உன்னவை என்னவை இல்லை என்றேன் நிம்மதி வந்தது
என்னவை உன்னவை இல்லை என்றேன் பகை வந்தது
என்னவை என்னதே என்றேன் தனிமை வந்தது
என்னவை உன்னவை என்றேன் பாசம் வந்தது
எல்லாம் உம்மவை என்றேன் பரிசு வந்தது
உன்னவை உன்னவையே என்றேன் மதிப்பு வந்தது
நம்மவை நம்மவையே என்றேன் ஒற்றுமை வந்தது
எல்லாம் பொதுமை என்றேன் பெருமை வந்தது
உன்னவை என்னவை என்றேன் உரசல் வந்தது
எல்லாம் நம்மவையே என்றேன் போர் வந்தது
எல்லாம் எனக்கே என்றேன் துன்பம் வந்தது
எல்லாம் ஏதுக்கு என்றேன் இன்பம் வந்தது
எல்லாம் இனிமையே என்றேன் இனிமையே வந்தது
மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது ஒழுக்கம் வந்தது
உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன் ஒற்றுமை வந்தது
உடலும் உனதல்ல உலகும் உனதல்ல மருமை வந்தது
எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல ஈமான் வந்தது
இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம் ஞானம் வந்தது
இறத்தல் மட்டும் வந்தால் போதும் இறைவன் பயம் வந்தது
ஆகா, ப்ரமாதம் கலக்கிட்டீங்க.
பதிலளிநீக்கு//இறத்தல் மட்டும் வந்தால் போதும் இறைவன் பயம் வந்தது//
கவிதை நடையில் மறுமை சிந்தனை...! இன்னும் வாரி வழங்குங்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்
பதிலளிநீக்குகவிதை சுப்பர்