மிதி, இப்னுமாஜா

27. உணவில் அல்லது குடிபானத்தில் ஈ விழுந்தால் அதை உள்ளே நன்றாக அமுக்கி விட்டு பின்பு அதை வெளியெறிந்து விட்டு உண்ண வேண்டும்.
உங்கள் ஒருவரின் (உணவுப்)பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்

28. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும், சுன்னத்தான நோன்பு நோற்றிருந்தாலும் விட்டுவிட வேண்டும்.

உங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு அவர் விடையழிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்

29. ஆரம்பத்தில் பிஸ்மி சொல்ல மறந்து விட்டால்
بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று ஓதவேண்டும்.

உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக் கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத்

30. சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேன்டும்.

உங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார் ஆதாரம் : முஸ்லிம்

31. விருந்தளித்தவர் அல்லது நமக்கு ஏதாவது உணவைக்கொடுத்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.
اَللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِـيْ وَاسْقِ مَنْ سَقَانِـيْ
ஆதாரம் : அபூதாவூத்

32. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் பிரார்த்தனை
اَلْـحَمْدُ للهِ كَثِيْـرًا طَـيِّـبًا مُبَارَكًا فِيْهِ غَيْـرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنىً عَنْهُ رَبُّـنَا.
اَلْـحَمْدِ للهِ الَّذِيْ أَطْعَمَنِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ.

யார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது : ஆடை அணியும் முறை

சனி, 5 மார்ச், 2011

பிரார்த்தனை செய்யும் முறை


பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்முஃமின் -60)

ஆகவே நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி (ஸல்)அவர்கள் கற்றுத்தந்த முறையில் செய்ய வேண்டும், அவைகள் பின்வருமாறு.

1. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும் -இறைவன் இவ்வாறு திருமறையில் கூறுகின்றான்.

ஆகவே காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து)அழையுங்கள். (அல் முஃமின்-14)

2. அல்லாஹ் இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அல்லாஹ் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

என் அடியான் என்னை எப்படி நினைக்கின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி

3. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல் ஜின்-18)

நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

4. அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையைஆரம்பித்து அதைக்கொண்டே முடிக்கவும் வேண்டும்.

நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5. உள்ளம் சம்மந்தப்பட்டநிலையில் பிரார்த்தனை செய்யவேண்டும்.
விடை கிடைக்குமென்ற உறுதியோடு பிரார்த்தனை செய்யுங்கள், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள், மறதியான உள்ளத்தால் (உள்ளம் சம்மந்தப்படாமல் நாவால் மாத்திரம்)கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

6. அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை ஞாபகித்து தான் செய்த பாவத்தை ஏற்றுக்கொண்டவராக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவா! நீ எனது இறைவன், நீயே என்னை படைத்தாய், நான் உனது அடிமை, நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன், வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒரு அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

7. பயபக்தியோடும் மனமுடைந்த நிலையிலும், அல்லாஹ்விடத்திலுள்ள சுவனத்தை ஆதரவு வைத்த நிலையிலும், நரகத்திலிருந்து பயந்த நிலையிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அவர்களின் விலாக்கள் படுக்ககைகளை விட்டு (தூக்கத்திலிருந்து)விலகி விடும், தங்களுடைய இரட்சகனை அச்சத்தோடும் ஆதரவோடும் அழை(த்து பிரார்த்தி)ப்பார்கள். (அஸ்ஸஜ்தா-16)

8. அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் நாம் தேவையுள்ளவர்கள் என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், 'நிச்சயமாகத் துன்பம் என்னைப்பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக்கிருபையாளன்' என்று (பிரார்த்தனை செய்து )அழைத்த போது. (அல் அன்பியா - 83)

ஜகரிய்யாவையும் (நபியே! நீர் நியைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனை அழைத்து 'என் இரட்சகனே! என்னை(ச் சந்ததியில்லாது) தனித்தவனாக நீ விட்டுவிடாதே! நீயோ , வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்'என்று (பிரார்த்தனை செய்த) போது. (அல் அன்பியா-89)

9. சந்தோசமான நேரத்திலும் , கஷ்டமான நேரத்திலும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.

கஷ்டம், இன்னும் துன்பமுள்ள நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் சநதோசமான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

சந்தோசமான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள் கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னை தெரிந்து கொள்வான் என நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

10. பிரார்த்தனை செய்யும் போது கிப்லாவை முன்னோக்கி பிரார்த்திப்பது மேலானது.

மழை தேடி பிரார்த்திப்பதற்காக தொழும் இடத்திற்கு நபி (ஸல்)அவர்கள் வெளியேறிச்சென்று கிப்லாவை முன்னோக்கி மழை தேடி பிரார்த்தனை செய்தார்கள், பின்பு தன் போர்வையை புரட்டினார்கள். ஆதாரம் : புகாரி

11. சுத்தமாக இருப்பது நல்லது.

வுளு செய்வதற்கு நபி (ஸல்)அவர்கள் தண்ணீரை கேட்டார்கள் பின்பு தன் இரு கரங்களையும் உயர்த்தினார்கள் யா அல்லாஹ்! (இறைவா!) உபைத் அபூ ஆமிரின் (பிழைகளை) மன்னித்தருள்வாயாக, நான் நபியவர்களின் இரு கக்கத்தின் வெண்மையையும் பார்த்தேன், இறைவா! உன் மனித படைப்புகளில் அதிகமானவர்களுக்கு மேல் அவரை (உயர்த்தி) வைப்பாயாக என்றும் பிரார்த்தனை செய்தார்கள். ஆதாரம் : புகாரி

12. இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களைக்கொண்டு அல்லாஹ்விடத்தில் உதவி(வஸீலா) தேடுவது, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலா மூன்று வகைப்படும்.

1. அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது.

2. நல் அமல்களைக் காட்டி பிரார்த்திப்பது.

3. உயிருடன் இருக்கும் நல்லடியார்களிடம் பிரார்த்திக்கும் படி வேண்டுவது.

13. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் உதவி தேடுதல்.
உன்னையே வணங்குகிறோம் இன்னும் உன்னிடத்திலேயே உதவியும் தேடுகிறோம். (அல் பாத்திஹா - 4)

இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

14. அவசரப்படாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும், (அதாவது நான் பிரார்த்தனை செய்தேன் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்வது.)

அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

15. இரு கைகளையும் ஏந்திப்பிரார்த்திப்பது.

தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்தத்தனை செய்தார்கள் நான் அவர்களின் கக்கத்தின் வெண்மையை பார்த்தேன் என அபூ மூஸா அல் அஸ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : புகாரி

நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும் சங்கையுள்ளவனுமாவான், ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் என ஸல்மானுல் பாரிஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : திர்மிதி

16. நபியவர்கள் மூலம் தெரிந்து கொண்ட பிரார்த்தனைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வது நல்லது.

17. பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பொருத்தமான சிறப்புக்குரிய நேரங்களையும், காலங்களையும் பயன் படுத்திக்கொள்வது.

1. ரமளான் மாதம்.

2. லைலத்துல் கத்ர் இரவு.

3. இரவின் கடைசிப்பகுதி.

4. பர்லான தொழுகைகளின் இறுதிப்பகுதி.

5. பாங்கு இகாமத்துக்கு மத்தியில்.

6. அரஃபா தினத்தில்.

7. ஜும்ஆவடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.

8. கடமையான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது.

9. யுத்த நேரத்தில்.

18. முதலில் தனக்காக பிரார்த்தனை செய்து பின்பு மற்றவர்களுக்காக பிரர்த்திப்பது.

19. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமாக உள்ள திக்ருகளை தேர்ந்தெடுத்து பிரார்த்திப்பது .

உ-ம் அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது, நாம் செய்த நல்ல அமல்களை முன் வைத்து பிரார்த்திப்பது, இன்னும்

لاَاِلَهَ إِلاأَنْتَ سُبْحَانَكَ إِني كُنْتُ مِنَ الظَّالمِيْنَ .

பொருள் : தூய்மையானவனே! நிச்சயமாக எனக்கு நானே அனியாயம் செய்து விட்டேன், வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிரவேறு யாரும் இல்லை.
என்ற திருக்கலிமாவை ஓதி பிரார்த்தனை செய்தல் , யூனுஸ் (அலை) அவர்கள் மீனுடைய வயிற்றில் இருக்கும் போது இந்த வார்த்தைகளைக்கொண்டு பிரார்த்தனை செய்தார்கள் அல்லாஹ் அப்பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான், இன்னும் இதுபோன்ற வார்த்தைகள்.

20. சிறப்புக்குரிய நேரங்களில் பிரார்த்தனை செய்வது.

உ-ம் : சுஜூது செய்யும் போது

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது செய்யும் நேரம்,ஆகவே சுஜூது செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

சுஜூதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் (அதில் கேட்கப்படும் பிரர்த்தனை ஏற்றுக்கொள்ளபடுவதற்கு) தகுதியுள்ளது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

தொழுகையில் சூரத்துல்ஃபாத்திஹா ஓதிமுடிந்ததும் ஆமீன்சொல்லும் போது.
இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள் (மலக்குகளும் ஆமீன் சொல்கிறார்கள்) யாருடைய ஆமீன் மலக்கு மார்களின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. ஆதாரம் : புகாரி

சேவல் கூவும் போது.
சேவல் கூவுவதை கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக்கேளுங்கள், அது மலக்கை காணும்போதுதான் கூவுகின்றது என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

பிரயாணி தன் பிரயாணத்தின் போதும், நோன்பாளி நோன்பு திறக்கும் போதும். ஆதாரம் :- பைஹகி

மற்ற சகோதரருக்காக பிரார்த்திக்கும் போது.

ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாக கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக, இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக எனவும் பிரார்த்திப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

21. பிரார்த்தனையில் எல்லைகடக்காமல் இருக்க வேண்டும்.

(ஆகவே முஃமின்களே!)உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (7-55)

எல்லை கடந்து பிரார்த்தனை செய்வதற்கு சில உதாரணங்கள்

அல்லாஹ் அல்லாத பெயர்களைக்கொண்டு அழைத்துப் பிரார்த்திப்பது.

எல்லை கடந்து சத்தத்தை உயர்த்துவது.

மெட்டெடுத்து பிரார்த்திப்பது, இன்னும் இது போன்றவைகள்.

22. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

விலக்கப்பட்ட உணவு, உடை, பானங்களை உகயோகிப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நன்மையை ஏவாமலும், தீமையை தடுக்காமலும் இருப்பது.
என் உயிர் எந்த இறைவனிடம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக்கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் இறைவன் உங்கள் மீது அவனுடைய வேதனையை அனுப்புவான் பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

இரத்தபந்தங்களின் உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திப்பது.

யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்)அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் அப்படியென்றால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோம் என்றார்!அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள். ஆதாரம் : திர்மிதி

பாவம் மன்னிக்கப்படுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைக்காமல் இருக்க வேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4-48)

அன்புச்சகோதரர்களே! பிரார்த்தனை என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்க வேண்டும், அல்லாஹ்வின் படைப்புகளில் எந்தப்படைப்பிடத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்னும் குர்ஆன் வசனங்களின் நம்பரை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன் அதை குர்ஆனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,

அல் பகரா-186, ஆலு இம்ரான்-135, அல் அஃராஃப்-55, அந்நம்லு-62, அஸ்ஸஜ்தா-16, அல் ஜுமர்-53,அல் முஃமின்-60.

அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியை பின்பற்றி நடப்பதற்கு வாய்ப்பளிப்பானாக.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருவது : உண்ணும் முறை